Homeஆன்மிக தகவல்புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி

புரட்டாசி மாதத்தில் பிறந்த குழந்தைகள் அறிவுடனும், திறமையுடனும், ஞானம் மிக்கவராகவும் இருப்பார்கள்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்கள். சிறுவயதிலேயே நூல்களை புரட்டி படிப்பார்கள்.

புரட்டாசியில் பிறந்த இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள்.இவர்கள் அரிய வகை நூல்களை சேகரிப்பார்கள். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு.

இம்மாதத்தில் பிறந்தவர்கள் படிக்காத மேதைகளாகவும், படித்த பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குவார்கள்.
தன் உழைப்பினாலும், திறமையினாலும் உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். இவர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார்கள். செய்யும் காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.

புரட்டாசி

இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். தன் முயற்சியால் பல செயல்களை செய்து வெற்றி காண்பார்கள்.இவர்களிடம் கற்பனை சக்தியும், தத்துவங்களும் நிறைந்து காணப்படும்.இவர்கள் மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சாமர்த்தியசாலிகள்.ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடமாட்டார்கள். எதையும் திறம்படச் செய்ய வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்.

மற்றவர்கள் செய்யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தெரியும். அதை ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக எடுத்துக்கூறி விடுவார்கள். பிறரை புகழ்ந்தோ அல்லது குறுக்குவழிகளை கடைபிடித்தோ காரியத்தை சாதிப்பது இவர்களுக்கு பிடிக்காது.
சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள்.

நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்து காலவரம்பிற்குள் செய்வதை திருந்தச் செய்வார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!