Homeஜோதிட குறிப்புகள்உங்கள் ஜாதகத்தில் 9-ம் வீட்டின் அதிபதி எந்த இடத்தில் இருந்தால்? என்ன பலன் கிடைக்கும்!!

உங்கள் ஜாதகத்தில் 9-ம் வீட்டின் அதிபதி எந்த இடத்தில் இருந்தால்? என்ன பலன் கிடைக்கும்!!

9-ம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையான மனிதராக இருப்பார். அரக்க குணம் உள்ளவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். கடவுளை நம்ப மாட்டார். பெரியவர்களை மதிக்க மாட்டார். ஆணவ குணம் கொண்டவராக இருப்பார்.

 9-ம் அதிபதி இரண்டாம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். குடும்பத்தை காப்பாற்றுபவராக இருப்பார். மிருகங்கள், பிராணிகளால் அவருக்கு பிரச்சனை இருக்கும். பயணத்தின் மூலம் பணம் பெருகும்.

 9-ம் அதிபதி மூன்றாம் பாவத்தில் இருந்தால், மனைவி அழகாக இருப்பாள். ஜாதகர் தன் சகோதரர்களுடன் சேர்ந்து வாழ்வார். அனைவருடனும் அவருக்கு நல்ல உறவு இருக்கும். பணம் சம்பாதிப்பார். நன்கு படித்தவராக இருப்பார். பயணம் அதிகமாக செய்வார்.

 9-ம் அதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் தந்தையின் பேச்சை கேட்பார். தாயை காப்பாற்றுவார். நல்ல மனம் கொண்டவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். அவரை பலரும் பாராட்டுவார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.அவர் பலருக்கும் சந்தோஷத்தை தருவார்.

 9-ம் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கடவுள் நம்பிக்கை இருக்கும். குருநாதர்களை மதிப்பார். பூஜைகளில் ஆர்வம் இருக்கும்.

 9-ம் அதிபதி 6-ம் இடத்தில் இருந்தால் ,ஜாதகர் தன் வேலைகளை அரைகுறையாக செய்வார். பகைவர்களிடம் சாந்தமாக பேசுவார். வேத சாஸ்திரங்களை எதிர்த்துப் பேசுபவராக இருப்பார். கடவுள் நம்பிக்கை குறைவாக இருக்கும்.

 9-ம் அதிபதி ஏழாம் இடத்தில் இருந்தால், மனைவி நல்லவளாக இருப்பாள். உண்மை பேசுபவளாக இருப்பாள். அந்த அழகான மனைவி வந்த பிறகு ஜாதகருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். பல இடங்களில் வியாபாரம் செய்து பெயரையும், புகழையும்  பெறுவார்.

 9-ம் அதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால்,  ஜாதகர் கெட்ட குணம் உள்ளவராக இருப்பார். கோப குணம் இருக்கும். பல உயிர்களையும் கொடுமைப்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருப்பார். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்காது. உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு சகோதரர்கள் இருக்க மாட்டார்கள்.

 9-ம் அதிபதி 9-ம் இடத்தில் இருந்தால், ஜாதகர் தன் உடன் பிறந்தவரிடம் மிகுந்த பாசத்துடன் இருப்பார். அறிவாளியாக இருப்பார். தானம் செய்வார். கடவுள் நம்பிக்கை இருக்கும். குருநாதர்களிடம் மதிப்பு இருக்கும். குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் இருக்கும்.

 9-ம் அதிபதி 10-ம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அரசாங்க பணியில் இருப்பார். பெற்றோரை மதிப்பார். துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். தர்ம சிந்தனை இருக்கும். பெயர் ,புகழ் இருக்கும். பணம் சம்பாதித்து சந்தோசமாக வாழ்வார்.

 9-ம் அதிபதி பதினோராம் இடத்தில் இருந்தால், ஜாதகர் நல்லவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். தர்ம சிந்தனை இருக்கும். அனைவரிடமும் பாசத்துடன் பழகுவார். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.

 9-ம் அதிபதி 12-ம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நல்ல தோற்றத்துடன் இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். வெளியூர்களில் கூட அவருக்கு நல்ல பெயர் இருக்கும். சந்தோசமான வாழ்க்கை இருக்கும். சிலருக்கு போதைப் பழக்கம் இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!