குரு-சனி பரிவர்த்தனை
- இவர்கள் வினோதமான மகான் சித்தன் , ஞானி , என்ற வழியில் இவர்களை சேர்க்கலாம்.
- உயர்வு தாழ்வு கீழ் ஜாதி மேல் ஜாதி பணக்காரன் ஏழை என்ற பாரபட்சம் இன்றி சம நோக்கோடு பார்ப்பவர்கள்.
- இவர்கள் ஆன்மீகத் துறையில் ஈடுபட்டால் தெய்வீக தோற்றங்கள் அபூர்வ சக்திகள் நாடி வரும்.
- இவர்கள் எத்தொழிலை செய்யவும் தயங்க மாட்டார்கள்.
- நியாயமான தார்மீகமான தொழில்களையும் செயல்களையும் வரவேற்பார்கள். செயல்படுத்துவார்கள்.
- எந்த இடையூறுகள் வந்தாலும் அதை , கண்டு மனம் தளராதவர்கள் இவர்கள்.
- பிறரின் சூழ்நிலையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்யத் தயங்க மாட்டார்கள்.
- இவர்கள் பேங்க் , நீதி , துறை கைவினை பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் கலைத்துறை , எழுத்துத்துறை , சமயத்துறை , அறநிலை யத்துறை போன்றவைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.
- இவர்களின் வம்சாவழி சிறப்பிப்பது இல்லை.
- குழந்தைகள் உடல் நலம் குறைந்தவர்கள். உடல் குற்றம் பிடிதல் உள்ளவர்களாக உள்ளனர்.
- ஆன்மீக பேச்சு , மத போதகர்களான நிலைகளில் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் . பெண்ணாசை , பொன்னாசை , மண்னாசை குறைந்தவர்கள் ஆகவும் மக்களை நல்வழிப்படுத்தும் மார்க்கத்தை உபதேசிப்பவர்களாகும்.நன்மதிப்பு பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
விருச்சிகம் , தனுசு , கும்பம் , மீனம் போன்ற லக்னத்திற்கு சிறப்பைதருகிறது. மற்ற லக்னங்களுக்கு எதிரிடை பலன்கள் தருகிறது .