ஜோதிடகுறிப்புகள்-பகுதி-13
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
ஜோதிடகுறிப்புகள்-பகுதி-13
- சூரி , சந் , குரு , கேந்திர கோண அமைப்பு மிக நல்லது. இதில் யாராவது இருவர் சேர்ந்து இவர்களுக்கு 4,5,7,9,10 – ல் ஒருவர் இருப்பது விசேஷம்.
- குரு , சந் , 1,4,7,10 – ல் இருப்பது குரு சந்திர யோகம் , கஜ கேசரி யோகமாகும் . இந்த யோகம் நன்கு செயல்பட வேண்டு மானால் இவர்களுக்கு துணையாக சூரி , செ , சனி போன்றவர்கள் இருந்தேயாக வேண்டும்.
- சூரியனுக்கு 1 , 3 , 4 , 5 , 6 , 7 , 9 , 10 , 11 என்ற நிலை ஏற்படும் போதும்.குருவிற்கு 1,4,7,10 என்ற நிலை ஏற்படும்போதும்.இவர்களோடு செவ்வாய்-சனி தொடர்பு எப்படியும் இருக்கும்.
- சூரியனுக்கு 1,4,7,10 – ல் சந்திரன் அமையும்போது அல்லது 5. 9. என்ற நிலை ஏற்படும்போது , செவ்வாய்க்கோ , சூரியனுக்கோ , சந்திரனுக்கோ , நிச்சயமாக குரு பார்வை கிடைக்க வேண்டும்.
- சூரியனுக்கு 3,11 – ல் சந்திரன் அமைந்தபோதும் சூரியனுக்கோ – சந்திரனுக்கோ – செவ்வாய்க்கோ குரு பார்வை கிடைக்க வேண்டும்.
- குரு,சூரி , சந் போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் 4 , 5 , 7 , 9.10 ஆக இருந்து , சோபனம் . அதிகண்டம் , சூலம் , அர்ஷனம் , வஜ்ரம் , வரியான்,சுபம், சுப்பிரம்மம், வைதிருநதி , நாமயோகங்கள் ஒன்றில் பிறந்தால் ஜாதகர் சிறப்பான பலன்கள் அடைவது உறுதி.
- குருவிற்கு 1 , 4 , 5 , 7 , 9 , 10 – ல் சந்திரன் அமைந்த கிரக நிலை உள்ள ஜாதகங்களுக்கு , சூரியனுக்கு சந்திரன் அல்லது செவ்வாய் , 1 , 4 , 5 , 7 , 9. 10 என்ற நிலை நிச்சயமாய் இருக்க வேண்டும் . அத்தோடு செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றும் இருந்திடல் வேண்டும் . இப்படி அமைந்த நிலையானது ஜாதகரை நிச்சயமாய் உயர்த்தும்.
- ஜாதகத்தில் எந்த ஒரு பாவமும் பலன் பெற்று சிறப்படைய வேண்டுமானால் அந்த பாவத்தின் 5-9 ஆம் பாவாதிபதிகள் கெடக் கூடாது.
- 5-9 ஆம் பாவத்தை சுப தன்மை பெற்ற நல்ல ஆதி பத்தியம் உள்ள கிரகம் பார்க்க வேண்டும் அல்லது அந்த இடத்தில் இருக்க வேண்டும்.
- 5-9 ஆம் பாவத்தை அல்லது அந்த பாவாதிபதியை குரு சுக்கிரன் புதன் வளர்பிறை சந்திரன் பார்த்து இருக்கவேண்டும்.
- லக்கினத்தின் 5-9 ஆம் இடத்தை சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் அல்லது குரு – சுக் – புதன் – சந் பார்ப்பது அந்த ஜாதகத்தை சிறப்படைய செய்யும்.
- 5-9 ஆம் இடத்தில் கிரகங்கள் இருப்பதைவிட பார்ப்பது நல்லது .
- நான்காம் இடத்தின் திரிகோண ஸ்தானமான 8-12 ஆம் இடத்தை ஐந்தாம் இடத்தின் திரிகோண ஸ்தானமான 1-9 ஆம் இடத்தை ஒன்பதாம் இடத்தின் திரிகோண ஸ்தான மான 1-5 ஆம் இடத்தை பத்தாம் இடத்தின் திரிகோண ஸ்தானமான 2-6 ஆம் இடத்தை சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களே அல்லது குரு – சுக் – புதன் – வளர்பிறை சந்திரனே பார்த்து இருப்பின் அந்த ஜாதகர் கல்வி துறையில் பட்ட படிப்பு களில் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள் . கெளரவமான தகுதிகள் வசதி வாய்ப்புக்கள் அவரவர் பெற்ற பூர்வ புண்ணியத்திற்கு தக்கபடி உயர்ந்த நிலையில் காணப்படுவர் . இவ்வுயர்வானது கிரகங்கள் பெற்ற சாரத்தை பொறுத்து மாறலாம் .
- ஆறாம் இடத்தின் திரிகோண ஸ்தானமான 10 ஆம்இடத்தை சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களோ அல்ல குரு – சந் – புதன் வளர்பிறை சந்திரனோ பார்த்து இருப்பி அந்த ஜாதகர் நோய் – கடன் சத்துரு என்ற தொல்லைகளில் அகப்பட்டு கொள்வது உறுதியாகும்.2 ஆம் இடத்த பார்ப்பது அவ்வளவு பாதிப்பு இல்லை.
- 2 ஆம் இடத்தின் திரிகோண ஸ்தானமான 6 ஆம் இடத்தையும் , 10 ஆம் இடத்தையும் குருவும் யோகாதிபத்தியம் பெற்ற கிரகமும் தன் விசேஷ பார்வையால் பார்ப்பது சிறப்பைே தருகிறது.தொழிலை சிறப்படையசெய்கிறது. ஏதோ ஒரு வகையில் பொருளாதார பலம் இருந்துகொண்டே உள்ளது . நல்ல அம்சங்களை பெற்று இருப்பின் வசதி பெறுகிறது பொருளாதாரம் பலப்படுகிறது.
- 3 ஆம் இடத்தின் திரிகோணஸ்தானமான 7 ஆம் இடத்தை யும் . 11 ஆம் இடத்தையும் குருவும் யோகாதிபத்தியம் பெற்ற கிரகமும் தன் விசேஷ பார்வையால் பார்ப்பது சிறப்பையே தருகிறது . கடின உழைப்பால் தன் திறமை சாதுர்யத்தால் தெய்வ அருளால் பாரம்பர்ய செல்வாக்கால் ஜாதகர் தனது வாழ்க்கையில் முன்னேறி தனது வசதிகளை பெருக்கிக் கொண்டு தனக்கொரு தனித்த புகழைத் தேடிக் கொண்டு மக்களிடையே பிரகாசிக்கின்றனர்.பல விருதுகள் உயர் பதவிகள் கிடைத்து விடுவதை காணலாம் . கிரகங்களை பெற்ற நட்சத்திரத்தை பொறுத்து உயர்வு இருக்கும்.