குரோதி வருட பலன்கள் 2024-கடகம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரோதி வருட பலன்கள் 2024-கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன்!! வெகுவேக கிரகம். இந்த புத்தாண்டில் இவர் அமர்ந்திருப்பது விரைய வீட்டில். நல்ல நாளிலே இந்த கடக ராசிக்காரர்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். சும்மா ஆடுறவனுக்கு சலங்கை கட்டின கதையாகிவிடும். எப்போதும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் இவர்களுக்கு கிடைக்கும் தலைமை பதவி சுகம். காணாததை கண்டது மாதிரி குதிப்பர். அவசரத்தில் அண்டாவுக்குள் கை போகாது என்பர் அதுபோல் இந்த வருடம் இந்த கடக ராசியர் எளிதில் முடிக்க வேண்டிய வேலைகளையும் சிக்கலாக்கி தவிப்பர்.

இந்த வருடம் பண வரவு மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்கு காரணம் இவர்களுடைய வேலையில் கிடைக்கும் பதவி உயர்வாக அமையும். சிலருக்கு அரசு பணி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இந்த கடக ராசி குழந்தைகளின் தகப்பனார் மிக நல்ல வேலை கிடைக்க பெறுவார். அல்லது புது தொழில் ஆரம்பித்து விடுவார். ,

குடும்ப நிலையில் கவுரவம் கிடைக்கும். குடும்பம் சம்பந்தமான சேவை ஒன்று பாராட்டுக்குரியதாய் இவர்களது தந்தையின் செயல் ஒன்று அளப்பரிய பெருமை பெற்று தரும். அரசு சார்பில் வெகுமானம் கிடைக்கும். அரசு வேலை அந்த குடும்பத்தில் ஒருவருக்கு கிடைக்கும் இவர்கள். குடும்பத்தில் நிறைய தங்கம் இந்த வருடம் வாங்குவார்கள்.

உங்கள் சகோதரனுக்கு சிறு தடைகளுக்கு பின் திருமணம் நடக்கும். வெளிநாட்டுக்கு சகோதரன் சென்றால் செலவு உங்களுக்கு அதிகமாகும். வெளிநாடு சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்று சிறு தடைக்குப் பின் உறுதி செய்யப்படும். தொலைபேசியை மாற்றுவீர்கள். நிறைய சிறுதூரப் பயணம் உண்டு. பணியாளர்கள் அடிக்கடி மாறுவார்கள்.

குரோதி வருட பலன்கள் 2024-கடகம்

இந்த வருடம் கண்டிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவீர்கள். மனை விஷயம் இழுத்தடிக்கும். புது வாகன வசதி உண்டு.பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவில் தலைமை ஏற்பர். இந்த ராசி குழந்தைகளின் தாயார் ஒரு பதவி உயர்வு பெறுவர். உங்களில் சிலர் பசு மாடு வளர்க்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் குடியிருப்பின் மேற்பார்வையாளராக உயர்வு பெறுவீர்கள்.

குழந்தை வரம் வேண்டுவோர் பிரார்த்தனைகள் மட்டுமே செய்ய இயலும். உங்கள் வாரிசுகளினால் கொஞ்சம் அவமானப்பட நேரிடும். அது வாரிசுகளின் காதல் விஷயமாகவும் இருக்கலாம், வெகு துன்பத்தை தரும் பங்கு வர்த்தகம் பக்கம் கூட தலை வைத்து பார்க்கக் கூடாது. பங்கு வர்த்தகம் வெகு நஷ்டம் கொடுக்கும்.

உங்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய் மிகும். தலை ரொம்ப வலிக்கும். அதற்கு மருத்துவர் கண்ணாடி போட்டுக் கொள்ளச் சொல்வார். கடக ராசியினருக்கு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மீதுள்ள வழக்குகளில் வெற்றி மற்றும் பெருமையும் கிடைக்கும். உங்கள் தொழிலில் உங்களுக்கு சமமான எதிரிகள் தோன்றுவர். பண கணக்குகள் வில்லனாகும்.

இந்த வருடம் திருமண விஷயம் என்பது நிறைய வில்லங்கத்தோடு நடக்கும். அநேகமாக காதல் திருமணமாக இருக்கும். அதுவும் ஊரை போல், நாட்டைப் போல் திருமண மண்டபம், கோவில்களில் நடக்காமல் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும். திருமணத்தில் சண்டையும் ரத்தம் சிந்துதலும் உண்டு. கலப்பு திருமணமாக இருக்கும். நாடு விட்டு நாடு வந்தும் கல்யாணம் ஆகும். சில ஏமாற்று நபர்கள் பெண்களை காதலித்து தவிக்க விட்டு பெண் குழந்தையோட பஞ்சாயத்து பேசி திருமணம் செய்வார். இந்த வருடம் வரும் வியாபார பங்குதாரர்கள் பொல்லாதவர்களாக இருப்பார்.

இந்த வருடம் உங்களுக்கு அளப்பரிய நன்மைகளை தந்தாலும் தொழில் மட்டும் சற்று நெருடலாக உள்ளது. உங்கள் தொழிலில் ஏதோ ஒரு நெருக்கடி ஏற்படும். அது உங்களின் உடல்நிலை பாதிப்பால் அல்லது உங்கள் வாரிசும் மனைவியும் சண்டையிடுவதாலும் தொழில் அல்லாடும். பூர்வீக இடத்தின் மீதுள்ளவ ழக்குகள் உங்களை தலை சுற்ற வைக்கும்.

பரிகாரம்

உங்கள் ராசிநாதன் 12-ல் இருப்பதால் இந்த வருடம் கண்டிப்பாக ஒரு தடவையாவது கடலோரம் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம் இதற்கு ஏற்ற கோவில் ஆகும். கடக ராசிக்கு அஷ்டமசனி நடப்பதால் அறந்தாங்கி எட்டியதளி என்ற ஸ்தலம் சென்று வழிபடவும்.

சனி+செவ்வாய் சேர்க்கைக்கு திங்கள் கிழமைகளில் அல்லி பூ மாலை, ஜவ்வரிசி பாயாசம், சந்தன கலர் துணியில் 20 மிளகை மூட்டை கட்டி தீபம் ஏந்தவும்.

Leave a Comment

error: Content is protected !!