குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-தனுசு
சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ராசி அதிபதி குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-S-2025 வரை) முதல் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பண விஷயத்தில் ஒரு ஏற்ற – இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது.
குரு 6-ல் மறைந்தாலும் ராசியாதிபதி என்ற காரணத்தால் அனுகூலமான பலன்களே உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கொடுக்கல்& வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும் என்பதால் எதிலும் சுறுசுறுப்போடும், தெம்போடும் செயல்படுவீர்கள்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
6-ல் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, நெருங்கியவரின் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள், நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய யோகம் அசையும் அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நிலை உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைக் கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் நல்ல லாபத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்யமுடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு, ஒருசில நேரங்களில் நீங்களே நேரடியாக சில வேலைகளை செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உழைப்புக்கான பலனை கண்டிப்பாக அடைவீர்கள். கூட்டாளிகளை நம்பாமல் எதிலும் நிதானத் தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய அனுகூலங்களை அடையமுடியும்.அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க சில இடையூறுகள் இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும். வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடும் நிதானத்தோடும் இருப்பது நல்லது.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ல் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்கள் குறிக்கோளை எட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபளிக்க இடையூறுகள், தாய்வழி உறவினர்கள் மூலமாக தேவையில்லாத மனக்கவலைகள், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் நெருங்கியவர்களே தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள்.
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குரு பகவான் 6-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஓரளவிற்கு முன்னேற்றத்தை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அனுசரித்து செல்வது உத்தமம்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 2ம் இடம் (குடும்பம் ,வாக்கு),10ம் இடம் (தொழில்) ,12ம் இடம் (விரயம் ) |
சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். சிலருக்கு அசையாச் சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் அனுகூலங்கள் ஏற்படும் கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளநிலையில் நடைபெறும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாடம் அடைவீர்கள்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று சிறப்பான லாபத்தைப்பெற இயலும் என்றாலும் போட்டி பொறாமைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளிடம் சற்று அனுசரித்து சென்றால் தொழில் சிறப்பாக இருக்கும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டு கௌரவமான பதவிகளை அடையமுடியும் மாணவர்களின் கல்வித்திறன் ஓரளவுக்கு உயரும் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் இக்காலத்தில் உயர்வுகளைப் பெறுவீர்கள்.
பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருபகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது உத்தமம் மஞ்சள்நிற ஆடைகள் அணிவது. கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும் பைரவரையும் வணங்கவும். கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9
நிறம்: மஞ்சள், பச்சை
கிழமை: வியாழன், திங்கள்
கல்: புஷ்பராகம்.
திசை: வடகிழக்கு,
தெய்வம்: தட்சிணாமூர்த்தி