ஜாதகத்தில் கிரகங்களின் 6 விதமான பலம் பற்றிய குறிப்புகள் !

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கிரகங்களின் 6 விதமான பலம்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஷட்பலம் காணப்பட்டு அது
ஒருவரனின் ஜாதக பலனை அறிவதற்கு உபயோகமாக இருக்கும் ஒரு நல்ல
முறையாகும், ஷட் என்றால் “ஆறு” என பொருள்படும். “ஷட் பலம் என்றால் “ஆறு விதமான வலிமை” எனப் பொருள்படும்.

கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள்

(1) வீட்டினில் வலிமை (அ) ஸ்தான பலம்
(2) திசையினில் வலிமை (அ) திக் பலம்
(3) காலத்தில் வலிமை (அ) கால பலம்
(4) நகர்வில் வலிமை (அ) சேஷ்டா பலம்
(5) இயற்கையில் வலிமை (அ) நைசர்க்கிக பலம்
(6) பார்வையின் வலிமை (அ) திருக் பலம்

கோள்களின் வலிமை என்பதை அவை இருக்கும் வீடுகள், காரகத்துவங்கள், பார்வைகள், உச்சம், நீச்சம், நட்பு, பகை நிலைகள் ஆகிய நிலைகளை வைத்துமட்டும் தீர்மானித்து விடக்கூடாது.

ஒரு கோளின் வலிமையை, பல்வேறு கணிதங்களைச் செய்தே முடிவு செய்ய வேண்டும் என சோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆறுவகை வலிமைகளைக் கண்டறிய வேண்டும் என கூறுகின்றன. அதனை வடமொழியில் சட்பலம் எனக் குறிப்பிடுகின்றன.

 கிரகங்களின் 6 விதமான பலம்
ஸ்தான பலம் – கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை

(1)உச்சம்
(2)மூலத் திரிகோணம்
(3) ஆட்சி
(4)நட்பு
(5)பகை
(6)கேந்திரம்
(7)திரிகோணம்
(8)பணபரம்
(9)ஆபோக்லிமம்

ஆகிய நிலைகளைக் கண்டு கணக்கிடப்படுகிறது.

ஸ்தான பலம் கெட்டால் எல்லாம் போச்சு அந்த ஸ்தானமே கெடும். ஸ்தான பலம் என்றால் என்ன.? லக்னத்துக்கு இரண்டாம் இடம் தன ஸ்தானம் வாக்கு,குடும்ப ஸ்தானம்.அதன் அதிபதி தன் ஸ்தானத்துக்கு 6,8 ல் மறைந்துவிட்டால் ஸ்தான பலம் இல்லை என்று அர்த்தம் .. இதனால் எப்போதும் கடனாளி.சேமிப்பு இல்லா நிலை.6ஆம் அதிபதி இப்படி கெட்டால் எதிரிகள் இவரை ஒன்றும் செய்ய இயலாது.

இது கலைஞர் கருணாநிதி ஜாதகத்தில் இருக்கும் .. எல்லா ஸ்தானமும் பலமாக இருக்கும்.அவர் கோர்ட் கோர்ட்டாக அலைந்ததில்லை, நோயாளி ஆனதில்லை, 6ஆம் இடம் ருணம், ரோகம் ஸ்தானம் .. (கடன்,நோய் .. )

ஸ்தான பலம் - உட்பிரிவுகள்

1) ஆறுநிலை பலம்
2) பால்பலம்
3) இருப்புபலம்
4) உச்சபலம்
5) கேந்திர பலம்
6) திரிகோண பலம்
7) வர்க்க பலம்

திக் பலம் (அ) திசையினில் வலிமை

இராசிகள் பெறும் பலம் என்பதிலிருந்து மாறுபட்டு, இலக்கினத்தில் தொடங்கி நான்கு நாற்கரங்கள், அதாவது நான்கு கேந்திரங்களில் திசைகளை வரிசைப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இடங்களில் அல்லது திசைகளில், குறிப்பிட்ட கோள்கள் வலிமை பெறுவதாகவும், அல்லது வலிமை இழப்பதாகவும் கணக்கிடப்படுகிறது.

கோள்கள் திசைகளில் பெறும் வலிமை சஷ்டியாம்சம் எனும் கணித அளவீட்டில் கணக்கிடப்படுகிறது. அவ்வாறு கணக்கிடப்படுவதில், அதிக சஷ்டியாம்ச புள்ளிகள் பெறும் கோள்கள் அதிக வலிமையும், குறைந்த புள்ளிகள் பெறுபவை குறைவான வலிமையும் பெறுகின்றன.

புதன்,குரு -கிழக்கிலும் -(அ) லக்னத்திலும்

சூரியன்,செவ்வாய்,தெற்கிலும் -(அ)10 லும்

சனி -மேற்கில் -(அ)7 ல்,

சந்திரன்,சுக்கிரன் -வடக்கிலும் -(அ) 4 லும், திக் பலம் உள்ளவர்கள் .

லக்னாதிபதிக்கு 10 ல் புதன் பலன் பெற்றிருந்து ,7 ம் அதிபதிக்கு 3 ல் சந்திரன் இருப்பதால் ஜாதகர் பலரோடு சரீர சம்பந்தப்படுவார் .

2,12 க்குடையார் 3 லிருந்து குருவினால் பார்க்கப்பட்டோ அல்லது 9 க்குடையரால் பார்க்கபட்டாலோ மேற்கூறிய பலனே .

3,7,11 க்குடையவர்கள் சேர்ந்திருந்தாலும்,ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும்,பலம் பெற்று திரிகோணத்திலிந்தாலும்,மேற்கூறிய பலனே .
பிறந்த கால சுக்கிரனை கோச்சார குரு தொடும் காலக் கட்டம் -வீடு,வண்டி வாகனம் வாங்கும் கால கட்டமாகும் .

அட்டமாதிபதிக்கு 1,5,9 ல் சனி வரும் கால கட்டம் ஜாதகருக்கு கண்டம் அல்லது கண்டத்திற்கு ஒப்பான கால கட்டம் .

2,4,12 ம் ஆதிகளில் எத்தனைபேர் கோந்திரங்களில் இருக்கிறார்களோ அத்தனை வீடு ஜாதகருக்கு அமையும் .

 கிரகங்களின் 6 விதமான பலம்
கால பலம் (அ ) காலத்தில் வலிமை

இதன்படி, சாதகர் பிறந்த பொழுதினை அடிப்படையாகக் கொண்டு கோள்களின் பலம் அறியப்படுகிறது – அதாவது

(1) நடு நிசி – நடு பகல் வலிமை (அ) நத உன்னத பலம்

(2) வளர் பிறை – தேய் பிறை வலிமை (அ) பட்ச பலம்

(3) பகல் – இரவு வலிமை (அ) தின இராத்திரி பலம்

(4) ஆண்டின் வலிமை (அ) ஆப்த பலம் (அ) வருஷ பலம்

(5) மாதத்தின் வலிமை (அ) மாத பலம்

(6) கிழமையின் வலிமை (அ) வார பலம்

(7) ஓரை வலிமை (அ) ஹோரா பலம் (8) நகர்வின் வலிமை (அ) அயன பலம்

(9) யுத்தத்தில் வலிமை (அ) யுத்த பலம்

ஆக, கால பலத்தில் கோள்களின் வலிமையானது பல்வேறு கால நிலைகளில் உள்ள கோள்களின் வலிமையினை கணித முறைகளுக்கு உட்பட்டு வரையறை செய்வதாகும்.

சந்திரன்,செவ்வாய்,சனி-இரவில் பலமுடையவை

சூரியன்,குரு,சுக்கிரன்- பகலில் பலமுடையவை

புதன்-பகல்,இரவு ஆகிய இரு காலத்திலும் பலமுடையவை

சுப கிரஹங்கள்-வளர்பிறை காலத்தில் பலமுடையவை

அசுப கிரஹங்கள்-தேய்பிறை காலத்தில் பலமுடையவை

சேஷ்டா பலம் (அ) நகர்வில் வலிமை

கோள்கள் தாம் சுற்றிவரும் நிலையில் பெறும் வலிமையினைக் குறிப்பதாகும். குறிப்பாக, சூரியன், சந்திரன் தவிர்த்து பிற கோள்கள் வக்கிர நிலையில் பெறும் வலிமையினைக் கணக்கிடுவதாகும்.
சேஷ்டா பலம் கணக்கிடப்படுவதின் நோக்கமானது, ஒரு கோள் வக்கிர நிலையில் இருப்பதால் மட்டுமே வலிமை குன்றியது என்றோ அல்லது உச்ச நிலையில் இருப்பதால் மட்டுமே வலிமை மிகுந்து இருக்கிறது என்றோ பலன் உரைத்துவிடக் கூடாது என்பதுதான்.

நைசர்க்கிக பலம் (அ) இயற்கையில் வலிமை

இயற்கையில் கோள்கள் அவைகளுக்கு இடையே பெற்றிருக்கும் வலிமையாகும். சோதிட நூல்களில் கோள்களின் இயல்பான வலிமையாக தெரிவிக்கப்பட்டிருப்பது –

சனியை விட செவ்வாய் வலிமை

இராகுவை காட்டிலும் கேது பலவான்

சூரியனை காட்டிலும் இராகு பலவான்

சந்திரனை காட்டிலும் சூரியன் பலவான்

சுக்கிரனை காட்டிலும் சந்திரன் பலவான்

குருவை காட்டிலும் சுக்கிரன் பலவான்

புதனை காட்டிலும் குரு பலவான்

செவ்வாயை காட்டிலும் புதன் பலவான்

சனியை காட்டிலும் செவ்வாய் பலவான்

ஆக, அனைத்து கோள்களிலும் வலிமை மிக்கதாக சூரியனும் அதற்கு அடுத்து சந்திரனும் வரிசைப்படுத்தப் படுகின்றன.
இயல்பில் வலிமையானது கோள்களின் ஒளிர் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

நைசர்க்கிக வலிமையானது, கோள்கள் இருக்கும் இராசிகள் அல்லது பாவகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை.
நைசர்க்கிக வலிமையின் அளவானது, மாறிலி எனும் அடிப்படையில் எப்போதும், எந்த சாதகத்திற்கும், மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

 கிரகங்களின் 6 விதமான பலம்
திருக் பலம் (அ) பார்வையின் வலிமை

திருக் பலம் (பார்வை) பலம்:

எல்லா கிரகங்கள் 7 இடத்தை பார்வை இடும். சனி 3,7,10 பார்வை உண்டு. செவ்வாய் 4,7,8 பார்வை உண்டு. குரு 5,7,9 பார்வை உண்டு. ராகு கேது
3,7,11 பார்வை உண்டு. ராகு கேது நிழல் கிரகம் என்பதால் ஷட்பலத்தில் இடம் இல்லை

கோள்களின் பார்வையின் வலிமையாகும். திருக் பலம் என்பது, ஒரு கோளின் பார்வையால் மற்ற கோள்கள் பெறும் வலிமை என்பதாகும்.

சட் பலக் கணக்கீட்டில், கோள்களின் பார்வைகள் மட்டுமின்றி, ஒரு கோள், மற்றொரு கோளிலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதையும், அதாவது பார்க்கிறது என்றும் கணக்கீடும் செய்யப்படுகிறது.

ஒரு கோளின் ஏழாம்பார்வை மற்றும் சிறப்புப் பார்வையும், முழுமையான வலிமையினைப் பார்க்கப்படும் கோள்களுக்கு கொடுக்கிறது. அது மட்டுமின்றி, பார்க்கும் கோளிற்கும் பார்க்கப்படும் கோளிற்கும் உள்ள பாகைக் கணக்கீடும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கோள்களுக்கு இடையே உள்ள தூரங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. என்பதுடன் ஒவ்வொரு கோளின் ஒளிவீச்சின் தன்மையும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!