Home108 திவ்ய தேசம்திவ்ய தேசம் 35 : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் திருக்கோவில், திருவாலி, திருநகரி

திவ்ய தேசம் 35 : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் திருக்கோவில், திருவாலி, திருநகரி

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் திருக்கோவில்

சௌபாக்கியத்தை கேட்ட பொழுதிலே தரக்கூடிய கருணைக் கடல் திருமால்தான் . வித்தியாசம் இல்லாமல் அள்ளிக் கொடுக்கும் அந்த பரந்த மனதுடைய பெருமாள் பக்தர்களைக் கண்டால் சாதுவான பசு.

அக்கிரமக்காரர்களைக் கண்டால் பகவான் சிம்மம்தான். பகவானை நரசிம்ம அவதாரமாக காண விரும்புவோர்க்கு அமைந்த இடம் சீர்காழியிலிருந்து தென் கிழக்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாலி திருநகரியுள்ள பெருமாள் கோயில்தான்.

இந்த ஸ்தலத்திற்கு ஆவிநாடு , பில்வாரண்யம் என்று வேறு பெயர்களும் உண்டு.

அழகியசிங்கர் கோயில்

மூலவர் லஷ்மி நரசிம்மர் லெஷ்மியை வலது பாகத்தில் தழுவிக்கொண்டு தரிசனம் தருகிறார்.

உற்சவர் திருவாலி நகராளன்.

தாயார்-அம்ருதகடவல்லி.

தீர்த்தம் இலாஷணி புஷ்கரணி

விமானம் அஷ்டாக்ஷர் விமானம்.

இன்னொரு கோயில் திருநகரி இரண்டும் தனித்தனியாக இருந்தாலும் ஆழ்வார்கள் ஒரே திவ்வியத் தேசமாக மங்களா சாசனம் செய்திருக்கிறார்கள் , பஞ்ச லெஷ்மி நரசிம்ம கேடித்திரத்தில் இதுவும் ஒன்று.

இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருப்பதைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் திருமகளிடம் வேண்டியதால் பெருமாளின் சீற்றம் தணிக்க , பிராட்டியார் எம்பெருமானின் வலது தொடையில் வந்து அமர்ந்தார். இறைவனது சீற்றமும் அடங்கியது. தன் தொடையில் வந்தமர்ந்த தேவியை இறைவன் ஆலிங்கனம் செய்து கொண்ட திருக்கோலம் இந்த கோயிலில் காணப்படுகிறது.

திருமங்கை ஆழ்வார் குலி நாட்டை தலைநகராகக் கொண்டு திகழ்ந்தார் . எனவேதான் ஆழ்வாருக்கு ஆவிநாடான் என்ற பெயர். திருமங்கையாழ்வாரின் மனைவி வளர்ந்த இடம் என்ற பெருமையும் உண்டு.

அழகியசிங்கர் கோயில்

இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு

இறைவன் திருமகளை மணந்து கொண்டு அருகிலுள்ள திருநகரிக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது ‘ வேதராஜபுரம் ‘ என்னுமிடத்தில் வழிமறைத்து பெருமாளிடம் வழிப்பறிச் செய்தார் திருமங்கையாழ்வார். பிறகு வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து வருந்த பெருமாள் திருமங்கையாழ்வாரை மன்னித்து உபதேசம் செய்த இடமும் இங்குதான் உள்ளது.

இன்றைக்கும் அதனை நினைவுபடுத்துகிற வகையில் பங்குனி மாதம் உத்திரம் முதல் நாள் இரவு , ‘ வேடுபறி ‘ உற்சவம் நடக்கிறது.

பரிகாரம் :

குடும்ப மனக்கஷ்டம் உள்ளவர்கள் , செய்கின்ற பணியில் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள் , எதிரிகளின் ஆவேசத் தாக்குதலால் தினமும் அவதிப்படுவர்கள் , வாழ்க்கையில் முன்னேற முடியாமல் பலரது முட்டுக்கட்டைகளால் மனம் நொந்து கொண்டிருப்பவர்கள் , கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் , பில்லி சூன்யம் ஏவல் போன்ற துர்தேவதைகளால் மாட்டிக் கொண்டு முழிப்பவர்கள் , இந்த திருவாலியிலுள்ள பெருமாளை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனைக் கஷ்டங்களும் அடியோடு விலகும்.

கோவில் இருப்பிடம் 
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!