எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவே இல்லையென்ற புலம்பல் இன்று அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்குமுதல் காரணம் நம் கையில் இருக்கும் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்றும் அதற்கு தேவை உள்ளதா என்பதையும் கருத்தில்கொள்ளாமல் செலவுசெய்வதுதான்.
இது ஒருபுறம் இருந்தாலும் தம் கையில் பணம் வருவதற்கு முன்பாகவே அது செலவழிப்புக்கான காரணங்களும் நமக்கு முன்பாக வந்துவிடும். இது போல நிகழாமல் இருக்க இந்த எளிய தாந்த்ரீக முறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்று ஆன்மிகம் சொல்கிறது. அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.
முதலில் இதை யார் செய்யவேண்டும் என்பதை பார்த்துக்கொள்ளலாம். ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அனைவருமே பணத்தை செலவழிக்க மாட்டார்கள் யாரோ ஒருவர் கையில்தான் பணம் தாங்காமல் செல்வழிந்து கொண்டே இருக்கும் அந்த நபரின் கையால் இந்தப் பரிகாரத்தை செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம்.
இந்தப் பரிகாரத்தை நல்ல நாள் அல்லது புதன் வியாழன் போன்ற நாட்களில் செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாளில் நல்ல நேரத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அந்த நேரத்தில் உங்களுக்கு தெரிந்து உண்மையிலே சாப்பாட்டிற்குகூட வழியில்லாமல் துன்பப்படுபவர்களுக்கு உங்கள் கையால் ஒரு சிறிய தொகையை தானமாக கொடுக்கவேண்டும். இந்தப் பரிகாரத்திற்கு பணத்தைதான் தானமாக கொடுக்கவேண்டும். ஏனென்றால் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்காகதான் இதை செய்கிறோம். எனவே பணத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டும் வேறு எந்த பொருளையும் வாங்கிச் கொடுக்கக் கூடாது.
இதேபோல வாழ்கயிைல் நியாயமாக நடப்பவர்கள், பிறருக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படிதான் வாழவேண்டும் என்று இருப்பவர்கள். இப்படி நல்லவர்கள் என்று உங்கள் மனதிற் தோன்றுகிறார்களோ அவர்கள் கையால் இதே போலதொரு நல்ல நாளில் ,நல்ல நேரத்தில் சிறு தொகையை பணத்தை நீங்கள் தானமாக பெற வேண்டும். இப்படி யாரும் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் சிவயோகிகள் ,சித்தர்கள் போன்றவர்கள் இடத்தில் இருந்து பெறலாம்.
நீங்கள் திடீரென சென்று ஒருவரிடம் பனம் கேட்டால் தரமாட்டார்கள் ஏனவே நீங்கள் யாரிடம் பணம் வாங்க போகிறீர்கள் என்பதை முடிவுசெய்த பிறகு அவர்களிடம் இந்தப் பரிகாரத்தை செய்வதற்கு இதுபோல நீங்கள் ஏதாவது ஒரு சிறு தொகையை எனக்கு தாருங்கள் என்று நீங்கள் முன்கூட்டியே நேட்டு வைத்துவிடுங்கள். பணம் என்றால் பெரியதாக இருக்கவேண்டும் அர்த்தம் இல்லை. ஒரு ரூபாயாக இருந்தால்கூட போதும்
இதை எத்தனை நாட்கள் செய்யவேண்டும் என்பது கணக்கு எல்லாம். கிடையாது நீங்கள் கொடுப்பதும் சரி- வாங்குவதும் உங்களுக்கு தோன்றும்பொழுது செய்யலாம். ஆனால் கொடுத்து வாங்கும் நாள் நல்ல நாளாக இருக்கவேண்டும். நேரம் நல்ல நேரமாக இருந்தால் மிகவும் முக்கியம்.
இந்தப் பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்யும்போது நம்மையும் அறியாமல் நம் கையில் இருந்து வீணாக செலவு செய்ய மாட்டோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பணம் வீண் செலவு ஆகவில்லை என்றாலே பணம் சேர்கிறது என்றுதான் அர்த்தம் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை நல் முறையில் செலவழித்து நல்லதொரு வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.