சூரியன்
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் எந்த அளவுக்கு பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு புகழ் உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால் அந்த மனிதனுக்கு தலைவலி, மூட்டு வலி ,எலும்பு நோய் ,கண் நோய் போன்றவை இருக்கும். அவரது தந்தையின் உடல் நலத்தையும் அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்,
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் நீச சூரியன் சனியுடன் இருந்தால்
அவரின் வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும்.திருமணத்தில் பிரச்சனை இருக்கும் அவர் இளமையில் பல சிரமங்களை சந்தித்திருப்பார். சிலருக்கு மறுமணம்.செய்துகொள்ள வேண்டிய நிலை உண்டாகும்
லக்னத்தில் சூரியன் உச்சமாக இருந்தால்
அந்த மனிதர் பலசாலியாக இருப்பார்.வாழ்க்கையில் பல நல்ல செயல்களை செய்து புகழுடன் இருப்பார். அதை குரு பார்த்தால் அவர் பெரிய பதவியில் இருப்பார். ஆணவ குணம் காரணமாக பிறர் சொல்வதை கேட்க மாட்டார்.
சூரியன் லக்னத்தில் இருந்தால்
பித்த சம்பந்தப்பட்ட நோய், கண் நோய் ஏற்படும்
2-ம் பாவத்தில் சூரியன் பலமாக இருந்தால்
அந்த ஜாதகருக்கு பணம் பல விதத்தில் வந்து சேரும்.21 வயதிலிருந்து 24 வயது வரை அவருடைய தந்தைக்கும் அவருக்கும் ஒத்துவராது சிலர் தந்தையிடமிருந்து பிரிந்து விடுவார்கள்.சூரியன் செவ்வாயுடன் இருந்து அதை இன்னொரு பாபக்கிரகம் பார்த்தால் அந்த ஜாதகருக்கு மறுமணம் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.மது அசைவ உணவு ஆகியவற்றை விரும்புவார்.வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும்.
இரண்டாம் பாவத்தில் சூரியன் புதன் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகர் படிப்பு செயல் ஆகியவற்றில் உயர்ந்தவராக இருப்பார்.இளம் வயதிலேயே அவர் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
3-ல் சூரியன் தனித்து இருந்து அதை குரு பார்த்தால்
அந்த ஜாதகருக்கு விக்கிரமாதித்யா யோகம் உண்டாகும் .பலர் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். ஆனால் சூரியனை பாவ கிரகம் பார்த்தாலோ அல்லது பாவ கிரகத்துடன் சூரியன் மூன்றில் இருந்தாலும் அவருடைய தம்பிக்கு உடல்நலம் சரியாக இருக்காது.அந்த ஜாதகர் நிறைய சுற்றுவார், கண்ட உணவுகளை எல்லாம் சாப்பிடுவார்.முதுகுத்தண்டு ,வயிற்றுப் பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப் படுவார்.
4-ம் பாவத்தில் சூரியன் புதனுடன் இருந்தால்
புதாத்திய யோகம் உண்டாகும்.அவற்றை குரு பார்த்தால் அந்த ஜாதகர் நிறையப் படித்தவராக இருப்பார்.குடும்பத்தை விட்டு வெளியேறி புகழுடன் வாழ்வார்.ஆனால் சூரியனை பாவ கிரகங்கள் பார்த்தால் அவரின் தந்தையின் சொத்தில் பிரச்சனை இருக்கும்.உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருக்காது.
சூரியன்-சனி 4-ல் இருந்தால் அல்லது நான்காம் பாவத்தில் உள்ள சூரியனை சனி பார்த்தால் அவருக்கு ரத்த அழுத்தம் உண்டாகும், இதயம் பாதிக்கப்படும்.
5-ம் பாவத்தில் சூரியன்
அவருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். அதை பாவ கிரகம் பார்த்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும்.பெண்ணாக இருந்தால் கருச்சிதைவு உண்டாக வாய்ப்பு இருக்கிறது.அந்த ஜாதகர் காரமான உணவை விரும்பி சாப்பிடுவார் ,அதனால் உடல் நலம் கெடும்.
6-ம் பாவத்தில் சூரியன்
அவருக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள் ,எதிலும் வெற்றியுடன் விளங்குவார் ஆனால் அந்த சூரியனை வேறு ஒரு பாபக்கிரகம் பார்த்தால் அவருக்கு இடது கண்ணில் நோய் வரும், சிறிய விபத்துக்கள் உண்டாகும்.மனைவியுடன் சண்டைப் போடுவார்.தலைவலி ,வயிற்றுவலி வரும்.
7-ம் பாவத்தில் சூரியன்
அந்த ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்.அந்த சூரியன் சுப கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் சிலருக்கு மறுமணம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.சிலருக்கு பித்தம் தலைவலி இருக்கும்.
8-ம் பாவத்தில் சூரியன்
8-ல் சூரியன் இருந்து அதை பாபக்கிரகம் பார்த்தால் அவருக்கு உடல் நலம் கெடும். சனி பார்த்தால் அடிக்கடி விபத்து ஏற்படும்.திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருக்கும்.வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம்.
9-ம் பாவத்தில் சூரியன்
சூரியன்+புதன்+குருவுடன் இருந்தால் அந்த ஜாதகர் புகழுடன் பலசாலியாக இருப்பார்.
10-ம் பாவத்தில் சூரியன்
ஜாதகர் அரசு வேலையில் புகழுடன் இருப்பார்.சூரியன் சனியால் பார்க்கப் பட்டால் நல்ல பதவி வரும் ஆனால் உடல் நலம் கெடும்.சிலர் தேவையற்றதை பேசுவார்கள்.
11-ம் பாவத்தில் சூரியன்
அந்த ஜாதகர் புகழுடன் இருப்பார் ,சிலருக்கு முழங்காலில் பாதிப்பு உண்டாகும்.சூரியன்+செவ்வாய்+சனியுடன் இருந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருக்கும்.அந்த ஜாதகர் வறுத்த பொருட்களை சாப்பிடக்கூடாது
12-ம் பாவத்தில் சூரியன்
அந்த ஜாதகர் வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வாய்ப்பிருக்கிறது.அந்த சூரியன் சுக்கிரனுடன் இருந்தாலும் செவ்வாயுடன் இருந்தாலும் திருமணத்தடை இருக்கும்.அந்த ஜாதகர் நிறைய சாப்பிடுவார், அதிகம் தூங்குவார், உடலில் பாதிப்பு ஏற்படும்.
பரிகாரங்கள்:
ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவை தவிர்க்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவு சாப்பிடுவது நல்லது. கருப்பு நிற ஆடை அணியக்கூடாது. கோதுமை ,ரவை, வாழைப்பழம், ஆப்பிள், பால் ஆகியவற்றை உண்பது நலம் தரும்
ஞாயிற்றுக்கிழமை வறுத்த பொருட்களை சாப்பிடக்கூடாது, தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம் வீட்டின் கிழக்கு திசையில் குப்பைகளை சேர்த்து வைக்கக் கூடாது .செம்பில் செய்யப்பட்ட மோதிரம் அல்லது காப்பு அணிய வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வயதான மனிதனுக்கு கோதுமை, வெல்லம், 5 வெண்ணிற ஆடை ஆகியவற்றை தானம் அளிப்பது நன்று கிழக்கு திசையில் சூரிய பகவானின் உருவத்தை வைத்து வணங்கலாம்.