சந்திரன் எந்த கிரகத்துடன் இணைந்தாலும் அது எளிதில் சங்கமம் ஆகி விடும். புதனும் சந்திரனும் சுபகிரகங்கள். இரண்டு சுபகிரகங்கள் இணைந்தால் பலன்கள் அதிகமாக சுப பலன்களாகவே இருக்கும். அசுப கிரகங்கள் தொடர்பு கொள்ளாத பட்சத்தில் புதன் என்பது சுப கிரகமாக இருந்தாலும் சந்திரனுக்கு பகை கிரகமாக உள்ளது.
பொதுவாக சந்திரன் எந்த கிரகத்துடனும் பகை கொள்வதில்லை. சந்திரன் என்பது தேய்பிறை சந்திரனாக இருந்தால் அசுபமாக செயல்படும். வளர்பிறை சந்திரனாக இருந்தால் புதனுடன் சுபமாக செயல்படும்.
இந்த இரு கிரகங்கள் இணைவால் சிற்சில இடர்பாடுகளும் உண்டு.
புதன் + சந்திரன் இணைவு
புதனும் சந்திரனும் சப்தமமாக இருப்பது. புதனும் சந்திரனும் பரிவர்த்தனை பெறுவது. திரிகோணத்தில் இந்த கிரகங்கள் தொடர்பு கொள்வது. மேலும், சந்திரனும் புதனும் ஒரே ராசிக்கட்டத்தில் இணைந்து இருப்பது. புதன் சந்திரனின் நட்சத்திரத்திலோ சந்திரன் புதனின் நட்சத்திரத்திலோ இருப்பது ஆகியவையும் புதன் + சந்திரன் இணைவை குறிக்கும்.
ஜோதிடப் புராணத்தில் கிரகங்களின் உறவு
ஜோதிடத்தின் புராணப்படி சந்திரனின் மகனாக புதன் இருக்கிறார். இந்த புதன் தேவகுருவின் மனைவிக்கும் சந்திரனுக்கும் பிறந்த புத்திரன் ஆவார். சந்திரன் புதன் மீது எவ்வளவு பரிவு அன்பு கொண்டாலும் புதன் சந்திரன் மீது பகையுடன் நோக்குகிறார் என்பதாகும்.
இந்த உறவை நாம் தீர்க்கமாக கிரகங்கள் நட்பு – பகையை கொண்டு மனதில் இருத்திக் கொள்ளலாம்.
சங்கம யோகத்தின் பலன்கள்
இந்த கிரக இணைவு கொண்டவர்கள் அதிகமான நட்பு வட்டத்தை கொண்டிருப்பர். ஆனால், நண்பர்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பார்கள் என்பது நிதர்சனம்.
மிகவும் புத்திசாலிகளாகவும் யதார்த்தமாக பேசுபவர்களாகவும் இருப்பர். அறிவின் ஸ்திரத்தன்மை இவர்களிடம் உண்டு.
இவர்கள் அதிகமாக எழுத்து துறையிலோ, கல்வித் துறையிலோ, மார்க்கெட்டிங் துறையிலோ இருப்பார்கள்.
இவர்கள் பார்ப்பதற்கு எப்பொழுதும் இளமையான தோற்றத்துடன் இருப்பர்.
பத்ரமதி யோகம் என்பது சுப கிரக இணைவுகளால் சுபமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு கிரகம் நீசமாகும் பொழுதோ அல்லது அசுபத்தன்மையில் இருக்கும் போதோ மாறுபட்ட பலன்களை கொடுக்கும்.
இவர்கள் நண்பர்களுடன் இணைந்து கேலி, கிண்டல் செய்வதில் வல்லவர்கள். இவர்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்புடன் இருக்கும் என்பது நிச்சயம்.
இவர்கள் விழாக்கள், சபை கூட்டங்கள், விசேஷங்கள், திருவிழாக்களுக்கு விரும்பிச் செல்லும் குணமுடையவர்கள்.
இவர்கள் எப்பொழுதும் அமைதியாக இருப்பார்கள். ஆனால், உணர்ச்சிவசப்பட்டால் இவர்கள் நடந்து கொள்ளும் நிலை அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுக்கும் என்றால் மிகையில்லை. இவரா அப்படி நடந்து கொண்டார் என கேட்கும் அளவிற்கு வியப்பாக இருக்கும்.
இவர்கள் காதல் செய்வதில் வல்லவர்கள். எல்லாவற்றின் மேலும் ஆசைப்படும் குண முள்ளவர்களாக இருப்பார்கள்.
தாங்கள் வேலை செய்யும் தலைமை அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பர். மனம் சில நேரங்களில் சாதாரண நிலை யிலும் சில நேரங்களில் அசாதாரண நிலையிலும் இருக்கும்.
எதிர்மறை பலன்கள்
உணர்ச்சிவசப்பட்டு சில சமயங்களில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.
தேய்பிறை சந்திரனோடு சேர்ந்த புதனுக்கு அசுபமான பலன்கள் கண்டிப்பாக இருக்கும்
அசுப கிரகங்கள் இந்த இரு கிரகங்களையும் கடக்கும் பொழுதும் பார்வை செய்யும் பொழுதும் அசுப பலன்கள் கண்டிப்பாக உண்டு.
விருச்சிகத்தில் புதன் + சந்திரன் இணைவானது சுப பலன்களையும் அசுப பலன்க ளையும் இணைந்தே தரும்.
இந்த யோகத்தில் வரும் பெயர்கள்
இந்த புதன் + சந்திரன் இணைவு உள்ளவர்களுக்கு முத்துக்கிருஷ்ணன், இளங்கோ கிருஷ்ணன், பச்சை பெருமாள், அமுதப் பெருமாள், சங்கமேஸ்வரர், சீனிவாசப் பெரு மாள், பச்சை முத்து, கண்ணன் போன்ற பெயர்களும் இன்னும் பல பெயர்களும் தொடர்பில் வரலாம்.
இவர்கள் திருப்பதி பெருமாளையும் ஈரோடு அருகில் உள்ள சங்கமேஸ்வரரையும் வழிபடுதல் நலம் தரும்.