Homeஜோதிட குறிப்புகள்முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-4

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-4

ஜோதிட குறிப்புகள்-பகுதி-4

  • மூன்றாம் இடத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும், பதினோராம் இடத்தில் குரு தனித்து இருந்தாலும், முறையே இளைய சகோதரராலும் நலம் உண்டாகாது.
  • மூன்றாம் இடத்தில் சனி இருந்து செவ்வாயினால் பார்க்கப்பட்டால் சகோதரரை இழக்க நேரலாம். குருவாலோ, சுக்கிரனாலோ இந்த சனி பார்க்கப்பட்டால், சகோதர லாபம் உண்டாகக்கூடும்.
  • மகர லக்னத்திற்கு மூன்றில் உள்ள குருவும், துலாம் லக்னத்திற்கு மூன்றில் உள்ள குருவும் சகோதரர் மூலம் ஜாதகருக்கும், ஜாதகர் மூலம் சகோதரருக்கும் நலம் ஏற்படுத்தக்கூடும்.
  • மூன்றாம் இடத்து சனி ஜாதகரின் சுபீட்சத்தையும், அதிர்ஷ்டத்தையும் அதிக படுத்துவார்.
  • மூன்றாமிடத்தில் சனியானவர் ராகுவுடன் கூடி இருந்தாரானால், ஜாதகருக்கு வாத உபத்திரவம் உண்டாகலாம். வலது தோளில் அடிபட நேரலாம்.
  • சூரியனும் ,செவ்வாயும் மூன்றாம் இடத்தில் ஒன்று கூடினால் ஜாதகரின் வலது புஜத்தில் எலும்புமுறிவு ஏற்படக்கூடும்.
  • நான்காம் வீட்டு அதிபதி, 5 அல்லது 9ஆம் வீட்டு அதிபதியுடன் கூடி பதினோராம் வீட்டில் இருந்தால் ஜாதகர் அழகும், வசதியும் உள்ள வாகனத்தை அடையப் பெறுவார்.
ஜோதிட குறிப்புகள்
ஜோதிட குறிப்புகள்-பகுதி-4
  • நான்காம் வீட்டு அதிபதி, ஐந்தாம் வீட்டு அதிபதி அல்லது நான்காம் வீட்டு அதிபதி, ஒன்பதாம் வீட்டு அதிபதி ஒன்றுகூடி நான்காம் வீட்டைப் பார்த்தால் சிறந்த வாகன யோகம் ஏற்படும்.
  • 4-ஆம் வீட்டு அதிபதி, நான்காம் வீட்டிலேயே இருந்து பலம் பெற்றால், ஜாதகர் நல்ல வீட்டில் வசிப்பார். நல்ல நண்பர்களை பெறுவார்.
  • சூரியனும், செவ்வாயும் 4ல் ஒன்று கூடினால், பித்தக் கோளாறினால் தொல்லை உண்டாகலாம்.
  • 4-ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் இருப்பார்களானால், மார்புப் பகுதியிலும், இதயத்திலும் ஜாதகருக்கு தொல்லை ஏற்படக்கூடும். அந்த பாவ கிரகங்கள் கெட்ட வீடுகளுக்கு அதிபதியாக இருந்தால் மேற்சொன்ன நிலை ஏற்பட தடையிராது.
  • நான்காம் வீட்டதிபதி பலம் இல்லாமல் துர் ஸ்தானங்களில் இருந்து கெட்ட கிரகங்களால் பார்க்கப்பட்டாலும், அதே நேரத்தில் கெட்ட கிரகங்கள் நான்காம் வீட்டைப் பார்த்தாலும், அல்லது அங்கே குடிபுகுந்து இருந்தாலும், ஜாதகருக்கு சுகவாழ்வு ஏற்படுவது அரிது.
  • ஐந்தாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் குழந்தைகளை நாசம் செய்வார்கள். ஆனால் குருவினால் பார்க்கப்பட்டால் முதல் குழந்தை இறந்தாலும், அடுத்து பிறக்கும் குழந்தை நலமுடன் இருக்கும்.
ஜோதிட குறிப்புகள்
ஜோதிட குறிப்புகள்
  • ராகுவோ, கேதுவோ மேஷம், ரிஷபம், கடகம் ஆகியவை 5ஆம் வீடாகி அவற்றில் ஒன்றில் இருப்பார்களானால் குழந்தைகள் நலத்தைக் கெடுப்பதில்லை.
  • துலாம் லக்னகாரர்களுக்கு சனி ஐந்தாம் இடமாகிய கும்பத்தில் இருந்தால் ஜாதகர் புத்திர பாக்கியம் பெறுவது உறுதி.
  • மகர லக்னகாரர்களுக்கு ஐந்தில் சனியும், கும்ப லக்னகாரர்களுக்கு அவ்வாறு ஐந்தில் சனியும் இருந்தால் ஒரு மகன் பிறக்க தடை இராது.
  • 5-ஆம் வீட்டுக்குரிய கிரகம் இருக்கும் ராசி ஆண் ராசியாகுமானால் ஆண் குழந்தை பிறக்கும். பெண் ராசியாகுமானால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம். ஐந்தில் உள்ள பெண் கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் ஆனால் பெண் குழந்தைகளும், ஆண் கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் ஆனால் ஆண் குழந்தைகளும் பிறக்கும்.
  • பாவ கிரகங்கள் ஐந்தாம் இடத்தில் இருக்கும் ஆனால் ஜாதகருக்கு வயிற்று வலி உண்டாகலாம், அஜீரணம் ஏற்படவும் இடமுண்டு.
  • லக்னாதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியும் பலம் பெற்று இருப்பது நல்லது தான். ஆனால் லக்னாதிபதியை விட ஆறாம் வீட்டதிபதி பலம் பெற்று இருப்பது நல்லதாகாது.ஏனென்றால் ஆறாம் வீடு பகைவரை குறிக்கும் இடமாகும். லக்னம் என்பது ஜாதகரை குறிக்கும் இடமாகும். பகைவரின் கரம் வலுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த விதி ஏற்பட்டிருக்கிறது.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!