கால பைரவர்
மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சேத்திரபாலபுரம். இங்கே தனிக்கோயில் கொண்டிருக்கும் கால பைரவர் ‘வாஸ்து தோஷங்கள்’ நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் அருளும் தெய்வமாக திகழ்கிறார்.
சிவபெருமானின் அம்சமாய் தோன்றிய பைரவர். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்ந்து அவரின் ஆணவத்தை அடக்கினார் என்கின்றன புராணங்கள். இதனால் பைரவருக்கு தோஷம் உண்டானதை தொடர்ந்து திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரின் வழிகாட்டுதலின்படி காலபைரவர் தோஷம் நீங்க பெற்ற இடம் தான் இந்த ஷேத்திரபாலபுரம்.
இங்கே சூலை நோய், கை, கால் பிடிப்பு, மூட்டு வலி உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்கி அருளும் சஞ்சீவியாக திகழ்கிறாராம் கால பைரவர். இங்கு வந்து இந்த பைரவருக்கு தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ‘வாஸ்து தோஷம்’ உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி விடுவதாக ஐதீகம். அதேபோல் 11 மிளகுகளை சிவப்பு துணியில் சுற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த பொருளை திரும்ப பெறுவதுடன் வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் கொஞ்சம் படிங்க : வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!
அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 54 முந்திரி கொட்டைகளை மாலையாக தொடுத்து காலபைரவருக்கு அணிவித்து தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கின்றார்கள் பக்தர்கள்.
இதுபோன்ற பிரார்த்தனைகளை அஷ்டமி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் செய்வது விசேஷம். அதாவது 11 அஷ்டமி தினங்கள் உள்ளது 11 ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட வேண்டும். ஒவ்வொரு முறையில் அப்படி வழிபட்டு கால பைரவரை 11 முறை வலம் வந்து வழங்கினால் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.