கிரக கூட்டு பலன்கள்-செவ்வாய்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்னத்தில் செவ்வாயுடன் இணைந்த பிற கிரகங்களின் பலன்கள்

செவ்வாய்+புதன்:

அந்நியர்களால் ஏமாற்றப்படக்கூடியவர் ; வார்த்தை ஜாலம் நிறைந்தவர் ; நீண்ட காலம் ஆசைப்படுபவர் ; துஷ்ட எண்ணம் கொண்டவர்.

விளக்கம் :

செவ்வாய் ஒரு பாவி ; புதன் ஒரு சுபர் ; இவர்களுக்கிடையில் சுபர் , பாவர் போட்டி ஏற்பட்டு , தீய பலன்கள் உண்டாகும் என்பது முனிவரது வாதம் ! ஆனால் , இவர்கள் ஆட்சி உச்சமாக இருந்தால் , ஷை தோஷம் விலக வாய்ப்பு உண்டு.

செவ்வாய் +குரு :

குரூர சுபாவம் கொண்டவர் ; அற்ப புத்திர யோகம் உள்ளவர் . மக்களுக்குச் சந்தோஷத்தை அளிப்பவர். துஷ்ட காரியத்தில் ஆசையுள்ளவர்.

விளக்கம் :

இவர்களும் சுபர் , பாவர் போட்டியினால் தீமை செய்வர் என்பது முனிவரது கணிப்பு ! ஆனால் , இவர்கள் இருவரும் நண்பர்கள் . லக்ன பலம் வேறு!எனவே இவர்கள் நன்மை செய்ய இடமுண்டு.ஆட்சி உச்சமாக இருந்தால் இன்னும் சுப பலன்களை எதிர்பாக்க முடியும்.

செவ்வாய்+ சுக்கிரன் :

கபம் உடையவர் ; வீணாக கஷ்டப்படுபவர் ; ஏமாற்றும் எண்ணம் கொண்டவர் ; செய்ந்நன்றி மறக்கக் கூடியவர் ; வீர , தீரம் , ஆற்றல் நிறைந்தவர்.அப ஜெயம் உடையவர் .

விளக்கம் :

செவ்வாயுடன் , சுபராகிய சுக்கிரன் கூடியுள்ளதால் , சுக்கிரன் பாவியாக மாறி விடுவார் . இதன் விளைவாக , இவர்கள் தீமையை செய்வார்களென முனிவர் கூறுகிறார் . ஆனால் , செவ்வாய்க்குக் கேந்திரத்தில் சுக்கிரன் இருப்பது பிருகு மங்கள யோகமாகும். லக்ன பலம் வேறு உள்ளது . எனவே , இந்த மாதிரி அமைப்பு நன்மையை செய்ய முடியும் என்க . ஆட்சி , உச்சமாக இருந்தால் , விசேஷமான சுபபலன்கள் உண்டாகும்..

செவ்வாய்+சனி :

பாவம் செய்வதில் ஆர்வம் உள்ளவர் . அன்னியர்களிடம் வீண் தகராறு இழுப்பவர் ; கடுமையாக பேசக்கூடியவர் ; அதிக கோபக்காரர் எனலாம் !

விளக்கம் :

செவ்வாயும் , சனியும் கொடிய பகைவர்கள் . முழுப்பாவிகள் . எனவே , இவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வர்க்கமே நாசமாய் போகுமென்பது அகஸ்தியர் வாக்கு.எனவே , முனிவர் கூறுவது சரிதான் ! ஆட்சி , உச்சமாக இருந்தால் , தோஷ நிவர்த்தியென அறிக!!

கர்க்கமகரிஷி

Leave a Comment

error: Content is protected !!