மரத்துறை காத்யாயினிஅம்மன்
வரலாறு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மரத்துறையில் காத்யாயினி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பார்வதிதேவிக்கு அளிக்கப்பட்ட மறுபெயர் காத்யாயினி ஆகும். இவள் நவதுர்க்கைகளில் ஆறாவது துர்க்கை ஆவர். மக்களை காப்பதால் காத்யாயினி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. (காத்யாயினி- காத்தாய்+நீ)
சிறப்பு:
நவராத்திரியின் ஆறாவது நாளன்று காத்யாயினி வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் துர்க்கை பூஜை செய்யும் பக்தர்கள் ஆக்ஞாசக்கரத்தை மனதால் உணரும் சக்தியை பெறுவார். உண்மையான பக்தர்களுக்கு தர்மமும், முக்தியும் எளிதில் கூடும். முந்தைய ஜென்மத்தின் பாவங்களை கழிக்க காத்யாயினி அம்மனுக்கு செய்யும் பூஜைகளை விட சிறந்த வழி வேறொன்றுமில்லை. கிருஷ்ணரை மணக்க விரும்பி கோகுலத்து பெண்கள் காத்யாயினி வழிபட்டனர். உண்மையான தியாக உணர்வுடன் தன்னை வழிபடுபவர்களை காத்து காத்து நிற்பாள்.
பரிகாரம்:
நல்ல கணவனை மணக்க விரும்பும் கன்னிப்பெண்கள் காத்யாயினி வழிபடுவது நலம். இவ்வாலயத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் விரதமிருந்து அம்மனை வணங்க பல நன்மைகளைப் பெறலாம்.
வழித்தடம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மரத்துறை என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது .
Google Map :