மகாளய அமாவாசை
மகாளய அமாவாசையை விட முக்கிய பங்கு வகிப்பது தாங்கள் தாய் தந்தை காலமான திதி தான் என்பது பலருக்கு தெரிவதில்லை.தங்கள் புரோகிதரிடம் சென்று தந்தை காலமான திதி தெரிந்து கொண்டு அன்றைய தினத்தில் திதி சிரார்த்தம் செய்வதே உத்தமம் ஆகும்.
இந்த வருடம் ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 02ந் தேதி (18.09.2024) புதன்கிழமை முதல் மகாளய பட்சம் ஆரம்பம். உங்களுடைய தாய், தந்தையர் எந்த திதியில் காலமானார்கள் என்பதை தெரிந்து கொண்டு மகாளய பக்ஷம் காலத்தில் அந்த திதி அன்று நம்முடைய முன்னோர்களுக்கு மகாளய திதி சிரார்த்தம் கொடுக்க வேண்டும் .
இந்த வருடம் 18.09.2024 புதன்கிழமை முதல் மகாளய பக்ஷம் ஆரம்பித்து 02.10.2024 புதன்கிழமை அமாவாசை அன்று முடிவடைகிறது. பெற்ற மகன்கள் கொடுக்கும் தில தர்பனத்தாலும் திதி சிரார்தத்தாலும் மட்டுமே பித்ரு தேவதைகள் திருப்தி அடைவார்கள்.
எந்த கோவிலிலும், எந்த விதமான பூஜையாலும் பித்ரு தேவதைகள் திருப்தி அடைவது இல்லை. பெற்ற மகன்கள் இருந்து திதி சிரார்தம் செய்யாமல் கோவிலில் செய்யும் பூஜைகளால் தெய்வங்கள் திருப்தி அடையாது என வேத புராணங்கள் கூறுகின்றன.
ஆகையால் உங்களுடைய தாய், தந்தையர்க்கு நீங்களே தான் திதிசிரார்தம், திலதர்பணம், பிண்டபிரதானம் செய்து பித்ரு தேவதைகள் ஆசி பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மகாளயபட்ச காலமான 15 நாட்களில் எந்தெந்த நாளில் திதி சிரார்த்தம் தில தர்ப்பணம் பிண்டபிரதானம் செய்தால் என்ன என்ன பலன் என்று பார்க்கலாம்.
1. பிரதமை – செல்வம் பெருகும்.
2. துவிதியை – வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
3. திருதியை – திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும்.
4.சதுர்த்தி: பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
5. பஞ்சமி: விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
6. சஷ்டி: தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
7. சப்தமி: மேல் உலகத்தினர் ஆசி
8. அஷ்டமி: நல்லறிவு வளரும்.
9. நவமி: ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
10. தசமி: தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்.
11. ஏகாதசி: வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்.
12. துவாதசி: தங்கம்,வைர ஆபரணம் சேரும்.
13. திரயோதசி: நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்.
14. சதுர்த்தசி: முழுமையான இல்லறம் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
15. அமாவாசை: மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசிகிட்டும்.
பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மஹாளய பக்ஷ புண்ணிய காலத்தில் பித்ருதேவதைகளுக்கு திதி சிரார்த்தம் தில தர்ப்பணம் பிண்டபிரதானம் செய்து முன்னோர்கள் ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.