அஸ்வினி 4ம் பாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்
கடக நவம்சம்- அதிபதி சந்திரன்
- பெரிய தலை உள்ளவன்
- அதிக பணம் உள்ள தனவான்
- யாரும் மலைத்துப் போகும் அளவிற்கு வல்லமை சாமர்த்தியம் உள்ளவன்
- அழகிய வடிவமும், செம்மை நிறமான மேனியுள்ளவனுமாவான்.
- பல கலை, கல்வி மேம்பட்டவன்
- அடங்காத காளை போன்று வலிமையுடையவன்
- வளர்ந்த உயரமான அகல தோள்கள் உள்ளவன்
- இவையெல்லாம் பொருந்தியவனே சந்திர நவாம்சத்தில் பிறந்தவனாவான்.
அஸ்வினி 4ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
அஸ்வினி 4ம் பாதத்தில் சூரியன் நின்றால்:
- நல்ல புத்திசாலி,
- தன் மக்களிடையே தலைவன்,
- சர்வாதிகாரியும் ஆவதுண்டு
- தன் கடமை பொறுப்புகளை ஒழுங்காக செய்து முடிப்பவன்
- அதிகமாக பயணம் செய்பவன்
- கடைசி காலத்தில் நல்ல அதிர்ஷ்டம், பாக்கியம் உண்டு
- இது சூரியன் 10 முதல் 11 வது பாகைக்குள் இருந்த சிறப்பு பலன்.
அஸ்வினி 4ம் பாதத்தில் சந்திரன் நின்றால்:
- பெரும் கல்வி,
- பல துறை கல்வி உண்டு
- அரசாங்க பெரும் பதவிகள் வகிப்பதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டு
- பெரிய மருத்துவர்கள், உயர்மட்ட அதிகாரிகளும் இவர்கள் ஆவதுண்டு.
- செவ்வாய் நின்றால்
- அதிக நல்ல சந்ததி உண்டு
- கடமை உணர்வு அதிகம்
- மெல்லிய மேனி
- 13, 15 வயதுக்குள் நல்ல பொறியாளன் ஆவதுண்டு
- இந்த செவ்வாயை குரு பார்த்தால் நல்ல பூர்வீக சொத்து கிடைக்கும்
அஸ்வினி 4ம் பாதத்தில் புதன் நின்றால்:
- ஏழ்மை அதிகம்
- நல்ல நடத்த இராது
- தன் தொழில், வாணிபத்தில் தோல்வி தான் அதிகம்.
- குரு பார்த்தால் எழுத்தாளன், நூலாசிரியர் ஆவதுண்டு.
- குரு நின்றால்
- வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பவன்
- பேரும் புகழும் பாக்கியமும் தனமும் ஏற்படும்
- இவன் கீழ் வெகுமக்கள் பணிபுரிவர்
- கடமை உணர்வுள்ள நன்மக்கள் உண்டு
- போட்டி பந்தயம் லாட்டரி முதலியவற்றில் சிலசமயம் வெற்றி ஏற்படும்
அஸ்வினி 4ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்:
- சிறந்த திரைப்பட நடிகை நடிகராக ஆவதுண்டு
- இசைக்கலைஞன்,பாடகன், வாத்திய கலைஞன் ஆவதுண்டு.
- நல்ல எழுத்து திறன் உண்டு
- சூரியன் பார்த்தால் மண வாழ்க்கை கெடும்
- திருமணம் மிக இளம் வயதிலேயே நடக்கும்
அஸ்வினி 4ம் பாதத்தில் சனி நின்றால்:
- பொதுவாக மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை உண்டு.
- அதிக சமயப்பற்று ஆசாரம் இவற்றை பின்பற்றுபவன்
- சூதாட்ட பழக்கம் ஏற்படும்
- சூரியன் பார்த்தால் பயிர் தொழில் மூலம் லாபம், மிராசுதாரர் ஆவான்
- ஆனால் திருமணத்தடை அல்லது திருமணம் மூலம் துன்பம் உண்டு.
அஸ்வினி 4ம் பாதத்தில் ராகு நின்றால்:
- தைரியம், வலிமை உண்டு
- மெல்லிய உடல் உள்ளவன்
- வாயுத்தொல்லை, செரியாமை உண்டு
- சூரியன் பார்த்தால் அதிர்ஷ்டம் எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவான்
- எந்த சிக்கலான சூழ்நிலைகளிலும் இவனை காப்பாற்ற ஆள் வரும்
அஸ்வினி 4ம் பாதத்தில் கேது நின்றால்:
- தன் பிறந்த ஊர் விட்டு ஓடுபவன்
- பிறர் சாப்பாட்டை பங்கு போட்டுக் கொள்வான்
- ஆயுள்காரகன் ,ஆயுள் பாவகம் வலுக்காவிட்டால் முப்பது வயது வரைதான் வாழ்வான்
கால சக்கர தசை | வருடம் |
கடக சந்திர தசை | 21 வருடம் |
சிம்ம சூரிய தசை | 5 வருடம் |
கன்னி புதன் தசை | 9 வருடம் |
துலாம் சுக்கிர தசை | 16 வருடம் |
விருச்சிக செவ்வாய் தசை | 7 வருடம் |
தனுசு குரு தசை | 10 வருடம் |
மகர சனி தசை | 4 வருடம் |
கும்ப சனி தசை | 4 வருடம் |
மீன குரு தசை | 10 வருடம் |
பரம ஆயுள் | 86 வயதாகும் |