கல்யாண மாரியம்மன்
வரலாறு:
பவானி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அழகிய ஊரான ஜம்பையில் கல்யாண மாரியம்மன் ஆலயம் உள்ளது.
சிறப்பு:
வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் இன்று கோயில்கள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றுள் பத்ர காளியம்மன் திருக்கோவில் மணி மகுடமாய் காட்சி தருகிறது. முதலில் கரிய காளியம்மன் என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் காலப்போக்கில் பத்ரகாளியம்மன் என்றும் கல்யாண மாரியம்மன் என்றும் அழைக்கப்பட்டார். குலசேகர பாண்டியன் எனும் குறுநிலமன்னன் அவரது மனைவி மரகதவல்லியோடு இணைந்து 12ஆம் நூற்றாண்டின் மத்தியில் இக்கோயிலை தோற்றுவித்ததாக கல்வெட்டுச் சாசனங்கள் தெரிவிக்கின்றன. கல்யாண மாரியம்மன் தன் பக்தர்களுக்கு எப்பொழுதும் கல்யாண கோலத்தில் தரிசனம் தருவது இங்கு தனி சிறப்பாகும்.
செவ்வாய் ,வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் அம்மனின் பரிபூரண அருளைப் பெறலாம். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் 11 அல்லது 13 வாரங்கள் கல்யாண மாரியம்மனை தொடர்ந்து வழிபட்டு பூஜித்து வர திருமண வாழ்க்கை இனியதாக அமையும்.
வழித்தடம்:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜம்பை கல்யாண மாரியம்மன் திருக்கோவில். ஈரோடு மற்றும் பவானியில் இருந்து வழித்தட பேருந்துகளும் நகரப் பேருந்துகள் உள்ளன.
Google Map: