Homeதசா புத்தி பலன்கள்ராகு தசா புத்தி பரிகாரங்கள்

ராகு தசா புத்தி பரிகாரங்கள்

ராகு தசா

ராகு தசை ஆண்டுகள் 18 வருடம் ராகு என்பது பாம்பு சம்பந்தம் உடையது. எனவே ராகு தசை ஆரம்பித்த உடன் ஜாதகர்கள் கிளி பிடித்து போய்விடுகிறார்கள் ராகு தசை நடக்கும் போது பெரும்பான்மையான ஜாதகர்களுக்கு பொது வெளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது போல் வாழ்க்கையின் போக்கு மாறி விடுகிறது. ராகு பகவான் தான் அமர்ந்த இடம், வாங்கிய சாரம் ஆகியவற்றின் வழியே ஜாதகர்களை வச்சு செஞ்சு விடுகிறார்.

ராகு தசை நடக்கும் போது இந்த நாள் தான் பரிகாரம் செய்யுங்கள் என்று கூற முடியாது உங்களுக்கு என்றைக்கு எந்த நேரத்தில் முடிகிறதோ முடிந்த மட்டும் பரிகாரம் செய்யுங்கள்.

 ராகு திசை-ராகு புத்தி (2 வருடம் 8 மாதம் 12 நாட்கள்)

பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய அன்பர்களுக்கு கருப்பு உளுந்து வாங்கி கொடுங்கள்.

ராகு திசை-குரு புத்தி (2 வருடம் 4 மாதம் 26 நாட்கள்)

பகல் 1:30 மணிமுதல் 3:00 மணிக்குள் மஞ்சள் ,சமையலுக்கான மஞ்சள் பொடி, பூசும் மஞ்சள் பொடி, பூஜை மஞ்சள் பொடி, என முடிந்ததை வாங்கிக் கொடுக்கவும்.

 ராகு தசை-சனி புத்தி (2 வருடம் 10 மாதம் 6 நாட்கள்)

காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நெல்லிக்காய் அல்லது கடுகு அல்லது வாங்கி தானம் கொடுக்கவும். 

ராகு திசை-புதன் புத்தி ( 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள்)

பகல் 12 மணி முதல் 1 30 மணிக்கு குருவி, கோழி போன்ற பறவை இனங்களுக்கு கேழ்வரகு அரிசி நோய் போன்றவற்றை தூவி விடுங்கள்.

 ராகுதிசை-கேதுபுத்தி (1 வருடம் 18 நாட்கள்)

  முடிந்த போதெல்லாம் சாலையோர நாய்களுக்கு உணவு கொடுக்கவும் 

ராகு தசை-சுக்கிர புத்தி(3வருடம்) 

காலை 10:30 மணி முதல் 12:00 மணிக்குள் எலுமிச்சம்பழ சாதம் அல்லது எலுமிச்சை பானகம், சர்பத் கொடுக்கவும். சிறிய பெண் குழந்தைகளுக்கு நன்கு இனிப்பான தின்பண்டங்கள் கொடுக்கவும்

 ராகு திசை-சூரிய புத்தி (10மாதம் 24 நாட்கள்)

மாலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் பிற இன மத நபர்களுக்கு மின்சாரப் பல்பு அல்லது ஒரு டஜன் தீப்பெட்டி வாங்கி கொடுக்கவும் 

ராகு திசை-சந்திர புத்தி (1வருடம்6மாதம்)

காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் அல்லது முடிந்த நேரத்தில் பால் பாக்கெட் வாங்கி கொடுக்கவும் 

ராகு திசை-செவ்வாய் புத்தி(1 வருடம் 18 நாட்கள்)

மாலை 3 மணி முதல் 4:30மணிக்குள் ஏதாவது இரும்பு பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரம் வாங்கிக் கொடுக்கவும். அதில் உளுத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு சிறிது போட்டு கொடுக்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!