ஆற்றுக்கால் பகவதி அம்மன்
பகவதி அம்மன் வரலாறு:
கேரளா மாநிலத்தில், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் எனும் ஊரில் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பகவதி என்றால் தெய்வீகமான பெண் என்று பொருள் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு
2009 ஆம் ஆண்டில் இத்திருத்தலம் நடத்திய விழாவில் 25 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். இதற்காக இவ்வாலயத்திற்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது. சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகி மதுரை மாநகரையே எரித்ததும் இறையருளால் முக்தியடைந்தார். பின் ஆற்றுக்காலில் தங்கி இன்றும் அவ்வூர் மக்களை காத்து வருகிறாள்.
பொங்கல் மஹோத்சவம் என்பது இக்கோவிலின் மிக முக்கியமான பண்டிகையாகும். மேலும் கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி என தல புராணங்கள் தெரிவிக்கின்றன.
பரிகாரம் :
பொங்கல் தினத்தன்று 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் தலொப்பொல் என்னும் பூஜையை ஆரோக்கியம், செல்வம், மற்றும் குடும்பத்தின் நலத்திற்காக செய்து வருகின்றனர். மேலும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஏழுநாட்களுக்கு கோவிலில் தங்கி 1008 முறைகள் அம்மனை பணிந்து வணங்கி குத்தியாட்டம் எனும் பூஜையை செய்ய அம்மனின் அருள் கிடைக்கும் மேலும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும், பக்தர்கள் எடைக்கு எடை வேண்டிக் கொண்ட பொருள்களை, துலாபாரம் வழங்கும் நிகழ்ச்சியும் இங்கு மிகவும் பிரசித்தம் ஆகும்.
வழித்தடம்:
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து பேருந்துகள் ஆற்றுக்காலுக்கு செல்கிறது.