Homeமுருகன் ஆலயங்கள்பூம்பாறை முருகன் கோயில்

பூம்பாறை முருகன் கோயில்

பூம்பாறை முருகன் கோயில்

கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்”

இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன்.

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை

1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை,
2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர்

ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உ ருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட….அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

சுமார் 10/12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது கடைசி 12வது வனமான….பழனி.. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும்.

பூம்பாறை முருகன் கோவில்
பூம்பாறை முருகன் கோவில்

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர்

அக்கோவிலை இறைவனிடம் வேண்டி… சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.

பின்னர் மறுபடியும் சீீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார்,

அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியுள்ள… சேர மன்னன் தவத்திற்கு.. பழனி முருகன் திருமண காட்சியளித்து.. சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.

அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார்.

அப்போது ராட்சசி ஒருவள் அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம். ,

இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார்.

பூம்பாறை முருகன் கோவில்
பூம்பாறை முருகன் கோவில்

அவரின் பக்கத்திலேயலே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.

வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து… குழந்தை வடிவம் கொண்டு.. தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்…!!!.

Google Map :

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!