சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்

உடல் காரகனும் இரவு மாதா காரகனுமான சந்திரன் தான் சூரியன் முதல் கேது வரை கிரகங்களின் பலனை வாங்கி பூமியில் வாழும் நமக்கு தருபவர் ஆவார்.இதனால் தாள் சந்திரனை நாம் பிரதானமாக எடுத்துக்கொண்டு பார்க்கிறோம்.

சந்திரன் தான் மனிதனின் உடலை பாதுகாப்பவர் உடலுக்கு அதிகாரம் பெற்றவர்.இவர்தான் மனிதனின் உடல் பெரும் சுகதுக்கங்களுக்கு சொந்தக்காரர் ஆகவேதான் இவரை மையாகக் கொண்டு நாம் கோச்சார பலனை அறிகிறோம்.

ஒருவரின் ஜாதகரீதியாக சந்திரன் பலம் பெற்று நல்ல கிரகங்களின் பார்வை சேர்க்கை பெற்று நல்ல இடங்களில் இருந்து விட்டால் சொத்து – வசதி இல்லாவிட்டாலும் இவர் உடல் சகல சுகத்தையும் அனுபவிக்கிறது . சந்திரன் மட்டும் கெட்டு விட்டால் எவ்வளவு வசதி இருப்பினும் இவர் உடலால் எந்த வித சுகத்தையும் பெற முடியாதவராகி விடுகிறார்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்கினம் அல்லது லக்கினம் நின்ற நட்சத்திராதிபதி 4-9க்குரிய சுக பாக்கியாதிபதி இருந்து விட்டால் ஜாதகரின் உடலால் பெறும் சுகத்தை இழந்து விடும். மனக்குழப்பம் விரக்தி ஏற்பட்டுவிடும்.எல்லாம் இருந்தும் என்ன பயன் என்ற சூழ்நிலை உருவாகும்.

சந்திரன் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவாதிபதி சந்திரனின் எதிரிடை நட்சத்திரத்தை பெற்று இருப்பின் அந்த பாவாதிபதிக்கு சந்திரன் மூலம் கிடைக்கும் பலன்கள் கிடைக்காது.

சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்

சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர அட்டவணையை பார்க்க இங்கே சொடுக்கவும்

A. இதன் பலன்கள்: தொழில் தடை,காரிய நாசம் , விபரீதபலன் எதிர்பாராத சம்பவங்கள், மனபயம் , உடல் பீதி.

B. இதன் பலன்கள் : நல்லது போல் வந்து கெடுதல் விலைதைல், வாக்கு வாதங்கள், வீண்மனக்கசப்புகள், அலைச்சல், உடல் பலகீனம் , வாக்குவாதத்தால் பாதிப்பு.

C. இதன் பலன்கள் : மன பயம், பிரிவினை, பேதமான எண்ணங்கள் , பிறர் சுமையை ஏற்றுக் கொள்வது,குடும்ப பாரம் , குடும்பத்திற்காக உழைத்து நற்பெயர் இல்லாமல் வேதனைபடுதல்.

D. இதன் பலன்கள் : தகாதவைகளை செயல்படுத்தி ஆபத்தை தேடிக்கொள்ளுதல் , தீராத நோய் அல்லது சத்துரு தொல்லைகளால் பாதிப்பு வீண் அலைச்சல் செலவீனம்.

E. இதன் பலன்கள் : விபத்து காயம் , அடிபடுதல் , உடல் பாதிப்பால் ஆயுள் சிகிச்சை , வீணான மன பயங்கள் போட்டி பொறாமை எதிர்ப்புகளால் வரும் பயம்.

F. இதன் பலன்கள்:எக்காரியமும் செயல்படுத்தமுடியாத நிலை . காரிய தடை பிறர் தலையிட்டால் வரும் ஆபத்து மனக்குழப்பம் , தாய் வர்க்கத்தாரால் ஏற்படும் தொல்லைகள்.

G. இதன் பலன்கள் : எந்த விஷயமும் நம்மை விட்டு விலகிப் போகும் சூழ்நிலை , தாய் வகையினரால் ஏற்படும் விரோதம் மனக்கசப்பு, கால்நடைகளால் வரும் தொல்லை , தீராத மனப்போராட்டம் எதிர்பாராத பயம் ஆபத்துக்கள்.

A முதல் G வரை சொல்லப்பட்ட பலன்களை சந்திரன் தசா புத்தி காலங்களிலும் , ரோகிணி , அஸ்தம் , திருவோண நட்சத்திரம் வரும் நாட்களிலும் திங்கட்கிழமைகளிலும் சந்திர ஓரை வரும் நேரங்களிலும் நடக்கும்.

Leave a Comment

error: Content is protected !!