Homeஆன்மிக தகவல்பெரியோர்களை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் !

பெரியோர்களை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் !

பெரியோர்களை வணங்குங்கள்!

 சிவனருளால் சிரஞ்சீவி வரம் பெற்ற மார்க்கண்டேயரின் சரிதத்தில் பலரும் அறியாத ஒரு ரகசியம் உண்டு என்பார்கள் ஆன்றோர்கள். மிருகண்ட மகரிஷி தன் மகனுக்கு உபநயனம் செய்து வைத்தார். பெரியவர்கள் யாரை கண்டாலும் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் என்பதை மார்க்கண்டேயனுக்கு சொல்லிக் கொடுத்தார். 

ஒருமுறை அவர்கள் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர் மார்க்கண்டேயன் அவர்களைப் பணிந்து வணங்கினான் சப்தரிஷிகளும் தீர்க்காயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார்கள் அதன்பிறகு அவர்களுக்கு மார்க்கண்டேயனின் ஆயுள் குறித்த செய்தி தெரிந்தது. ரிஷிகள் திகைத்தனர் ஒருவேளை தங்களின் வாக்கு பொய்த்து விடுமோ என்று எண்ணியவர்கள் இதற்கு விடை தேடி அவனை அழைத்துக்கொண்டு பிரம்மலோகம் சென்றனர். அங்கு மார்க்கண்டேயன் பிரம்மனை வணங்க அவரும் மரபுப்படி தீர்க்காயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார். 

பெரியோர்களை  வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் !

சப்தரிஷிகளும் பிரம்மாவும் வாழ்த்தி விட்டபின் மார்க்கண்டேயனின் உயிரைப் பிரிக்க முடியுமா? பெரியவர்களின் வாக்கு பொய்த்து போக அந்த பரமேஸ்வரன் விடுவானா? ஆகவே காலனை காலால் உதைத்து மார்க்கண்டேயரை காத்தருளினார் இறைவன் என்கிறது புராணம்.

 ஆகவே இளையோர்கள் எப்போதும் வயதில் பெரியவர்களை பார்த்தாலும் அவர்களை வணங்குங்கள் அவர்களின் வாழ்த்து உங்களை வாழவைக்கும்..

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!