நோய்கள் தீர்க்கும் முக்கியமான திருத்தலங்கள்
ஸ்ரீரங்கம்(Srirangam)
நோய் தீர்க்கும் கடவுள் ஸ்ரீதன்வந்திரி பெருமாள் ஆகும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீதன்வந்தரி பெருமாளுக்கு சனிக்கிழமை திருமஞ்சனம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட தீராத நோய் தீரும்.
வைத்தீஸ்வரன் கோவில்(Vaitheesvarankovil)
இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதர் வணங்கி வழிபட்ட தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும்.இங்கு வழங்கப்படும் திருச்சாறுருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும்.
சங்கரன் கோவில்(Sankarankovil)
ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில்உள்ளதுசங்கரன்கோவில் இங்கு தரப்படும் புற்றுமண் பிரசாதம் சகல சரும நோய் குணமாகும் அற்புதமாகும்.
நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடு.
திருச்செந்தூர்(Thirusendur)
விசுவாமித்தரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டு கொள்வதும் நோய் தீரும்.
ஸ்ரீ முஷ்ணம்(Srimushnam)
விருத்தாச்சலத்தில் அருகில் உள்ளது இங்குள்ள பூவராகசுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஷ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.
பழனி(Pazhani)
இங்கு ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகன் இவ்வாலயத்தில் அதிகாலையில் தரப்படும் கபினி தீர்த்தம் மற்றும் சாற்றுச் சந்தனம் எந்த நோயையும் குணமாக்கும் ஆற்றல் படைத்தது என்றால் அது மிகையாகாது
சின்னபாபு சமுத்திரம்(Chinnababu samuthiram)
விழுப்புரம் -பாண்டிச்சேரி சாலையில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது இங்கு சித்தர் படேசாயபு ஜீவசமாதி உள்ளது. இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வழிபாடு நடத்துகின்றனர் .செவ்வாய், வியாழன்,ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் வழிபாட்டில் கலந்துகொள்ள கேன்சர், தொழு நோய், காசநோய் போன்ற நோய்கள் குணமாவதுதிண்ணம்
பழங்கானத்தம்(Pazhanganatham)
மதுரையில் உள்ள பழங்கானத்ததில் உள்ள இருளப்பசுவாமி திருக்கோவிலில் தரப்படும் தீர்த்தம் விஷக்கடிகளுக்கு அருமருந்தாகும். அவர்கள் சொல்லும் பத்தியப்படியிருக்க நோய் விரைவில் குணமாகிறது.இங்கு முட்டை காணிக்கையாக பெறப்படுகிறது.
சிவகாசி(Sivakasi)
இங்கு தேரடிக்கு அருகில் உள்ள கருப்பசாமி கோவிலில் அனைத்து நாட்களிலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. தீர்த்தம் குடிக்க கொடுப்பதில்லை பிறகு கருப்பண்ணசாமி மையை நெற்றியில் இடுகிறார்கள்.
அனைத்து மதத்தினரும் இங்கு வந்து தங்கள் குழந்தைகளுக்கு தீர்த்தம் எறிந்து மையிட்டு கொண்டு செல்கின்றனர். இங்குபில்லி சூனியம் பேய் பிசாசு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று நாள் வந்து தீர்த்தம் மை இட்டு செல்ல நோய் விரைவில் குணமாவது கண்கூடு.
தாடிகொம்பு(Thadikombu)
திண்டுக்கல் தாடி கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் அனைத்து வியாதிகள் நீக்கும் இலேகியம் மற்றும் தைலம் அமாவாசை தோறும் செய்து தரப்படுகிறது.
இருக்கன்குடி(Irukkankudi)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் ஆயிரம் கண்ணுடையாள் என்றும் அழைக்கப்படுகிறாள். தீராத அம்மைநோய், கண்நோய் மற்றும் கை ,கால் போன்ற வியாதிகளையும் தீர்த்து வைக்கிறாள். சில குழந்தை பெரியவர் ஆகியும் கைசூப்பும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் அவர்களை இங்கு கூட்டி வந்து பச்சை குத்திக் கொள்ள கைசூப்பும் பழக்கத்தை விடுவது கண்கூடு ஆகும். சகல நோய்களையும் தீர்க்கும் அன்னையாக மழையைத் தரும் அன்னையாக மாரியம்மன் இருக்கிறாள்.
திருநின்றவூர்(Thiruniravoor)
சென்னையில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் இருதயாலீஸ்வரர் இருதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கவல்லவர். இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இருதய நோய் வரக் கூடாது என்பதும் இங்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.
கோட்டூர்(Kottur)
விருதுநகர் சாத்தூர் நெடுஞ்சாலையில் R R நகர் அருகிலுள்ள கோட்டூர் இங்குள்ள குருசாமி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் சென்று வழிபாடு நடத்துகின்றனர் இங்கு தரப்படும் என்னை நம் சருமத்தில் உள்ள சிலந்தி கட்டிகள் மற்றும் கட்டிகள் போன்றவற்றை குணமாக்கவல்லவர்
கூரம்(Kooram)
காஞ்சிபுரத்தில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள கூரத்தாழ்வார் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் அரிய சக்தி உள்ளவர்.
திருவீழிமிமலை(Thiruvizhimalai):
தஞ்சை- திருத்துறைப்பூண்டி அருகில் உள்ளதுதிருவீழிமிமலை ஆகும். இங்குள்ள பெருமாள் தன் கண்ணை கொண்டு சிவபூஜை செய்தார் என்பது சிறப்பானதால்ஞாயிறு தோறும் சிவனுக்கு தாமரை மலர் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது இங்கு வந்து வணங்கி வழிபட்டால் கண்நோய் தீரும் என்பது திண்ணம்.
திருவாதவூர்(Thiruvathavoor)
மதுரைக்கு அருகில் உள்ளது இங்குள்ள சிவன் வாதபுரிஸ்வரர் சனி பகவானின் வாதநோய் குணமான திருத்தலம் எனவே இங்கு சிவனை வில்வம் கொண்டு திங்கள் கிழமையும் சனியை சனிக்கிழமையும் விளக்கு போட்டு வழிபட வாத நோய்கள் குணமாகும்.