கிரக கூட்டு பலன்கள்-சுக்கிரன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரு – சுக்ரன்

அரசு ஆதரவு உடையவர் ; மன்னர் நேசம் உண்டு . பணம் சம்பாதிக்கும் ஆசையுடைவர்.நீதிநெறி சாஸ்திரம் அறிந்தவர் . பெரிய தனவான் ; பலவித சாஸ்திர ஞானம் கொண்டவன்.

விளக்கம் :

குருவும் , சுக்கிரனும் பூரண சுபர்கள் , மிகுந்த நன்மையை செய்யக் கூடியவர்கள்.சகல வித வித்தை , கல்வி ஞானத்தை அளிப்பவர்கள்.இவர்கள் லக்ன கேந்திரம் ஏறும்போது , மேலும் இவர்களது வலிமை அதிகரித்து நல்ல சுப பலன்கள் உண்டாகுமென அறிக.

குரு +சனி :

அதிக பணமுண்டு ; வித்தியாசமான எண்ணம் கொண்டவர் . மாயை தோற்றமில்லாதவர் . கடினமான சுபாவம் கொண்டவர் . அநேக ஆபத்துக்களைச் சந்திப்பவர்.சத்திய குணம் இல்லாதவர்.

விளக்கம் :

குரு – சனி ஆகிய இருவரும் சுபர் பாவர் போட்டியினால் பலமிழந்து தீமை செய்ய நேரிடும்.இவர்கள் , லக்ன கேந்திரம் பெற்றுள்ளதால் , சொற்ப நன்மை செய்ய இடமுண்டு.ஆட்சி , உச்சமாக இருந்தால் ஷ தோஷம் விலகி , ஓரளவு நல்ல பலன்கள் ஏற்படுமென அறிக.

சுக்கிரன்+சனி:

மந்த புத்தியுடையவர் ; செய்ந்நன்றி மறக்கக் கூடியவர் பரஸ்திரீ நேசன் ; பந்து ஜனப்பிரியர்.

விளக்கம் :

சுபர் , பாவர் யுத்தத்தினால் , இவர்கள் தீமை செய்வார்கள் என்பது முனிவரது முடிவு ! ஆனால் , லக்ன கேந்திரமாய் இருப்பதால் , தோஷ நிவாரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.சுக்கிரனும் , சனியும் நண்பர்கள் . எனவே , ஓரளவு நல்ல பலன்கள் ஏற்படுமெனக் கொள்க.

Leave a Comment

error: Content is protected !!