ஜோதிட குறிப்புகள் பகுதி-14

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ஜோதிட குறிப்புகள்

  • ஜாதகனுடைய ஜென்ம லக்கினத்தில் சுபக்கிரகங்கள் இருந்தால் ஜாதகன் தீர்க்காயுளும் , தனமும் , அறிவும் அடைவான்.பாபக் கிரகங்களும் அப்படியே தன் உச்ச , மித்திர , சொட்க்ஷேத்திர ராசிகளில் இருந்தால் ஜாதகன் மேற்படி பலனையே அடைவான்.
  • ஜென்ம லக்கினம் மேஷ லக்கினமாகி அதில் சூரியன் இருக்கப் பிறந்தவன் தனமுடையவன் ஆவான்.
  • ஜென்ம லக்கினம் ரிஷபம் ஆகி அதில் சூரியன் இருந்தால் ஜாதகன் இருண்ட கண்களுடையவன் ஆவான்.
  • ஜென்ம லக்கினம் மிதுனம் ஆகி அதில் சூரியன் இருந்தால் ஜாதகன் மலர்ந்த கண்களுடையவன் , மூர்க்கனும் ஆவான்.
  • ஜென்ம லக்கினம் கடகம் ஆகி அதில் சூரியன் இருந்தால் ஜாதகன் கால் பார்வையுடைய கண்களையுடைவன் ஆவான்.
  • ஜென்ம லக்கினம் சிம்மம் ஆகி அதில் சூரியன் இருக்கப் பிறந்த ஜாதகன் இராக் குருடன் , பலிஷ்டன் ஆவான்.
  • ஜென்ம லக்கினம் துலாமாகி அதில் சூரியனிருந்தால் ஜாதகன் பெற்றோரால் விடப்பட்டவன் , மரிக்கப்பட்ட குழந்தையை அடையவான்.இருதய நோயுடயவன்.
  • ஜென்ம லக்கினம் மகரமாகி அதில் சூரியளிருந்தால் ஜாதகன் லோபியாவன் , தனாதிகமுடையவன்.
  • ஜென்ம லக்கினம் மீனமாகி அதில் சூரியனிருந்தால் ஜாதகன் ஸ்திரீ பிரஜைகளை உடையவனாவன்.
  • ஜென்ம லக்கினத்தில் சூரியன் பாபருடன் கூடி அல்லது ராகுவுடன் கூடி லக்கினத்திலிருந்து சந்திரன் அஷ்டமத்திலிருந்தால் ஜாதகன் பிறக்கும்போதே ஆயுதங்களால் மரணமடைவன்.
  • ஜென்ம லக்கினத்தில் குரூரருடன் கூடிய லக்கினாபதியிருந்தாலும் , ஆறு , எட்டுப் பன்னிரண்டாம் இடங்களில் லக்கினபாவாதிபதி குரூரர்களுடன் கூடியிருந்தாலும் ஜாதகன் ரோக தேகமடைவான்.
ஜோதிட குறிப்புகள்
ஜோதிட குறிப்புகள்
  • ஜென்ம லக்கினேசன் பாபியாகி லக்கினத்தில் பல ஹீனனாகியிருந்தாலும் ஜாதகன் ரோகியாவான் , கோபி ஆவான்.
  • ஜென்ம லக்கினாபதி கேந்திர திரிகோணங்களிலிருந்தால் ஜாதகன் வியாதியில்லாதவனாவன்.
  • ஜென்ம லக்கின பாவாதிபதியிருக்கும் பாவநாதன் எட்டாமிடத்திலிருந்தால் ஜாதகன் துர்ப்பலனாவன்.மேற்படி பாவாதிபதியாலடையப்பட்ட ராசிநாதன் ஆறு , எட்டாமிடங்களிலிருந்தால் ஜாதகனுடைய அந்த பாவங்களும் , பலவீனமாகி அந்த பவங்களுக்குச் சொல்லப்பட்ட பலன்களும் குறைந்துவிடும்.
  • ஜென்ம லக்கினத்திலேயே ராகு இருந்து குளிகனுடன் மேற்படி ராகு கூடியிருந்தாலும் , அல்லது ஜென்ம லக்கினத்தில் பாபருடனேயே லக்கினாதிபதி கூடி இருந்தாலும் , ராகு ஜென்ம லக்கினத்திலிருந்தாலும் ஜாதகன் ஸர்ப்பம் , திருடன் , வஞ்சகன் முதலியவர்களால் நிச்சயமாய் பயமடைவன்.
  • ஜென்ம லக்கினத்தில் சூரியனுடன் சனி கூடியிருந்தாலும் , ஜாதகனுக்கு திருடனால் பயம் நிச்சயமாயுண்டாகும்.
  • ஜென்ம லக்கினத்தில் சனியும் , ராகுவும் கூடியிருந்தால் ஜாதகனுக்கு பிரகத் பிஜம் உண்டாகும்.
  • ஜென்ம லக்கினத்தில் செவ்வாயிருந்தால் ஜாதகனுக்கு தொப்புள் , ( குல்மம் ) விருஷணம் பெருத்து இருத்தல் முதலியன உண்டாகும்.
  • ஜென்ம லக்கினத்தைச் சூரியன் பார்த்தால் ஜாதகன் பிதுரு தனமுடையவன் , ராஜ சேவையுடையவன் , ஜல வஸ்துவால் மகா தனமடைவன் , தர்மமுமடைவன்.
  • ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தைச் சூரியன் பார்த்தால் ஜாதகன் ஸ்தூல சினமும் , வியாதியுமுடையவன் , சொற்ப புகழுடையவன் , ராஜ பூஜிதன் , விரதமுடையவன் , வேசி ஸ்திரீகளுடன் சேர்பவன் தனமுடையவன் , சுகி.
  • ஜென்ம லக்கினத்தைச் சனி பார்த்தால் வயதான ஸ்திரீ , சுந்தரமான மிருதுவான கெட்ட ஸ்திரீகளின் சேர்க்கை அடைவான்.
  • ஜென்ம லக்கினத்தைச் சூரியன் பார்த்தால் ஜாதகன் பராக்கிரமம் , சௌரியம் முதலியன உடையவன் , தகப்பனுக்குப் பிரியன் , பிதுரு காரியங்களைச் செய்து ஜீவிப்பான்.
  • ஜென்ம லக்கினத்தை சந்திரன் பார்த்தால் ஜாதகன் புகழடைவான்;அறிவடைவன்.
  • ஜென்ம லக்கினத்தைச் செவ்வாய் பார்த்தால் ஜாதகன் ஸ்ரீமான் , யுத்தப் பிரியன் , ஸாகசமுடையவன்.
  • ஜென்ம லக்கினத்தைப் புதன் பார்த்தால் ஜாதகன் எழுதுபவன் , சிற்பியாவன் .
  • ஜென்ம லக்கினத்தைக் குருபார்த்தால் ஜாதகன் நியமமுடையவன் , அரசனுக்குப் பிரியன் , கொண்டாடப்பட்ட புகழுடையவன் ஆவான்.
  • ஜென்ம லக்கினத்தைச் சுக்கிரன் பார்த்தால் ஜாதகன் வேசியிடம் பற்றுடையவன்.நல்ல போகம் உடையவன் , தனமுடையவன்.
ஜோதிட குறிப்புகள்
ஜோதிட குறிப்புகள்
  • ஜென்ம லக்கினத்தைச் சனி பார்த்தால் ஜாதகன் தரித்திரமடைவான் , மூர்க்கன் , மரண காரணமும் உடையவன்.
  • ஜென்ம லக்கினத்தைச் சுப சந்திர சுக்கிரர்கள் பார்த்தால் ஜாதகன் கீர்த்தியுடையவன் . ( ஸ்திரீயாயின் கணவனுக்கினியவள் ) எசமானனுக்கு இஷ்டமானவன்.
  • ஜென்ம லக்கினத்தைச் சந்திரன் , குரு இவர்கள் பார்த்தால் ஜாதகன் வணக்கமுடையவன் , ஸ்ரீமான் ஆவான்.
  • ஜென்ம லக்கினத்தைப் புதனும் சந்திரனும் பார்த்தால் ஜாதகன் தனமடைவன் , எழுத்து எழுதுபவன்.
  • ஜென்ம லக்கினத்தை புதன் , குரு இவர்கள் பார்த்தால் சேனாதிபதியாவன்.
  • ஜென்ம லக்கினத்தை புதன் , சுக்கிரரிவர்கள் பார்த்தால் ஜாதகன் தனமடைவான் , எழுத்து எழுதுபவன் , அரசாளுபவன் , ஸ்ரீமான் ஆவான்.
  • ஜென்ம லக்கினத்தை குருவும் , சுக்கிரனும் பார்த்தால் ஜாதகன் மந்திரியாவான்.
  • ஜென்ம லக்கினம் மித்திரர்களாலும் , பாபர்களாலும் அடையப்பட்டு பாபர்களால் மேற்படி லக்கினம் பார்க்கவும்பட்டால் ஜாதகன் சண்டியாவன் , சூரன் , கோபமுடையவன் பிரசண்டசூரன்.
  • ஜென்ம லக்கினத்தை சுபர்களான கிரகங்களில் மூன்று சுபர்கள் பார்த்தால் ஜாதகன் விசேஷ தனமுடையவன் அல்லது அரசனாவன்.
  • ஜென்ம லக்கினத்தை சத்குரு , மித்திரக் கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் ரோகமும் தனமுமுடையவன் ஆவான்.
  • ஜென்ம லக்கினத்தைக் குரு பார்த்தால் ஜாதகன் மந்திரி ஆவான் , அல்லது அரசனுக்குச் சம தனமும் , சுகமும் உடையவன் ஆவான்.
  • ஜென்ம லக்கினத்தைச் சுபர் , அசுபர் இவர்கள் பார்த்தால் ஒரே பலன்தானுண்டாகும்.
  • ஜென்ம லக்கினம் யாராலும் பார்க்கப்படாமலிருந்தால் ஜாதகன் சமஸ்த குணங்களாலும் விடப்பட்டவன்.
  • ஜென்ம லக்கினமும் , நான்காம் பாவமும் மேற்சொன்ன கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் , எல்லாக் கிரகங்களும் , லக்கினம் நான்கு இந்த பாவங்களைப் பார்த்தாலும் ஜாதகன் அரசன் ஆவான்.

ஜென்ம லக்கினத்தை மூன்று சுபர்கள் பார்த்தாலும் , மூன்று சுபர் அடைந்திருந்தாலும் அரசர்களுடைய ஜனனமானது உண்டாகும்.

  • ஜென்ம லக்கினத்திற்கு ஏழு , ஆறு எட்டு இந்த பாவங்களில் பாபர்களின்றி சுபர்கள் மட்டுமிருந்தால் அதியோகம் என்கிற யோகமுண்டாகும்.மேற்படி யோகத்தில் பிறந்தவர்கள் அரசர்களும் , மந்திரிகளும் ஆவார்கள் .
  • ஜென்ம லக்கினத்தில் பூர்ண் சந்திரன் இருந்தால் , ஜாதகன் மணி , ரத்ன , தனாதிகளுடையவன் , ஜென்ம லக்கினத்தில் க்ஷீண சந்திரனிருந்தால் தாமசமுடையவன்,கோபிஷ்டன்,துஷ்டன்,துரோக புத்தியுடையவன்.
  • கடகம் , மேஷம் இவைகள் ஜன்ம லக்கினமாகி க்ஷுக்ஷிண சந்திரன் அதில் இருந்தால் ஜாதகன் தனமுடையவன் , குணமுடையவன் , துவிபாத , சதுஷ்பாத , பகுபாத ராசிவர்க்கங்களில் சந்திரனிருந்தால் ஜாதகன் தூர்த்தன் செவிடன் , முடவன் , ஊமை அல்லது தெத்துவாயனாவன்.
  • ஜென்ம லக்கினத்தைச் சுபர்கள் பார்த்தால் ஜாதகன் நற்பலனும் , கீர்த்தியுமடைவான் , தனமுமடைவன் , நல்ல ரூபம் , மந்திரித்துவம் , சுகம் , நோயில்லாமை முதலியன உடையவன்.
  • ஜென்ம லக்கினத்தைச் சுபர் பார்த்தால் நல்லயோக பலன்களும் , சுபருடன் சந்திரன் கூடிப் பார்த்தால் வேடனாயிருந்தாலும் , காட்டுமிராண்டியாயிருந்தாலும் ராஜாவாகவும் ஆவான்.மேலும் சுய க்ஷேத்திரத்தில் அல்லது அதிமித்திர ராசிகளில் அல்லது உச்ச ராசிகளில் இருந்தாலும் மேற்சொல்லிய பலனே நடக்கும்.இவர்கள் தன்னுடைய நீச்ச , சத்துரு ராசிகளிலிருந்தாலும் , அல்லது இந்த ராசிகளில் குரு இருந்து சந்திரன் பார்த்தாலும் ஜாதகனுக்கு துக்கமுண்டாகும்.அப்போது மேற்படி சந்திரன் நின்ற ராசிநாதனைச் சந்திரன் பார்க்காமலிருந்தால் , ஜாதகனுக்குச் சகல அரிஷ்டங்களும் நிவாரணமாய் விடும்.
  • ஜாதகன் ஜெனிக்கும்போது நவ கிரகங்கள் சந்திர ஓரையிலிருந்து சந்திரன் தன் ஓரையில் இருந்தாலும் , தன் ஓரையிலுள்ள சந்திரனை சந்திர ஓரையிலிருக்கும் கிரகங்கள் பார்த்தாலும் ஜாதகன் அரசனாவன்.
  • ஜென்ம காலத்தில் சூரியனுடைய ஓரையில் கிரகங் களிருந்து சந்திரனும் சூரிய ஓரையை அடைந்திருந்து சந்திரன் மேற்படி கிரகங்களால் பார்க்கப்பட்டால் ஜாதகன் தன் பிரதாபத்தினால் சம்பாதிக்கப்பட்ட தனத்தை உடையவன்.

Leave a Comment

error: Content is protected !!