கிரக கூட்டு பலன்கள் -சூரியன்
சூரியன்+சந்திரன்:
சூரியன் , சந்திரன் கூடியிருந்தால் , அந்த ஜாதகர்க்கு அநேக பிள்ளைகள் உண்டாகும். பிதுர் , மாதுர் துக்கமும் மனகஷ்டமும் உண்டாகும்
விளக்கம் :
சூரியன் , சந்திரன் கூடுவது தோஷமாகும் ; அதே சமயம் , இத்த அமைப்பு அமாவாசை யோகத்தைக் கொடுக்கும் , லக்னத்தில் பாவிகள் இருந்தால் , கேத்திர தோஷமாகும் ; அதே சமயம் . லக்னம் என்பது மிகவும் பலமான ஸ்தானமாகும் . லக்னத்தில் இருக்கும் சூரியன் , சந்திரன் இருவரும் மிக்ஸரான ( சுபம் , பாவம் கலந்து ) பலன்களை தருவார்கள் எனலாம்.
சூரியன் பிதுர்காரகன் , சந்திரன் மாதுர்காரகன் என்பதால் , பிதுர் மாதுர் துக்கம் உண்டாகும் எனக் கூறப்பட்டது! மேலும் , லக்ன பலத்தால் புத்திர விருத்தியுண்டாகுமென அறிக..
சூரியன்+செவ்வாய்:
லக்னத்தில் சூரியன் , செவ்வாய் இருந்தால் , பிதுர் கஷ்டம் , அலைச்சல் , ஈள புத்தி , கலக புத்தி உண்டாகும்.
விளக்கம் :
சூரியன் , செவ்வாய் இருவரும் பாவிகள் வீண் அலைச்சல் , கலகம் , கோபக் குணத்தைக் கொடுக்கக் கூடியவர்கள் : எனவே , முனிவர் கூறியது சரியானதே !
சூரியன் +புதன்:
வாகன ஈனம் , துஷ்டர் சேர்த்கை , மந்த புத்தி , உடல் பலவீனம் , துஷ்ட நடத்தையுள்ளவர் , உறவினர்களால் தைவிடபட்டவர்.
விளக்கம் :
புதன் சுபர் சூரியன் பாவி / இவர்களுக்கிடையில் சுபம் பெரிதா , பாவம் பெரிதா என்றொரு யுத்தம் நடைபெறும் . இதன் விளைவாக , துஷ்ட பலன்கள் ஏற்படும் என்பது முனிவரது கருத்து !
ஆனால் , லக்னத்தில் சூரியன் , புதன் இருந்தால் இராஜயோக மாகும் . எனவே , பாவ பலன் நீங்கி , சுப பலன்கள் ஏற்படுமென அறிக.
சூரியன்+ குரு :
கோபமுடையவர் . மந்த புத்தி , துஷ்ட நடத்தையுள்ளவர் . செய்ந்நன்றி மறந்தவர் ; திருட்டுத்தனம் , துவேஷ குணம் நிறைந்தவர் .
விளக்கம் :
இந்த இருவருக்கும் இடையில் ஏற்படும் சுபர் , பாவர் போட்டியினால் தீய பலன் ஏற்படும் என்பது முளிவரது வாதம் . இருப்பினும் , இருவரும் நண்பர்கள் லக்ன பலம் வேறு ! எனவே , சிறப்பான நற்பலன்கள் ஏற்பட இடமுண்டு !
சூரியன்+சுக்கிரன்:
பண்டிதர்ளை நிந்திப்பவர் ; அற்ப புத்திர யோகம் உள்ளவர் ; கொடூர சிந்தை கொண்டவர் ; கோபமுள்ளவர் . ஆசையில்லாதவர் ; நோயினால் கஷ்டப்படுபவர் ; அந்நிய மனிதரால் கஷ்டத்தை அனுபவிப்பவர்
விளக்கம் :
இருவரும் பகைவர்கள் ; மேலும் , இருவர்க்கும் இடையில் சுபர் பாவர் என்ற போட்டி வேறு ! எனவே , இந்த அமைப்பால் மேற்கூறியவாறு தீயபலன்கள் ஏற்படும் என்பது உண்மையே ! ஆனால் இவர்கள் ஆட்சி , உச்சமாய் இருந்தால், தோஷம் விலகி விடும்.
சூரியன்+ சனி :
இந்த அமைப்புள்ள ஜாதகர் முட்டாளாகவும் , வியாதியுள்ளவர்களாகவும் , தன்னைச் சேர்ந்தவர்களால் கைவிடப்பட்டவர்களுமாக் இருப்பர் . நற்குணமில்லாதவர்கள் எனலாம் .
விளக்கம் :
சூரியனும் , சனியும் பாவிகள் ; இருவரும் கடும் பகைவர்கள் , மேலும் , கூத்தாடி யோக நிலையில் உள்ளார்கள் . எனவே , இவர்கள் முனிவர் கூறுவது போல் தீய பலன்களையே மித மிஞ்சி செய் வார்களெனலாம் . ஆட்சி , உச்சமாக இருந்தால் , துஷ்ட பலன்களிலிருந்து சொற்ப நிவாரணம் கிடைக்குமெனலாம்.
-கர்க மகரிஷி