முப்பந்தல் இசக்கி அம்மன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

முப்பந்தல் இசக்கி அம்மன்
வரலாறு

திருநெல்வேலி , நாகர்கோவில் வழித்தடத்தில் வள்ளியூரிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் , முப்பந்தல் இசக்கி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் இவ்வூரில் பிறக்கும் பெண் குழந்தைகள் பெரும்பாலும் , உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்டனர் . அப்பொழுது பெண் குழந்தைகளுக்கு இசக்கி அம்மன். இசக்கி போன்ற பெயர்களை பெற்றோர்கள் சூடினர் . அதற்குப் பின்னர் பெண் குழந்தைகள் நலமடைந்தனர்.

சிறப்பு :

திருநெல்வேலியின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களிலும் , திருநெல்வேலி தூத்துக்குடி , திருநெல்வேலி கன்னியாகுமரி , திருநெல்வேலி மதுரை போன்ற முக்கியமான வழித்தடத்திலும் ஒரு இசக்கி அம்மன் ஆலயம் இருப்பதைக் காணலாம். இசக்கி அம்மன் கோவிலைக் கடந்து செல்லும் அவ்வூர் பக்தர்களும் , மேலும் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தங்கள் பயணத்தை நிறுத்தி , அம்மன் ஆலயம் சென்று தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டே , தங்களின் பயணங்களை தொடர்வார்கள்.

முப்பந்தல் இசக்கி அம்மன்
பரிகாரம் :

முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் , திருவிழா மிகப்பெரிய திருவிழா ஆகும். சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்காண மக்கள் , மாட்டுவண்டிகள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களில் வந்து ஆடுகளை பலியிட்டு , அம்மனை வழிபடுவார்கள். இவ்வாலயத்தில் தை மாதத்தில் , மலர் அபிஷேகம் பிரம்மாண்டமாக நடைபெறும்.

வழித்தடம் :

கன்னியாகுமரி நாகர்கோவிலிலிருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலும் , வள்ளியூரில் இருந்து நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்திலும் , ஆரல்வாய்மொழி என்ற ஊரில் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது முப்பந்தல் . விசேஷ நாட்களில் குமரி நெல்லை , மதுரை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளும் மற்றும் , சென்னையிலிருந்து பேருந்து வசதியும் , ரயில் வசதியும் உள்ளன.

Google Map:

Leave a Comment

error: Content is protected !!