மருத்துவ ஜோதிட விதிகள்
♦கடுமையான நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.
♦நாள்பட்ட வியாதிகளை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.
♦இளமையில் வரும் நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.
♦முதுமையில் வரும் நோய்களை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.
♦ஜாதகத்தில் சூரியன், சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்த விதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது.
♦ஜாதகத்தில் செவ்வாய், சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.
♦ஜாதகத்தில் சூரியன், சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.
♦மேஷம், சிம்மம், ரிஷபம், கடகம், துலாம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.
♦கன்னி லக்னம் கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவார்.
♦லக்னத்திற்கு 6ல் சனி செவ்வாய் உள்ளவர்கள் நோயாளிகளை பார்க்க கூடாது. இவர்கள் தொட்டால் நோய் எளிதில் குணமாகாது.
♦லக்னத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் உள்ளவர்கள் நோயாளியை பார்ப்பதும் தொடுவதும் நல்லது. நோய் விரைவில் குணமாகும்.
♦லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று வலுத்து நிற்க 6,8க்கு உடையவர்கள் நீசம், பகை, அஸ்தமனம் பெற்று நின்றால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருக்கும்.
♦லக்னத்திற்கு 6,8ல் அதிக எண்ணிக்கையில் கிரகங்கள் நின்றால் ஒரே நேரத்தில் வியாதிகள் வந்து ஒன்றாக தாக்கும்.
♦நோயாளியின் லக்னத்திற்கு 6,8ம் வீடுகளை ஜென்ம லக்னமாக, ராசியாகவோ அல்லது பெயர் ராசி கொண்டவர்கள் நோயாளியைப் பார்க்க கூடாது இவர்கள் பார்த்தால் நோய் எளிதில் குணம் அடையாது.
♦லக்னத்திற்கு 6, 8 ல் நின்ற கிரகம் அல்லது 6, 8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.
♦ராகு கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.