ரிஷப ராசி திருமண வாழ்க்கை

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ரிஷப ராசி திருமண வாழ்க்கை

♥️ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவரின் 7 – ஆம் வீடு விருச்சிகம். அதிபதி செவ்வாய்.

♥️இதில் குரு , சனி , புதன் சாரம் வாங்கிய விசாகம் , அனுஷம் , கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம்பெறும். குரு , புதன் ஆகிய சுப சார நட்சத்திரங்கள் இருப்பதால் இவர்கள் வாழ்க்கைத் துணைவருக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருக்கும்.

♥️சனி சார நட்சத்திரம் இருப்பதால் சற்று சோம்பேறியாக இருப்பர் .

♥️7 – ஆம் வீடு செவ்வாய் வீடென்பதால் கோபம் வந்தால் அதிகமாக வரும். பொதுவாக அதிகம் பேசாதவராக இருப்பார்.

♥️இங்கு சந்திரன் நீசமாவதால் சிலசமயம் எண்ணங்களில் குழப்பம் உண்டாகி தனது வாழ்க்கைத் துணையையும் சங்கடத்தில் ஆழ்த்துவார்.

♥️ரிஷப லக்ன வாழ்க்கைத் துணைவர்கள் தங்கள் பூர்வீக குடும்பப் பெருமை பேசுவதில் மிகவும் விருப்பம் உடையவர்.

♥️இவர்கள் பிறந்த இடத்துக்கருகில் சிலசமயம் மதுபானக் கடைகள் இருக்க வாய்ப்புண்டு. அல்லது குறுகிய சந்தில் அமைந்திருக்கும்.

ரிஷப ராசி திருமண வாழ்க்கை

♥️இவர்களின் 7 – ஆம் அதிபதி உச்சமானால் மிகுந்த யோகமும் , வீரம் , பாக்கியம் , தன்னம்பிக்கை , வெளிநாட்டுப் பயணம் என்று சிறப்பான வாழ்வும் திருமணத்தின் மூலம் அமையும்.

♥️இதுவே 7 – ஆம் அதிபதி நீசமானால் கோழையாகவும் , தாய்க்கு மிக பயந்தவராகவும் , தன்னம்பிக்கை குறைந்த வராகவும் இருப்பர்.

♥️மாமியார்- அழுத்தமானவர். மாமனார் பயண விருப்பமும் சுறுசுறுப்பும் கொண்டவர்.

♥️ரிஷப லக்னத்தாருக்கு வாழ்க்கை துணை வடக்கு அல்லது தெற்கு திசையில் அமையும்.

♥️தோ, ந, நி, நு,நே, நோ, ய, இ,பூ(T,N,Y,I,P) ஆகிய எழுத்துக்கள் மற்றும் சா(S) என்ற எழுத்திலும் பெயர் ஆரம்பிக்கும்.

Leave a Comment

error: Content is protected !!