12 வீடுகளில் சனி நின்ற பலன்கள்
கிரகங்களில் சனி(sani) கிரகம் மிக வலிமை பெற்றது. இது நன்மை தீமைகளை அளவோடு கணக்கிட்டு கொடுக்கும் நீதிதேவன் ஆகும். மிக மெதுவாக பலன்களைத் தரும். மெதுவாக நகரும்.
இது பன்னிரு ராசியை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன ஒரு ராசியில் ஏறக்குறைய முப்பது மாதங்கள் தங்கி இருக்கிறது. புராண கதையில் சனி கிரகத்தை ஒரு கால் ஊனமுற்றவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.இப்போது விஞ்ஞானிகள் சனி கிரகத்தின் ஒரு பகுதி உடைந்து இருக்கிறது என கண்டறிந்துள்ளனர் அப்படி உடைந்து பூமியில் விழுந்த பகுதிதான் ஆப்பிரிக்கா கண்டம் என்றும் கூறுகின்றனர்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் வேறு பாலான மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இருக்கின்றன. சனி கிரகத்தின் தன்மையை ஒத்து இருக்கின்றன என்கின்றனர்.கிரகங்களில் சனி கிரகத்திற்கு மட்டுமே ஈஸ்வரப்பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது சனி கிரகத்தை சனீஸ்வரன் என்று குறிப்பிடுவர்.கிரகங்களின் தீய பலன்களை குறைக்க நாம் தெய்வங்களை வேண்டுகிறோம் அத்தகைய தெய்வங்களையே சனிக்கிரகம் ஆட்டிப்படைத்து இருக்கும் நிகழ்ச்சிகள் புராணங்களில் பல இருக்கின்றன.
இத்தகைய சனி(sani) கிரகம் எந்த பாவத்தில் அமர்ந்தால் என்ன பலன்களைத் தருவார் என்பதை பார்ப்போம்.
1ல் சனி இருந்தால் (Sani in First House)
ஒருவர் தம் ஜாதகத்தில் முதல் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர் ,உயரமான உடலமைப்பு, குறைவான ஆயுளும் கொண்டவராய் இருப்பார்.இவர் மந்த புத்தியும், மதப்பற்று இல்லாதவர்.மனதில் நிம்மதி இல்லாமல் ,வாழ்வில் விரக்தி ஏற்படும்.உடல் நலம் பாதிக்கப்பட்டு உறவினர்களை விட்டுப் பிரிந்து வாழும் நிலை ஏற்படும். துலாம் ,மகரம், கும்பம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் அமைந்தால் வாழ்க்கை வசதிகள், அரசாங்க ஆதரவு, மிகுந்த வருமானம், பதவிகள், ஆகியன அமையும். இதனால் மகிழ்ச்சியுடனும் ,செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டு.இருப்பினும் லக்கினத்தில் சனி அமையப் பெற்றவர் கிரக வழிபாடு செய்வது நலம் தரும்.
2ல் சனி இருந்தால் (Sani in Second House)
இரண்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்க்கு மாமிச உணவுகளில், அடிக்கடி மது அருந்துவதில் ஈடுபாடு உண்டாகும்.இவருக்கு பற்கள் விகாரமாய் அமைந்திருக்கும்.கல்வி பெற வாய்ப்பு இருக்காது.இவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்களிடம் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருப்பர்.இவர் கண்பார்வையில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.நோயாளியான மனைவியை பெற்று துன்பம் அடையக்கூடும்.சனி கிரகம் இரண்டாம் பாவத்தில் அமைவது நல்லது என்று ஆனால் கிரக தோஷ பரிகார பூஜைகள் மூலம் இதற்கு பரிகாரம் காணலாம்.
3ல் சனி இருந்தால் (Sani in Third House)
மூன்றாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,இளமையில் துன்பம், முதுமையில் யோகம் உள்ளவராய் இருப்பார்.எப்போதும் எவரிடமாவது சண்டையிடும் குணம் அமைந்திருக்கும்.இவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.குறைவான உணவு உட்கொள்வர்.வாழ்வில் அவ்வளவு மகிழ்ச்சி இராது.உறவினர் சகோதரர் ஆகியோரால் தொல்லை ஏற்படலாம்.இவருக்கு ஜோதிடம், வைத்தியம் ,மாந்திரீகம் ஆகியவற்றோடு தொடர்பு அவற்றில் அறிவும் ஏற்படும்.சகோதரரை பிரிந்து வாழ நேரிடும்.பயணம் செய்கையில் விழிப்பாய் இருக்க வேண்டும்.இயற்கையோடு அனுசரித்து செல்லாமல் ஏறுக்குமாறாக நடந்தால் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதையும் கொஞ்சம் படிங்க : புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்
4ல் சனி இருந்தால் (Sani in Fourth House)
நான்காம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,தம் தந்தையின் சொத்துக்களை இழக்க நேர்வதாலும் , தாயாரின் வலிமை குறைவதாலும் துன்பப்படுவான்.உறவினர் விரோதத்தை தவிர்க்க வேண்டும்.மந்தபுத்தியாலும் ,முன் கோபத்தாலும் வறுமை சூழாதவாறு தம்மை காத்துக்கொள்ள வேண்டும்.நான்காம் பாவம் சனி கிரகத்திற்கு நல்ல பாவம் அன்று, அப்படி அமையப் பெற்றவர் கிரக தோஷ பரிகார பூசை செய்து நலம் பெறலாம்.
5ல் சனி இருந்தால் (Sani in Fifth House)
ஐந்தாம் பாவத்தில் சனி கிரகம் இருக்கப் பெற்றவருக்கு,குழந்தைபேறு வாய்க்காமல் போகலாம் அல்லது பெற்ற குழந்தைகளை இழக்க நேரும்.திருட்டுத்தனமான குணங்களும் வாழ்வில் விரக்தி மனப்பான்மையும் ஏற்படாதவாறு விழிப்பாய் இருக்க வேண்டும்.இவர் தேவதை வழிபாடு செய்வார்.வறுமை, நோய் ஆகியவற்றால் துன்பம்முறா வண்ணம்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவர் சுபர் கிரக பார்வை பெற்றால் சிறிதளவு நலம் பெறலாம்.ஐந்தாம் பாவத்தில் சனி அமையப் பெற்றவர் கிரக தோஷ பரிகார பூஜை செய்யவேண்டும்.
6ல் சனி இருந்தால் (Sani in Sixth House)
ஆறாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்க்கு,வாதநோய் ,வயிற்றுக்கோளாறு, கடன் தொல்லைகள், வழக்குகள் ,பொருளாதார பிரச்சனைகள் ஆகியன ஏற்படலாம்,உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.இத்தனையும் மீறி ஆறாம் பாவம் துலாம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆகியராசிகளாக இருந்தால் இந்தப் பலன்கள் யோகபலன்களாக மாறி விடும். வாழ்க்கை,வசதி ஆகியன அமையலாம்.
7ல் சனி இருந்தால் (Sani in Seventh House)
ஏழாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,திருமணத்திற்குப் பிறகு மனைவியாலும், மனைவியின் உறவினராலும் பல தொல்லைகள் அனுபவிக்க நேரிடும்.இவர் இரண்டாவது மணம் செய்ய நேரிடும்.அந்த இரண்டாவது மனைவியும் குணம் கெட்டவளாக இருக்க வாய்ப்புண்டு.மனைவி ,குடும்பம் ஆகியவற்றைக் பிரிந்து வாழ நேரிடலாம்.எப்போதும் ஏழாம் பாவத்தில் எந்த கிரகமும் இருக்கக்கூடாது ஏழாம் பாவத்தை சுபகிரகங்கள் பார்ப்பதும் ஏழாம் பாவத்தில் உச்ச ஆட்சி ஸ்தானங்களில் இருப்பதும் நன்மை தரும்.ஏழாம் பாவம் ஏறுக்குமாறாக அமைந்தால் ஏகாந்த வாழ்க்கைதான் ஏற்படும்.
8ல் சனி இருந்தால் (Sani in Eighth House)
எட்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,பயனற்ற நீண்ட ஆயுள் கொண்டவர்.இவர் தீராத நோய்கள், மூல நோய், வாயுத் தொல்லை ஆகியன ஏற்படா வண்ணம் , தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.தரித்திரம், நோய் ஆகியவற்றால் குடும்பத்தை கவனிக்க இயலாத நிலை ஏற்படும்.எந்த வழியிலும் துன்பத்தை தரும் அமைப்பு இது.இப்படி எட்டாவது பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர் சனி கிரக தோஷ பரிகார பூஜைகள் செய்து சனி பகவானை வழிபாடு செய்தால் நலம் பெறலாம்.
9ல் சனி இருந்தால் (Sani in Ninth House)
ஒன்பதாவது பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,கடற்பயணத்தால் ஆபத்தை அடைய வாய்ப்பு உண்டு.நோயாளியான தந்தையை காப்பாற்றும் நிலை ஏற்படும்.இவர் கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவார்.சோதிட சாஸ்திரத்தில் விருப்பம் உள்ளவராக இருப்பார்.ஒன்பதாம் பாவம் யோகபாவம் என்றாலும் இந்த பாவத்தில் பாவ கிரகங்கள் தீய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல,இந்த ஒன்பதாம் பாவம் துலாம் தனுசு மகரம் கும்பம் மீனமாக இருந்து அதில் சனி அமர்ந்து இருந்தால் நல்ல பலன்கள் ஏற்படும்,இந்த ஒன்பதாம் பாவத்தை பலம் பெற்ற கிரகங்களில் ஏதாவது ஒன்று உச்சத்தில் அல்லது ஆட்சியில் இருக்கும் கிரகங்களின் பார்வை அமையுமானால் நற்பலன்கள் கிடைக்கும்.ஒன்பதாம் பாவத்தில் அமையும் தீய கிரகங்களின் தீமையைப் போக்க கிரக தோஷ பரிகார பூஜைகள் செய்வது நலம் பெறும்.
மேஷம் | சனி நீசம் |
ரிஷபம் | சனி நட்பு |
மிதுனம் | சனி பகை |
கடகம் | சனி பகை |
சிம்மம் | சனி பகை |
கன்னி | சனி நட்பு |
துலாம் | உச்சம் |
விருச்சிகம் | சனி பகை |
தனுசு | சமம் |
மகரம் | சொந்த வீடு |
கும்பம் | சொந்த வீடு |
மீனம் | சமம் |
10ல் சனி இருந்தால் (Sani in Tenth House)
சனி கிரகங்கள் பத்தாம் பாவத்தில் அமர்ந்து இருந்தால் அதற்குரிய பலன்கள்.தீயவர்கள் அல்லது தீய காரியங்களுக்கு உதவும் தேவதைகளை வழிபடுவார்.கூட்டத்தின் தலைவராக இருப்பார்.இவருக்கு தொடக்க காலத்தில் மகத்தான வெற்றிகரமான வாழ்க்கையும் பிற்காலத்தில் சரிவான வாழ்க்கையும் அமையும்.முன்னோர் சொத்துக்களை இழக்கும் அவயோகம் ஏற்படும்.திருமண வாழ்வில் தகராறு ஏற்பட்டு மனைவியை பிரியும் நிலை ஏற்படும்.ஊரை விட்டு வெகு தூரத்தில் உள்ள ஊருக்குச் சென்று பணியாற்றி வாழ வேண்டிய நிலை ஏற்படும்,
11ல் சனி இருந்தால் (Sani in Eleventh House)
பதினோராம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,அரசாங்க வேளையில் பொருள் ஈட்டுவார்.ஞானமாய் இருப்பார், மிகுந்த சொத்துக்கள் சேர்ப்பார்.சமுதாயத்தில் மதிப்பு உள்ளவராய் இருப்பார்.இவருக்கு மனைவி மக்களுடன் மகிழ்ச்சிகரமாக வாழும் வாழ்க்கை அமையும்.இவருக்கு வீடு, வாகனம்,ஆடு, மாடு ஆகியவற்றுடன் வசதியான வாழ்க்கை அமையும்.
12ல் சனி இருந்தால்(Sani in Twelth House)
பன்னிரெண்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்.எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.நெருங்கிய இவர் உறவினர்களே இவருக்கு எதிரிகளாக மாறி விடக்கூடிய வாய்ப்பு உண்டு.இவர் பணம் ஈட்டுவதில் குறிக்கோளாய் இருப்பவர்.இவரது கண்டிப்பான போக்கு இவருக்கு எதிரிகளை ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.தாம் விரும்பிய செயலை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என வெறி உள்ளவர்.பிரச்சனைகளால் மனைவி குழந்தைகள் உறவினர் நண்பர் ஆகியோருடன் பகை ஏற்படலாம்.இதுவரை பன்னிரு பாவங்களில் சனி பகவான் அமர்ந்தால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை பார்த்தோம் இனி சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் என்னென்ன தகுதிகளை பெறுகிறார் என்பதை பார்ப்போம்
Ayya vanakkam ayya Nan kadaga lagnam lagnathil suryan budhan 2 il Chandra 3 il sukran 4 il guru rahu 8 il sani 10 il kethu 12 il sevvai ayya pariharam sollungal ayya
மிகவும் சிறப்பான ஜாதகம்
02.05.1992
Time 1.35 pm
Husband
08.03.1993
Time 9.30 am
Engaluku sandai varuthu pathu soluga plz over ra
அய்யா வணக்கம்
லக்னம் மகரம் 12 ஆம் விட்டில் சனி பலன் எப்படி இருக்கும் ராசி மேஷம்.
பிறந்த தேதி 6.6.2005 பிறந்த நேரம் 8.37 காலை
பிறந்த ஊர் பாண்டிச்சேரி இவரின் ஜாதகம் எப்படி உள்ளது நன்றி வணக்கம்
இந்த ஜாதகர் கடக லக்கினம் ரிஷப ராசியில் பிறந்துள்ளார் தற்போது ராகு தசா குரு புத்தி நடை பெறுகிறது 9இல் ராகு இருந்து திசையை நடத்துவதால் வெளிநாடு யோகம் ,வெளிமாநில வேலைவாய்ப்புகள் கிடைக்கும்
லக்கினாதிபதி சனி மறைந்துள்ளதால் கடின முயற்சிக்கு பின் தான் வெற்றி கிட்டும்.
Poorna, 18.06.1996, 3.45, mithunam, poonarpoosam yen life yepdi erukum iyya, no parents, husbend sari Ila raghu, 19.03.1987, thulam, swathi, measha lakanam yena aga poothu yen life therila iyya neraya prblemah varuthu plsss reply panunga
kindly Contact Private
பிறந்த தேதி 28.1.1979 பிறந்த நேரம் 19.28 மாலை
பிறந்த ஊர் போர்ட் பிளேர்.
கடன் பிரச்சினை தீருமா,சொந்தவீடு கட்டும் யோகம் அமையுமா
வெளிநாடு செல்லும் யோகம் அமையுமா
நன்றி
Place karaikal date of birth 16-3-1991
T. Nelavarasan பிள்ளை என் marrige Aagavilai
Ragu kedhu yes so epuzhu marrige agum sir pls
உங்கள் பிள்ளையின் பிறந்த நேரத்தை தெரிவிக்கவும் ?
வணக்கம் ஐயா…நான் parthiban 05:12:1994…time 01.00 pm..salem tamilnadu…naan இதுவரை நல்ல பலனை அனுபவிக்கவில்லை..படாத கஷ்டம் இல்லை…சிறுவயதில் இருந்து கஸ்ட்டம் இப்போதும் உழைத்து கொண்டு இருக்கிறேன்…இனி வரும் காலம் நன்றாக இருக்குமா?இருக்காதா?என்று கூறுங்கள்…
உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது.
06.08.2001 பிறந்த தேதி
சதயம் 1 பாதம் கும்ப ராசி
மிதுன லக்னம்
லக்னத்தில் குரு ராகு சுக்ரன்
2ல் சூரி புதன்
6ல் செவ்வாய்
7 ல் ராகு
9ல் சந்திரன்
12ல் சனி
பலன்கள் , தோஷம், திருமணம் எப்போது ???