அஸ்வினி நட்சத்திரம்
அஸ்வினி முதலாவது நட்சத்திரம். மேஷ ராசியில் முதல் 13-20 பாகை வரை பரந்துள்ளது. அஸ்வினி குமாரர்கள் என்ற தேவ மருத்துவர் பெயரில் இது அழைக்கப்படுகிறது.இவர்களே இதற்கு அதிதேவதைகள்.
இந்திய பெயர் | அஸ்வினி |
கிரேக்கப் பெயர் | (castor and pollux) கேஸ்டர் மற்றும் போலெக்ஸ் |
அரபுப் பெயர் | அஷ் விரடன்( இரு அடையாளங்கள் ) |
சீன பெயர் | ஸியு(sieu ) |
தெய்வம் | ஈஸ்வரன் |
சாதி | பிராமணன் |
கோத்திரம் | பரத்துவாசம் |
யோனி | குதிரை |
பட்சி | ராஜாளி |
மரம் | எட்டி மரம் |
நட்சத்திர வடிவம் | குதிரை தலை போன்று இருக்கும் |
சூனிய மாதம் | சித்திரை |
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்-ஆண்
1.உடலமைப்பு
- அழகன்,
- பெரிய நீண்ட மூக்கு,
- உயர்ந்த நெற்றி
2.குணநலன்கள்
- அமைதியாக இருந்தாலும் காரியவாதி,
- தன் முடிவை மாற்றிக் கொள்ளாதவர்,
- தன்னை விரும்புபவர்களிடம் பாசம் உள்ளவர். அவர்களிடம் உண்மையாக நடந்து கொள்பவர்.
- எந்த ஆபத்து நிலையிலும் அமைதியை இழக்க மாட்டார்.
- சாதனை புருடன்.
- துன்பத்தில் ஆறுதல் சொல்வதில் சமர்த்தர்.
- எளிதில் யாருக்கும் பணிந்து கொடார்.
- ஆரம்பித்த வேலையை செய்யாமல் விடமாட்டார்கள்.
- அவசர முடிவே கிடையாது.
- கடவுள் நம்பிக்கை உண்டு.
- பழைய மதவாதி ஆனால் அதை புதிதாய் அமைத்து நடப்பவர்.
- சில சமயம் சிறியதை பெரிதுபடுத்தி கஷ்டப்படுவார்கள். மற்றும் சில சமயங்களில் மன அமைதியின்றி தவிப்பார்.
- அதிக செல்வம் இருந்தும் சில சமயம் அனுபவிக்க முடியாது.
- இவரால் குடும்பத்திற்கு கெட்ட பெயரும் ஏற்படலாம்.
3.குடும்பம்
- தன் குடும்பத்தை உண்மையுடன் நேசிப்பார்
- தகப்பனால் இவ்வளவு லாபம் அடைவதில்லை.
- தாய்வழி, மாமன் வழியில் உதவிகள் கிட்டும்.
- வெளி மனிதர்களிடம் இருந்து அதிக உதவிகள் கிடைக்கும்.
4.தொழில்
- சகலகலா வல்லவர் ,
- எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்- இலக்கிய ஆர்வம் உண்டு,
- 30 வயது வரையில் வாழ்க்கையில் ஒரு சீரான முன்னேற்றம் உண்டு
- இவர் கஞ்சன்தான் இருந்தாலும் தன் வரையில் தடபுடலான செலவுகள் செய்வார்.
- 25 வயதுக்கு மேல் 30 வயதுக்குள் திருமணம் நடக்கும்
- இவருக்கு ஆண் குழந்தைகளை அதிகம்
- உடல் ஆரோக்கியம்
- பொதுவாக ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும்
- முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு தலை நோய், இருதய நோய் முதலியவை ஏற்படும்
5.பெண்கள்
மேலே ஆண்களுக்கு சொல்லப்பட்டவை எல்லாம் பொருந்தும். அதனுடன் சிறிய அழகிய ஆளை சுண்டி இழுக்கும் கண்கள் படைத்தவர்கள், நல்ல அழகி,
- அஸ்வினியில் ருதுவானால் நல்ல தனம், செல்வம் ,மக்களுடன் வாழ்வார்.
6.குணம்
- தன் வார்த்தை ஜாலத்தால் எளிதில் வசப்படுத்துவர்
- அதிக பொறுமையும் அதிக பாலுணர்வுமுண்டு
- மாசற்ற மனமும் பழைய பாரம்பரியத்தில் அதிக பற்றும் உள்ளவர்
7.கல்வி-தொழில்
- பணியில் இருந்தால் 50 வயதுக்கு தானே ராஜினாமா செய்துவிடுவார்
- நல்ல பொருளாதார நிலை இவரை வேலைக்குப் போக விடாது
- தன் குடும்பத்துக்கு நேசமுடன் உழைப்பவர்
- சமூகப் பணியிலும் ஈடுபடுபவர்
- நிர்வாக வேலைகள் இவரைத் தேடி வரும்
- 23 வயது முதல் 25, 26க்குள் விவாகம் ஆனால் சுகமுண்டு
- இளம் வயதில் 18க்கு முன் நடந்தால் கணவரை பிரிதல் அல்லது விவாகரத்து ஏற்படலாம்
8.ஆரோக்கியம்
- பொதுவாக நன்றாக இருந்தாலும் கவலை வருத்தம் இவற்றால் உடல் நலம் கெடும்.
- அதிகபட்ச நிலையில் இஸ்டீரியா போன்ற மனநிலையை நோய் ஏற்படலாம்
- சமைக்கும் போது எச்சரிக்கை தேவை தீ விபத்து ஏற்படவாய்ப்புண்டு
- வாகன விபத்துகளும் ஏற்படலாம்.
- வலிப்பு நோய்கள் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம்
அஸ்வினி நட்சத்திரத்தில் செய்ய தக்கவை
மனைக்கோலல், விவாகம்,பொன்பூனால், புத்தாடை உடுத்துதல்,குழந்தைகளுக்கு புதிதாக சோறூட்ட, விதை விதைக்க, வாழை மரம் வைக்க, நெற்பயிர் வைக்க, சூதக மனை புகுதல், வித்யாரம்பம்,உபநயனம், முடிசூட்டல், புது பதவி ஏற்றல், தானியம் வாங்க, வாகனம் வாங்க, கடல் பயணம் செய்ய, மாங்கல்யம் செய்ய, பும்ஸவனம், சீமந்தம், நோயாளி மருந்துண்ண,
இந்த நாளில் பால் சோறுண்டு பயணம் செய்தால் ஜெயம் , காரியம் கைகூடும்
இந்த நாளில் வியாதி தோன்றினால் ஒன்பது நாளில் குணமாகும்.
இந்த நட்சத்திரத்தில் வருஷம் பிறந்தால் தானிய விலை ஏறாது இறங்காது சரி சமமாக நிற்கும்
பரிகாரம்
அரசாங்கொழுந்தும், வேப்பங்கொழுந்து ஓமம் பண்ண வேண்டும்.
மந்திரம்
அசுபதி நட்சத்திரத்தை நினைத்து விஷ்ணுவின் அஷ்டாசுரம் ஓதவும், அன்றி வீரபத்திரர் மந்திரம் ஓதவும்