ஜோதிட விதிகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ஜோதிட விதிகள்

  • கிரகம் எந்த சாரத்தில் இருந்தபோதும் அக்கிரகம் யாருடைய வீட்டில் அமைந்துள்ளதோ அக்கிரகத்தின் குணம் தான் பிரதானமாக இருக்கும்.
  • ஜனன லக்னம் எதுவாக இருந்தாலும் ஜனன லக்னாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் லக்னம், சூரியன், சந்திரன் இருப்பதும். 1, 5, 9-ல் சூரியன் சந்திரன் நின்ற வீட்டதிபதி இருப்பது மிகுந்த சிறப்பு.
  • லக்னாதிபதி நின்ற இடத்திற்கு 1,4, 7,10 ஆகிய இடங்களில் லக்னம், சூரியன், சந்திரன் இருப்பதும். 1,5,9 சூரிய சந்திரன் நின்ற வீட்டதிபதி இருப்பதும் மிகுந்த சிறப்பு.
  • லக்னாதிபதி நின்ற இடத்திற்கு 1,4,5,7,10ல் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதக பலத்தை காட்டும்.
  • லக்னாதிபதிக்கு 6, 8, 12ல் அதிக கிரகங்கள் வரக்கூடாது.
  • தனித்து நிற்கும் எந்த கிரகமும் பலன்களை தர முடியாது. கிரகங்களின் இணைவின் மூலமே பலன்களை தரும்.
  • ஒருவரின் லக்னம் நன்கு செயல்பட வேண்டுமானால் நான்காம் பாவாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதே போல் எந்த ஒரு பாவமும் நன்கு செயல்பட வேண்டும் என்றால் அந்த பாவத்தின் நான்காம் பாவாதிபதி நன்றாக இருக்கவேண்டும்.
  • சூரியன் உச்சியில் வருகின்ற சமயம் அபிஜித் முகூர்த்தம் முக்கியமான தோஷங்களை இல்லாமல் செய்கிறது.
  • சூரியன் உதயமும் அஸ்தமனமும் ஆகும் வேளை கோதூளி முகூர்த்தம் ஆகும். இக்காலத்தில் செய்யும் சகல காரியங்களும் சித்தியாகும். இதற்கு திதி- -வாரம்-லக்னம்-விஷ்டிரத்தை- கிரகதோஷம் ஒன்றுமே கிடையாது.
  • வக்கிரம் பெற்ற கிரகம் மற்றொரு வக்ரம் பெற்ற கிரகத்தோடு கூடியிருக்கும் போது மிக அதிக அளவு பலம் பெறுகிறது. வக்கிரம் பெற்ற கிரகமானது தன்னுடைய உச்ச ராசியில் இருக்கும் போது மத்திம பலன்;சொந்த வீட்டில் பலம் இல்லை; நீச்ச ராசியில் இருப்பின் பலம் அதிகம்.
  • பாப கிரகம் வக்கிரம் பெற்றால் சுப பலனும், சுப கிரகம் வக்கிரம் பெற்றால் பாப பலனும் ஏற்படுகிறது.
ஜோதிட விதிகள்
  • குரு பாவ கிரகங்களை கெடுதி செய்யும் கிரகங்களை பார்ப்பது நல்ல யோகத்தை தரும் ஆதிபத்தியம் கொண்ட எந்த கிரகத்தையும் குரு நோக்கிடல் கூடாது.
  • சனி நின்ற வீட்டிற்கு 9, 10-ஆம் பாவாதிபதி அல்லது அப்பாவத்தில் உள்ளவர்கள் சனிக்கு நட்பு, நல்ல ஆதிபத்தியம் பெற்றவராகவும் இருந்துவிட்டால், சனி பார்வையும் அவர் தசா புத்தியும் நல்ல யோகத்தை செய்துவிடுகிறது.
  • சூரியன் 1, 3 ,6, 10, 11ல் இருப்பது நல்லது. மேஷம- ரிஷபம்-கடகம்-சிம்மம்-விருச்சிகம்-தனுசு போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
  • 1, 2 ,4 ,5, 7,9,10ல் சந்திரன் இருப்பது நல்லது. மேஷம்-மிதுனம்-கடகம்-கன்னி-துலாம்- மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்
  • வளர்பிறை சந்திரன் 3,7,5,11-ல் இருப்பது வைத்தியன் அவதற்கு சிறப்பான நிலை.
  • 1,6,10,11 இல் செவ்வாய் இருப்பது சிறப்பு. மேஷம்-கடகம்-சிம்மம்-விருச்சிகம்-தனுசு-மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
  • 1,4,5,7,9,10ல் புதன் இருப்பது சிறப்பு. ரிஷபம்- மிதுனம்-சிம்மம்-கன்னி-துலாம்- மகரம்-கும்பம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்
  • 4,7,10,5,9,2,11ல் குரு இருப்பது நல்லது. மேஷம்-கடகம்-விருச்சிகம்-கும்பம்-மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
  • 1,4,7,5,9,10-ல் சுக்கிரன் இருப்பது சிறப்பு. ரிஷபம்-மிதுனம்-கன்னி-துலாம்-மகரம் கும்பம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
  • 3, 6,9, 11 இல் சனி இருப்பது நல்லது. மிதுனம்-கன்னி-துலாம்-விருச்சிகம்-தனுசு -மகரம்-கும்பம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்
  • 1 ,4 ,9 ,11 இல் கேது இருப்பது நல்லது. மேஷம்-மிதுனம்-கடகம்-துலாம்-விருச்சிகம் -மகரம்-மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
  • 1 4 7 பத்தில் ராகு இருப்பது நல்லது கேது அமர்ந்த வீட்டின் அதிபதியை பொறுத்து யோகம் நடக்கும்

Leave a Comment

error: Content is protected !!