சிருங்கேரி சாரதாதேவி அம்மன்
வரலாறு:
கர்நாடக மாநிலம் மைசூரின் அருகிலே சிக்மகளூர் இடத்தில் சிருங்கேரி சாரதாதேவி பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் சாராதேவி. ஸ்ரீ சக்கரத்தின் மீது ஜெபமாலையை பிடித்தவாறு காட்சியளிக்கிறாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாரதாதேவி வெள்ளித் தேரில் கோவிலில் உலா வருவாள்.
சிறப்பு:
சரஸ்வதி, லட்சுமி, ஈஸ்வரி ஆகிய மூன்று தேவிகளின் ஒரே ரூபமாக, குரு ரூபினியின் வடிவில் உள்ள சாரதாதேவி விளங்குகிறாள்.
ஆதிசங்கரரால், சிருங்கேரி சாரதாதேவி பீடம் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் தீப உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பரிகாரம்:
சாந்தமான பார்வையை கொண்டு தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் சாராதேவியை நாம் தரிசித்தால், நம் வாழ்வில் அமைதி நிலவ அவள் நமக்கு உதவுவாள். சாரதா தேவியை நாம் தொடர்ந்து வழிபட்டுவர, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியும் மன நிம்மதியும் கிடைக்கும்.
வழித்தடம்:
கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில், சிருங்கேரி எனும் ஊரில் சாரதாம்பாள் கோவில் உள்ளது கர்நாடக மாநிலத்தில் முக்கிய அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சிருங்கேரிக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.
Google Map: