பிப்ரவரி மாத ராசிபலன் 2025
பிப்ரவரி மாத ராசிபலன் : மேஷம்
துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது
மாதக் கோளான சூரியன் 10, 11ல்,3ல் செவ்வாய், 11ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதி நிலவும். பண வரவில் எவ்வித இடையூறுகளும் இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். அரசு வழியில் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்
பிப்ரவரி மாத ராசிபலன் : ரிஷபம்
முருக வழிபாடு செய்வது நல்லது
ராசியாதிபதி சுக்கிரன் 11ல் ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும், 9 10ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும், வெற்றியும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெற்று குடும்பத் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
பிப்ரவரி மாத ராசிபலன் : மிதுனம்
நரசிம்மர் வழிபாடு செய்வது சிறப்பு
ஜென்ம ராசியில் செவ்வாய், மாத முற்பாதியில் 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். கணவன்-மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். சனி 9ல், சுக்கிரன் 10ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை பளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும்.
பிப்ரவரி மாத ராசிபலன் : கடகம்
சிவனை வழிபாடு செய்வது நல்லது
உங்கள் ராசிக்கு 9ல் சுக்கிரன், ராகு 11ல் இல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். 7,8ல் சூரியன் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். கணவன்-மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று போட்ட முதலை எடுக்க முடியும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும்.
பிப்ரவரி மாத ராசிபலன் : சிம்மம்
மகாலட்சுமியை வழிபடுவது நல்லது
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், மாத முற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தாராள தன வரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும், வெற்றியினை பெற்று விட முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
பிப்ரவரி மாத ராசிபலன் : கன்னி
அஷ்டலட்சுமி வழிபடுவது நல்லது
உங்கள் ராசிக்கு 6ல் சனி, 7ல் சுக்கிரன், 9ல் குரு சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவார்கள்.
பிப்ரவரி மாத ராசிபலன் : துலாம்
சிவ வழிபாடு நல்லது
உங்கள் ராசிக்கு 4ல் சூரியன், 8ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் தான் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும்.
பிப்ரவரி மாத ராசிபலன் : விருச்சிகம்
முருக வழிபாடு நல்லது
உங்கள் ராசிக்கு 5ல் சுக்கிரன், 7ல் குரு, முற்பாதியில் 3ல் சூரியன், சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். 8ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூல பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
பிப்ரவரி மாத ராசிபலன் : தனுசு
துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது
ஜென்ம ராசிக்கு 3ல் சனி, 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதும் வளமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வாகனம் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும்.
பிப்ரவரி மாத ராசிபலன் : மகரம்
சிவ வழிபாடு செய்வது உத்தமம்
உங்கள் ராசிக்கு 3ல் ராகு, சுக்கிரன், 5ல் குரு, 6ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு இருந்த பொருளாதார தேக்கங்கள் எல்லாம் விலகி தாராள தன வரவு ஏற்படும். உடல் ரீதியாக இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்பட முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும், லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.
பிப்ரவரி மாத ராசிபலன் : கும்பம்
துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.
உங்கள் ராசிக்கு 4ல் குரு, 12,1ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானதோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பல கூடுதலாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கைநழுவி போகும்.
பிப்ரவரி மாத ராசிபலன் : மீனம்
துர்க்கையை வழிபடுவது சிறப்பு
ஜென்ம ராசியில் சுக்கிரன், மாத முற்ப்பாதியில் 12ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். குரு 3ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் கவுரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.