தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்-அச்சிரப்பாக்கம்
இறைவன்– ஆட்சீஸ்வரர், முல்லைகானமுடையார், பார்க்கபுரீஸ்வரர், ஸ்திரவாசபுரீஸ்வரர்
இறைவி– இளங்கிளியம்மை,சுந்தர நாயகி,
பாலசுகாம்பிகை, அதிசுந்தரமின்னாள்
தலமரம் – சரக்கொன்றை
தீர்த்தம்-சங்கு, சிம்மம்
பாடல்– சம்பந்தர்
நாடு-தொண்டை நாடு
வரிசை எண்-29
தொலைபேசி– 044-27523019
அலைபேசி-?
முகவரி :
அ / மி . ஆட்சீஸ்வரார் கோயில்,
அச்சிறுபக்கம் & அஞ்சல்,
மதுராந்தகம் (வட்டம்)
காஞ்சிபுரம் மாவட்டம் – 603301
அருகிலிருக்கும் தலங்கள்
திருகழுக்குன்றம்,திரு இடைச்சுரம், கச்சூர் ஆலக்கோவில்,
கோவில் திறந்திருக்கும் நேரம்
காலை – 6:30-11:30
மாலை -4:30-8:30
தலசிறப்புகள்
விநாயகரை வணங்காது சென்ற இறைவனின் தேர் அச்சு முறிந்த இடம்(அச்சு+இறு+பாக்கம்)
பண் - குறிஞ்சி
இராகம் - எதுகுலகாம்போதி
திருமுறை- ஒன்று
பதிகம்-77
பாடல் -1
சம்பந்தர்
பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடல் பவளமொடு அழல்நிறம் புரையக்
குன்றிரண்டன்ன தோளுடைய கலங் குலாய வெண்ணூலொடு கொழும் பொடியணிவர்
மின்திரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளை ஓர் பாகமாப்பேணி அன்றிரண்டுருவம் ஆயவெம்மடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சிகொண்டாரே
பண் - குறிஞ்சி
இராகம் - எதுகுலகாம்போதி
திருமுறை- ஒன்று
பதிகம்-77
பாடல் -11
சம்பந்தர்
மைச்செறி குவளை தவளையாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலாகிழியப் பச்சிறவு எரிவயல் வெறிகமழ் காழிப் பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் கைச்சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன தமிழ்கொண்டு
அச்சிறுப்பாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் அருவினை இலரே
வழித்தடம்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அடுத்து உள்ளது அச்சிரபாக்கம்(பேருந்து மற்றும் ரயில் வசதி உள்ளது)
கோவில் இருப்பிடம்