திருகுடந்தை சாரங்கபாணி பெருமாள்
திவ்ய தேசம்-12
மங்களமாக இருக்க வேண்டும் என்றால் பெருமாளின் அனுக்கிரகம் வேண்டும். தேவாதி தேவர்களுக்கும் எக்காலத்திலும் இறவா நிலை வேண்டும் என்பதற்காக – மோகினி அவதாரம் எடுத்து பாற்கடலில் கடைந்தெடுத்த அமிர்தத்தை வழங்கிய ஸ்ரீமந்நாராயணன் நல்லவர்களுக்காக அவர்கள் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் அவதாரம் எடுத்துக் காப்பாற்றுவார்.
இதற்கு அடையாளமாக இன்றைக்கும் அமிர்த குடத்தைத் தாங்கி நின்று சேவை சாதிக்கிறார் திருக்குடந்தையில் . திருக்குடந்தை என்று அழைக்கப்பட்டு வரும் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலை அறியாதவர்கள் எவருமே இல்லை.
தஞ்சாவூரிலிருந்து வடகிழக்கில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் காவிரியாற்றின் தென்பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி 147 அடி உயரம் கொண்ட 11 நிலை இராஜ கோபுரமும் , மூன்று பிரகாரங்களையும் கொண்டுள்ளது.
- மூலவர் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் பாம்பணையின் மீது பள்ளி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.சாரங்கபாணி.இராமர் கோயில் , ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்களும் உண்டு.
- தாயார் கோமளவல்லி.
- ஹேம புஷ்கரிணி என்னும் பொற்றாமரைக் குளம் உண்டு.
- விமானம் வைதீக விமானம்.
- வசந்த மண்டபம் 100 கால் மண்டபம் உண்டு.’ சாரங்கம் ‘ என்னும் வில்லை ஏந்தி நின்றதால் சாரங்கபாணி என்று பெயர் வந்ததாக ஒரு செய்தி உண்டு.
ஹேம் முனிவர்க்கு ஒரு சன்னதி உண்டு. இவரது மகளாத் தோன்றியத் திருமகளை இறைவன் மணந்து கொண்டதாக ஐதீகம். சுவாமியின் கருவறை தேர் வடிவில் பிரம்மாண்டமான சக்கரங்கள் கொண்ட திருத்தேர் போன்று காணப்படுகிறது. உத்ராயண , தட்சிணாயன வாசல் என்று இருவாசல்கள் வழியே சென்று முறைப்படி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது . பன்னிராண்டுகளுக்கு ஒருமுறை சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் ‘ குரு ‘ வரும்பொழுது ‘ மகாமகம் ‘ என்னும் ஒரு பெரிய விழா கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமந் நாத முனிகள் – இந்த தலத்தில் பாடப்பட்ட நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ‘ இது பத்து ‘ என்னும் பொருள்பட ஒரு வரி இருப்பதைக் கண்டு இந்த பாடல்களைப் பாடியவர் யார் ? என்று அறியாமல் வருத்தப்பட்டார். அப்பொழுது பகவான் ஸ்ரீமந்நாத முனிகளின் கனவில் தோன்றி ஆழ்வார் திருநகரிக்குச் சென்று நம்மாழ்வாரைச் சந்தித்தால் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என்று வழிகாட்டினார்.
இறைவனது கட்டளையை ஏற்று ஸ்ரீமந் நாத முனிகள் நம்மாழ்வாரை தரிசனம் செய்ய , நம்மாழ்வார் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களை சொல்லிக் கொடுத்து அவரது சந்தேகத்தையும் போக்கினார். நாலாயிரப் பாசுரங்களை எந்தவிதக் குறையும் இல்லாமல் நிலைநிறுத்த ஸ்ரீமந் நாத முனிகளுக்கு இந்த சாரங்கபாணிப் பெருமாள் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆராவமுதன் என்ற பெயரும் உண்டு.
ஆண்டாள்,திருமழிசையாழ்வார் , திருமங்கையாழ்வார் , பூதத்தாழ்வார் , பேயாழ்வார் . நம்மாழ்வார் ஆகியோர் இக்கோயிலைப் பற்றி நிறைய பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள்.கோமளவல்லித் தாயார் இதுவரை கோயிலை விட்டு வெளியே வந்ததே இல்லை என்பதால் ‘ படிதாண்டாப் பத்தினி ‘ என்ற பெயரும் உண்டு.
பரிகாரம்
எத்தகைய இடையூறு வாழ்க்கையில் வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த சாரங்கபாணியை சரண் அடைந்து விட்டால் போதும். பகவானே கனவில் வந்து , திக்குத் தெரியாமல் திண்டாடு பவர்க்கெல்லாம் திக்கைக் காட்டி தைரியத்தையும் கொடுப்பார். படிக்கின்ற மாணவர்கள் தேர்வு நேரத்தில் பரிட்சை பயம் வராமல் இருக்கவும் தேர்வு எழுதும் பொழுது திடீரென்று படித்தது நினைவுக்கு வராமல் தவிப்பதைத் தடுக்கவும் வெளியூர்ப் பயணத்தின் பொழுது இக்கட்டான நிலையில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவும் , பயம் விலகவும் மரண பயத்திலிருந்து கோயிலுக்கு முடிந்த வெளியே வரவும் , இந்த சாரங்கபாணி பொழுதெல்லாம் வந்து பெருமாளை தரிசனம் செய்து பிரசாதத்தை வைத்துக் கொண்டால் போதும்.சக்கரம் போல் இவர் உங்களைக் காப்பார்.
கோவில் இருப்பிடம்