பாகம்பிரியாள் அம்மன்
பாகம்பிரியாள் அம்மன் வரலாறு:
அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டம் திருவொற்றியூரில் அமைந்துள்ளது. தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அருளுவதால் இவரை மருத்துவச்சி அம்மன் என்றும் அழைக்கிறார்கள்.
பாகம்பிரியாளை வழிபடும் பக்தர்கள் தங்கள் சொத்து அனைத்தும் தங்களின் அன்னையான பாகம்பிரியாள் அம்மனுக்கு சொந்தமானதாக கருதுகின்றனர்.முற்காலத்தில் உயில் எழுதுபவர்கள் அன்னை பாகம்பிரியாள் அம்மன் தன் பிள்ளைகளுக்கு உயில் எழுதுவது போல் எழுதுவார்கள்.
பாகம்பிரியாள் அம்மன் சிறப்பு:
பாகம்பிரியாள் அம்மனை நாம் மனமுருகி வழிபட்டு இவ்வாலயத்தில் வழங்கப்படும் தீர்த்தத்தை குடித்தால், நம் உடல் நோய்கள் அனைத்தும் குணமடையும். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத புற்றுநோய் உட்பட அனைத்து கொடிய நோய்களும் பாகம்பிரியாள் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் குணமடையும் என்று நம்பப்படுகிறது.
பரிகாரம்:
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் உரல், உலக்கை, அம்மிக் குழவியை காணிக்கையாக செலுத்தியும், தங்கள் உருவம் போன்று பொம்மை செய்து வைத்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
வழித்தடம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவொற்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பஸ்ஸில் திருவாடனை சென்று அங்கிருந்து திருவொற்றியூர் பஸ்ஸில் கோவிலுக்கு செல்லலாம். திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பஸ்ஸில் திருவாடனை சென்று அங்கிருந்து திருவொற்றியூர் பஸ்ஸில் கோவிலுக்கு செல்லலாம்.