துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு சந்திரன் இணைவு பார்வை தரும் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

குரு சந்திரன் இணைவு -துலாம்

துலா லக்னத்தினருக்கு குரு சகாய ஸ்தானாதிபதி , ருண , ரோக , சத்ரு ஸ்தானாதிபதி. சந்திரன் தொழில் ஸ்தானாதிபதி.

3 – ஆமதிபதியாகிய குரு 10 – ஆமதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெறும்போது ‘ ஆன்லைன் ‘ வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். அதேபோல் ஊடகம் , தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும்.

6 – ஆமதிபதியாகிய குரு 10 – ஆமதிபதி சந்திரனுடன் சேர்க்கை பெறும்போது அடிமைத் தொழிலில் இருப்பவர்களும் , முதலீடில்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும்போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுபயோகமும் உண்டாகிறது.அதிக முதலீட்டில் சொந்தத் தொழில் செய்யும் துலா லக்னத்தினர் தொழிலால் கடனாளியாகிறார்கள்.

உடன்பிறந்த இளைய சகோதரத்தால் , தாய்மாமாவால் வஞ்சிக்கப்படுகிறார்கள் . சிலர் ஜாமின் பிரச்சினையில் மாட்டுகிறார்கள். ஆனால் துலா லக்னத்தினருக்கு மாமியார் ( 10 – ஆமிடம் ) , மாமனார் ( 3 – ஆமிடம் ) ஆதரவும் பொருளாதாரமும் உண்டு.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை காலை 8.00-9.00 மணிவரையிலான சந்திர ஓரையில் முல்லைமலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபட சீரான முன்னேற்றம் உண்டாகும் .

Leave a Comment

error: Content is protected !!