Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 : ரிஷபம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 : ரிஷபம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 : ரிஷபம்

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்….

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு 11 வது இடமான லாப ஸ்தானத்தில் சனிபகவான் இருக்கிறார். அதோடு வருடத்தின் பாதியில் வரக்கூடிய குரு பெயர்ச்சி, வருடத்தின் இறுதியில் நிகழ இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சிகளும் ஓரளவுக்கு நற்பலன்களை தரக்கூடியதாக இருக்கும். இத்தகைய கிரக அமைப்புகளை கவனத்தில் கொள்ளும் போது இது உங்களுக்கு ஏற்றமும், மாற்றமும் ஏற்படக்கூடிய ஆண்டாக இருக்கும்.

அலுவலகத்தில் சிரமங்கள் விலகி சீரான நன்மைகள் ஏற்படக்கூடிய வருடமாக இந்த ஆண்டு இருக்கும். அதேசமயம் எதிலும் நிதானமும், நேரடி கவனமும் அவசியம். தடைப்பட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வுகள் படிப்படியாக கைகூடும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பதும் யாருடைய தனிப்பட்ட பிரச்சனைக்கும் ஆலோசனை சொல்ல மூக்கை நுழைக்காமல் இருப்பது அவசியம்.

குடும்பத்தில் இதுவரை நிலவின இறுக்கமான சூழல் மறையும். விசேஷங்கள் படிப்படியாக வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வீடு, மனை, வாகனம் மாற்ற, புதுப்பிக்க யோகம் உண்டு. தந்தை வழி உறவுகள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பண வரவு சீராக இருக்கும். 

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பதவி பாராட்டுகள் வந்து சேரும். பணத்தை கையாளும் பொறுப்பில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் முழுமையாக இருக்கும். 

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026  ரிஷபம்

கலை-படைப்பு துறையினருக்கு வாய்ப்புகள் வரிசையாக வர தொடங்கும். வேண்டாத கேளிக்கையும், வீணான சபலமும் உங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாகிவிடும் உணர்ந்து தவிர்ப்பது உத்தமம்.

மாணவர்கள் திறமைக்கு உரிய உயர்வை நிச்சயம் பெறலாம். இரவு நேரத்தில் வெளி இடத்தில் தங்காமலும் மனதை அலைபாய விடாமலும் படித்தால் வெளிச்சமான பாதையில் வெற்றி நடை போடலாம். 

பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் நிறையக்கூடிய ஆண்டாக இந்த வருடம் அமையும். உடல் நலத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது அவசியம். குடும்பத்தில் குழப்பங்கள் விலகி குதூகலம் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு இந்த வருடம் தடையில்லாமல் திருமணம் நடைபெறும். 

தொலைதூரப் பயணங்களை முடிந்தவரை பகலிலேயே மேற்கொள்ளுங்கள். வாகனத்தில் சிறு பழுது இருந்தாலும் உடனே கவனியுங்கள். மன அழுத்தம், அலர்ஜி, இடது பக்க உபாதை, கொழுப்பு சத்து அதிகரிப்பு ஆகியவை சங்கடங்களைத் தரலாம் உடல் நலத்தில் கவனம்..

துர்க்கை அம்மன் வழிபாடு இந்த வருடத்தில் உங்களுக்கு பல மாற்றங்களை கொண்டு வரும். குறிப்பாக கும்பகோணம் அருகில் இருக்கும் கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மனை ஒருமுறை சென்று தரிசித்து விட்டு வாருங்கள் இந்த வருடத்தில் உங்களுக்கு ஏற்றம் அதிகமாக இருக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!