விஷ்ணு துர்க்கை அம்மன்
வரலாறு:
தஞ்சாவூர் மாவட்டம் பாலதள்ளி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
சிறப்பு:
துர்க்கை அம்மனில் பலவிதமான அம்சங்கள் உண்டு. இதில் விஷ்ணு துர்க்கை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். விஷ்ணு துர்க்கையின் வடிவம் விஷ்ணு பகவானின் அம்சத்தில் அமைந்திருக்கும். விஷ்ணுவை போல் விஷ்ணு துர்க்கை ஒரு கையில் சங்குடன் மறுகையில் சக்கரத்துடன் காட்சி தருவாள். விஷ்ணு துர்கைக்கு நாராயணி என்ற மற்றொரு பெயரும் உண்டு.
பரிகாரம்:
இந்த துர்க்கையை, விஷ்ணுவுக்கு உகந்த சனிக் கிழமைகளில் ராகு காலத்தில் ராகுவின் அதிதேவதையான அம்மனுக்கு 9 வாரங்கள் எலுமிச்சை தீபமேற்றி செவ்வரளியால் அர்ச்சனை செய்து ஒன்பது வார முடிவில் எலுமிச்சை மாலை சாற்றியும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட உடல் ரீதியான உபாதைகள் விலகும்.
வழித்தடம்:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி செல்லும் பேருந்து வழித்தடத்தில் உள்ளது
Google Map :