குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மகரம்
நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3, 12 க்கு அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் இது நாள் வரை உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் விலகி சகல சௌபாக்கியங்களையும் வரும் நாட்களில் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.
5-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் ஜென்ம ராசி 9, 11 ஆகிய ஸ்தானங்களை தனது சிறப்பு பார்வையாக பார்வை செய்ய இருப்பதால் கடந்தகால சோதனைகள் விலகுவது மட்டுமில்லாமல் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் பெறுவீர்கள். நீண்டநாட்களாக தடைபட்டு வந்த மங்களகரமான சுப காரியங்கள் வருகின்ற நாட்களில் ஒன்றொன்றாக கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும்.
திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். ஒருசிலர் நீண்ட நாட்களாக சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்திருப்பார்கள், தற்போது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதில் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
தொழில், வியாபாரத்தில் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும் சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம்கூட குறைந்து நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. நீங்கள் வாங்கிய கடன்களை வரும் நாட்களில் குறைத்துக் கொள்ள முடியும்.
உத்தியோகரீதியாக பதவி உயர்வுகளை அடையக்கூடிய அதிர்ஷ்டங்களும் உங்கள் உழைப்புக்கான கான ஊதியத்தை அடையக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. சகஊழியருடைய ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதால் மனநிம்மதியுடன் பணியில் செயல்பட முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள்.
நிழல் கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு உங்கள் ராசிக்கு 3-லும். கேது 9-லும் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு, பிறந்த ஊரைவிட வெளியூர் மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு கடல் கடந்து அந்நிய நாடு சென்று பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 1ம் இடம் (ஜென்மம்),11ம் இடம் (லாபம்) ,9ம் இடம் (வெளிநாடு ,தந்தை) |
ராசியாதிபதி சனிபகவாள் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்ற காரணத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதால் மற்றவரிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சனி 2-ல் இருப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வதும் உங்களது ஆரோக்கியத்திற்கும் குடும்பத்தில் இருக்கக்கூடிய வயது மூத்தவர்களுடைய ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது சாலச் சிறந்தது.
குரு பகவான் வக்ர கதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது உத்தமம் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும் ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகுந்த பலனைப் பெறுவீர்கள் குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள் கொடுக்கல்- வாங்கலில் மட்டும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.
உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்க செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும் சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள் எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும் புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.
பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மிகவும் நல்லது சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் வானமுற்ற எழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8
நிறம்: நீலம், பச்சை
கிழமை: சனி, புதன்
கல்: நீலக்கல்
திசை: மேற்கு
தெய்வம்: விநாயகர்