Homeஆன்மிக தகவல்பணத்தை வசியம் செய்யும் மந்திரம்

பணத்தை வசியம் செய்யும் மந்திரம்

‘வசியம்’ என்பது மனிதர்களை மட்டும் வசியப்படுத்த பயன்படுத்தும் முறை அல்ல, வசிய வார்த்தைகள் வசிய மந்திரங்கள், நமது பணத்தையும் வசியப்படுத்தி அந்தப் பணத்துடன் இன்னும் அதிகமான பணங்களைச் சேர்த்து நம்மிடம் மீண்டும் வரவைக்கவும் பயன்படுத்தும் முறையாக உள்ளது.

நாம் வீட்டில் செலவுக்காகவோ அல்லது வேறொரு நபருக்கு கடனாகவோ பணத்தை கொடுக்கும் போது, ஒரு சில தாந்திரிகம் மாந்திரீக வார்த்தைகளை பயன்படுத்தினால், உங்கள் கையில் இருந்து வெளியேறும் பணம் மறுபடியும் பல மடங்காக பெருகி உங்களிடமே வந்து சேரும்.

நாம் பயன்படுத்து இந்த வார்த்தைகள் ‘வசியம் மந்திரம்’ என்று கூறுவார்கள். இந்த மந்திரம் சொல்வதன் மூலம் பணம் உங்கள் இடம் வசியமாகி இருக்குமாம்.

“ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ”

என்ற இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண் டும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது பணத்தை உங்களின் நெஞ்சுக்கு நேராக வைத்து மனதார உங்கள இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை நினைத்து இந்த பணம் திரும்ப எனக்கு பல மடங்காக பெருகி வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டே சந்தோஷமான மன நிலையுடன் கொடுக்க வேண்டும்.

வசியம்

ஆனால் நாம் பணம் கொடுப்பது பொது வெளியாக இருக்கும் போது இவ்வாறு மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பொதுவெளியில் இவ்வாறு மந்திரம் உச்சரிக்க தயக்கமாக இருப்பவர்கள் வீட்டிலிருந்த பணத்தை எடுத்து செல்லும்போது இந்த மந்திரத்தை சொல்லி உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்திடம் வேண்டிக் கொண்டு பின் பணத்தை கொண்டு செல்லுங்கள்.

பின் நீங்கள் யாரிடம் பணம் கொடுக்கப் போகிறீர்களோ அவர்களிடம் பணம் கொடுக்கும் போது இந்த பணம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்று நினைத்தாலே போதும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!