குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மீனம்
எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கும், 10க்கும் அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். நீங்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். பண வரவுகள் சாதகமாக இருக்காது என்பதால் எந்த ஒரு காரியத்திலும் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் ஏழரைச்சனியில் விரையச்சனி நடப்பதாலும் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்க வேண்டும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் அதற்கான ஆதாயங்களை அடைய இடையூறுகள் ஏற்படும்.
குரு பகவான் 3ல் சஞ்சரிப்பது மூலம் தனது சிறப்பு பார்வையாக 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட கூடிய அமைப்புகள், உடன் இருப்பவர்கள் ஆதரவு சற்று சாதகமாக இருக்கக்கூடிய நிலை உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிக மிக உத்தமம். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது வேலையாட்கள் மூலமாக வீண் இழப்புகளை எதிர்கொள்வீர்கள் சந்தை சூழ்நிலை சாதகமற்று இருப்பதால் உங்கள் பொருட்களுக்கான விலை கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் ஒரு சிலருக்கு தேவையில்லாத பயணங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனத்தோடு இருப்பது, உங்களுடைய பணியில் மட்டும் சற்று எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் நல்லது அதிகாரியிடம் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் முடிந்தவரை வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது உத்தமம்.
தற்போதைக்கு இருப்பதை காப்பாற்றிக் கொள்வது மிகவும் நல்லது. ஒருசிலர் கூறக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை தவற விட்டு விட வேண்டாம் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவதும் மிகவும் நல்லது. குறிப்பாக எதிர்பாராத வகையில் வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் மருத்துவ காப்பீட்டுகள் எடுத்துக்கொள்வது கூட வரும் நாட்களில் வீண் செலவுகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள்வழியில் மனக்கவலை, உறவினர்கள்மூலமாக நிம்மதி குறைவுகள் ஏற்படலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பக்குவத்தோடு நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்று நேரம் என்பதால் விட்டுகொடுத்து செல்வது நல்லது.
உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம் அசையும்- அசையா சொத்துகளால் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 7ம் இடம் (களத்திரம்),9ம் இடம் (வெளிநாடு ,தந்தை) ,11ம் இடம் (லாபம்) |
பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் நல்லது நடக்கும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்ற லைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும் உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும்.
பரிகாரம்
மீலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள்நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஜென்ம ராசியில் ராகு 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்வது நல்லது.
உங்களுக்கு சனி 12-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள். குடை அடுப்பு போன்றவற்றை வானமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9,
கிழமை: வியாழன் ஞாயிறு
திசை: வடகிழக்கு,
கல்: புஷ்ப ராகம்
நிறம்: மஞ்சள், சிவப்பு
தெய்வம்: தட்சிணாமூர்த்தி