புதன் தசா புத்தி பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

புதன் தசா புத்தி பலன்கள்

புதன் தசா புதன் புத்தி பலன்கள்

புதன் தசாவில் புதன் புக்தியானது 2வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும். புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், உயர்வான அதிகாரம் பெற்று வாழும் அமைப்பு, மனைவி, பிள்ளைகளால் அனுகூலம் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு, வீடு, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

புதன் பலமிழந்திருந்தால் மனைவி, பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, கலகம், ஞாபக மறதி, ஊர்விட்டு ஊர் சுற்றித் திரியும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசம், நேரத்திற்கு சாப்பிடமுடியாத நிலை, நரம்பு தளர்ச்சி போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். உறவினர்களின் ஆதரவும் குறையும்.

புதன் தசா- கேது புத்தி பலன்கள்

புதன் தசாவில் கேது புக்தியானது 11 மாதம், 27 நாட்கள் நடைபெறும்
கேது பலம் பெற்று அமைந்து, நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் வண்டி, வாகன யோகம், வியாபாரத்தில் மேன்மை, மனைவி ,பிள்ளைகளால் மகிழ்ச்சி, பூமி,மனை,வாங்கும் யோகம், தாராள தன வரவு, பெண்களால் அனுகூலம், நவீன பொருட்கள் சேரும் யோகம், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, தெய்வ தரிசனங்களுக்காக பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கலகம், அடிமை வாழ்க்கை, அதிக பயம், வண்டி வாகனங்களால் நஷ்டம், விரயம், பூர்வீக சொத்துக்களால் பிரச்சனை, பிரிவு, உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றம், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை உண்டாகும்.

புதன் தசா- சுக்கிர புத்தி பலன்கள்

புதன் தசாவில் சுக்கிர புக்தியானது 2வருடம் 10 மாதம் நடைபெறும் சுக்கிரன் பலமாக அமைந்திருந்தால் தான, தர்மங்கள் செய்யும் வாய்ப்பு, வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம், புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம், அதிகாரமுள்ள பதவிகளை அடையும் யோகம், ஊதிய உயர்வுகள், நண்பர்களால் உதவி, முதலாளிகள் இடையே ஒற்றுமை, பெண்களால் அனுகூலம், ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு, மர்மஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, குடும்பத்தில் வறுமை, மனைவி, பிள்ளைகளுக்கு கண்டம், எடுக்கும் முயற்சிகளில் தடை, சுக வாழ்வு பாதிப்பு, தேவையற்ற பெண் சேர்க்கை, வீண் விரயங்கள் உண்டாகும்.

தசா புத்தி பலன்கள்

புதன் தசா – சூரிய புத்தி பலன்கள்

புதன் திசையில் சூரிய புக்தியானது 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசியலில் பெயர், புகழ், கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி, பகைவரை வெற்றி கொள்ள கூடிய வலிமை, வல்லமை, தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம், மனைவி, பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு வழியில் ஆதாயம் கிட்டும்.

சூரியன் பலமிழந்திருந்தால் பகைவர்களால் வீன் பிரச்சனை, விரோதம், தேவையற்ற வம்பு வழக்குகள், தன விரயம், வண்டி வாகன விபத்து, தந்தைக்கு தோஷம், தந்தை வழியில் அனுகூலமற்ற நிலை, உறவினர்களிடம் விரோதம், மனைவிமார், பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு, உஷ்ணக் கோளாறுகள்,கண்களில் பாதிப்பு, அரசு வழியில் தொல்லை உண்டாகும்.

புதன் தசா – சந்திர புத்தி பலன்கள்

புதன் தசையில் சந்திர புத்தியானது 1வருடம்5 மாதங்கள் நடைபெறும் சந்திரன் பலம் பெற்றிருந்தால் அனுகூலமான பயணங்கள், வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம். பண வரவுகளில் மகிழ்ச்சி, எடுக்கும் காரியங்களில் வெற்றி, அரசு வழியில் அனுகூலம், ஆடை, ஆபரண சேர்க்கை, பூமி, மனை யோகம், உயர் தரமான உணவுகளை உண்ணும் யோகம், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

சந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் தேவையற்ற அலைச்சல், ஜலத்தால் கண்டம், மனதில் குழப்பமும் நிம்மதியற்ற நிலை, உடல் நிலையில் பாதிப்பு, மனைவி மற்றும் தாய்க்கு தோஷம், வம்பு வழக்குகளில் தோல்வி , எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும்.

புதன் தசா – செவ்வாய் புத்தி பலன்கள்

புதன் தசையில் செவ்வாய் புத்தியானது 11மாதம் 27 நாட்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை யோகம், வண்டி, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூலம், நல்ல நிர்வாகத் திறன், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உடல் நலத்தில் சிறப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றலும் உண்டாகும்.

செவ்வாய் பலமிழந்திருந்தால் ரத்த சம்பந்தமான பாதிப்புகள், உடலில் காயம் படும் அமைப்பு, உடன்பிறப்புகள் இடையே வீண் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, காரியத்தடை, எதிர்பாராத விபத்தால் பாதிப்பு உண்டாகும்.

தசா புத்தி பலன்கள்

புதன் தசா – ராகு புத்தி பலன்கள்

புதன் தசாவில் ராகு புத்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். ராகு பலம் பெற்று அமைந்து ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் மேன்மை, உயர் பதவிகளை வகிக்கும் யோகம், புதுமையான விஷயங்களில் ஈடுபாடு, வீடு, மனை, ஆடை, ஆபரண சேர்க்கை, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், பகைவரை வீழ்த்தும் பலமுண்டாகும்.

ராகு பலம் இழந்து ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் தீய நட்புகளால் பிரச்சனை, உணவே விஷமாக மாறக்கூடிய நிலை, விஷ பூச்சிகளால் ஆபத்து, கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு, மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள், தற்கொலை எண்ணம், இடம் விட்டு இடம் அலையும் அவல நிலை, பகைவர்களால் தொல்லை போன்றவை உண்டாகும்.

புதன் தசா – குரு புத்தி பலன்கள்

புதன் தசாவில் குரு புக்தியானது 2வருடம் 3மாதம் 6 நாட்கள் நடைபெறும். குரு பலம் பெற்று இருந்தால் தாராள தன வரவு, குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை, ஆபரண சேர்க்கை, பூமி, மனை, வண்டி, வாகனங்கள் சேரும் யோகம், குடும்பத்தில் சுபிட்சம், புத்திர வழியில் பூரிப்பு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பூர்வீக சொத்துக்களால் லாபம், பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

குரு பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு, உறவினர்களிடையே பகை, பூமி மனை, வண்டி, வாகனம் மூலம் வீண் செலவுகள், பிராமணர்களின் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, குடும்பத்தில் பிரச்சனை, சுபகாரியங்களுக்கு தடை உண்டாகும்.

புதன் தசா – சனி புத்தி பலன்கள்

புதன் தசையில் சனி புக்தியானது 2 வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் தொழில், வியாபாரம் மூலம் லாபம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் அனுகூலம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பும், தனதான்ய விருத்தி, ஆடை, ஆபரணம் சேரும் அமைப்பு, தெய்வபக்தி உண்டாகும் அமைப்பு, தாய், தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

சனி பலமிழந்து இருந்தால் விபத்துக்களை சந்திக்கும் நிலை, வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வாழும் நிலை, உறவினர்களிடம் விரோதம், அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, திருமணத்தடை, வீண்பழி மற்றும் வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை, எடுக்கும் காரியங்களில் தோல்வி போன்ற சாதகமற்ற நிலை உண்டாகும்.


புதனுக்குரிய பரிகாரங்கள்:

புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபாடு செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது, சுதர்சன யந்திரம் வைத்து வழிபடுவது, பச்சை பயிறு , பச்சை நிற ஆடை, நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை படிக்கும் பிள்ளைகளுக்கு தானம் அளிப்பது நல்லது. மரகதக் கல் மோதிரத்தை அணியலாம்.

Leave a Comment

error: Content is protected !!