காரைக்குடி கொப்புடை அம்மன்
வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சியில் கொப்புடை அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் மிகுந்த அடர்ந்த வனப் பகுதியாக இருந்ததால் இந்த ஊருக்கு காரைக்குடி என பெயர் வந்தது என்பது வரலாறு.
சிறப்பு
இக்கோவிலின் காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமி குதிரையின் மீது காட்சியளிக்கிறார். திருமண வரம் பெற, குழந்தைப்பேறு கிட்ட, விவசாயத்தில் செழித்து வளர, வணிகத்தில் சிறந்து விளங்க மக்கள் இந்த அம்மனை வழிபடுகின்றனர்.
பரிகாரம்
சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை தொடங்கி 10 நாட்கள் செவ்வாய் திருவிழா நடைபெறும். இந்த நாட்களிலும் மேலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபடுவது சிறப்பு. நினைத்த காரியம் கை கூடினால் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கு வஸ்திரங்களும் அளிப்பர். கிழக்கு பார்த்து அருள்பாலிக்கும் இந்த அம்மன் பக்தர்களுக்கு வளர்ச்சி, தைரியம் ஆகியவற்றை அளிக்கிறாள்.
வழித்தடம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இத்தலம் அமைந்துள்ளது. காரைக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
Google Map :