வேலூர் மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் ஜீவசமாதி…

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

வேலூர் மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் ஜீவசமாதி…

சித்தர்கள் அடங்கிய இடங்களில் கோவில்கள் ,ஜீவசமாதிகள் எழுப்பி வணங்கி வருகின்றனர்.

ஆன்ம அமைதி வேண்டி அவ்வாறான ஜீவசமாதிகளைத் தேடித் தேடித் சிலர் செல்கின்றனர்; அமைதியும் அடைகின்றனர்.

சித்தர்கள் தமக்காக வாழ்ந்தவர்கள் அன்று .எனவே ,அவர்கள் பூரணத்துவம் பெற்ற பிறகும் நம்மை ஆசீர்வதித்து
வருகிறார்கள்.

சுப்பையா சாமி சித்தர்

இவர் சமாதி அடைந்த தினம் 9 .9 .1948 வியாழக்கிழமை அதிகாலை 5 .மணிக்கு சப்தமி் திதி அனுஷம் நட்சத்திரத்தில்.

வேலூர் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் உள்ள மேற்கு பாலக்கரையில் முத்து மண்டபம் அருகில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.

அவரது சீடர் பாலாஜி ஸ்வாமிகள் ஜீவசமாதி
வேலூர் பேருந்து நிலையம் பின்புறம்..
பாலாற்றங்கரையில்..
இவரது மூலம் யாருக்கும் தெரியவில்லை. வேலூரில் பலஇடங்களில் 1948 வரை வாழ்ந்தவர். இவரால் பயன்பெற்றவர் நிறைய பேர். வேண்டிக் கொண்டால் கூடவே இருப்பார் என்று அங்குள்ள சமாதி பராமரிப்பு செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர் கூறினார். விதியுள்ளவர்கள் தான் இந்த இடத்துக்கு வரமுடியும். போவோர் வருவோர் யாரும் இங்கு வருவதில்லை. இவரால் பயன்பெற்ற 70 குடும்பங்கள் சேர்ந்து இங்கு தினமும் அன்னதானம் செய்கிறோம் என்று கூறினார். பக்கத்தில் அவரது சீடர் பாலாஜி ஸ்வாமிகள் அடக்கமான இடத்தில் லிங்கம் வைத்திருக்கின்றனர். உடல் உள்உறுப்புகளையெல்லாம் இரவில் தனித்தனியே கழற்றி வைத்து யோகம் புரிவாராம். இங்கு சக்தி இருப்பு அதிகம் தெரிகிறது.
தேடலுள்ளவர்கள் செல்லக் கடவர்.

நாகமணி சித்தர்

ஆற்காடு ~புதுப் பாடி சாலையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூங்கோடு கிராமத்தில் உள்ள பாலாற்றங் கரையில் இவரது சமாதி உள்ளது.

கங்காராம் சுவாமி

இவர் பிறந்தது 15 .3. 1852 .சமாதியடைந்தது 4.9. 1952 .ஆற்காடு நகர காவல் நிலையம் எதிரில் உள்ள தோப்புக்காணா பகுதியில் இவரது சமாதி உள்ளது.

விலட்சண ஆனந்தர்

குடியாத்தம் அருகில் உள்ள மேல் மாயில் கிராமத்தில் இவரது சமாதி உள்ளது.

சிவலிங்கேஸ்வரர்

வாணியம்பாடிக்கு வடக்கே 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கஸ்பா~ஏ என்ற பகுதியில் உள்ள சோமலாபுரம்
சாலையில் இவரது சமாதி உள்ளது.

சித்தர்
அருளானந்தர் சுவாமி

இவர் 20 .11 .1877 இல் பிறந்தார.் 2. 9. 1965 இல் சமாதி அடைந்தார்.
அரக்கோணத்தில் இருந்து 5 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள காவனூர் நரசிங்க
புரத்தில் இவரது சமாதி உள்ளது.

வரதராஜ சுவாமி

காஞ்சிபுரத்தில் 31. 8 .1939 இல் பிறந்தார்.
2006 இல் மார்கழி மாதம் ரேவதி
நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார்.
அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் 4
கிலோமீட்டர் தொலைவில் உள்ள
வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள
காமராஜர் தெருவில் இவரது சமாதி. உள்ளது.

அமலானந்தா்; விமலானந்தா்.

இவர்கள் இருவரும் அருளானந்தர் சுவாமியின் சீடர்கள.் அரக்கோணத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகவேடு கிராமத்தில் இருக்கும்
அமலானந்தா் மடத்தில் இவர்கள்
இருவரின் சமாதிகள் உள்ளன.

அருணாசல சித்தர்

29 .12 .1 9 4 6 இல் சமாதி அடைந்தார். அரக்கோணத்தை அடுத்த நெமிலிக்கு அருகில் உள்ள கறியாக் குடல் கிராமத்தில் இவரது சமாதி உள்ளது.

சிவாஜி சுவாமி.

சுப்பையா சுவாமி சித்தர் மடத்தில் இவரது சமாதி இருக்கிறது.

அமிர்தலிங்க சுவாமி

இவருக்கு வழங்கப்படும் வேறு பெயர் புண்ணாக்கு சுவாமி .வேலூருக்கு நடுவில்
நல்லான் பட்டறை என்னும் பகுதியில்
இருக்கும் ரங்கூன் ராமசாமி முதலியார்
திருமணக் கூடத்திற்கு எதிரில் இவரது
சமாதி உள்ளது.

சித்தர்
குப்புசாமி தேசிகர்

வேலூருக்கு மேற்கே 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விரிஞ்சிபுரத்தில் இவரது சமாதி இருக்கிறது. இவரது சமாதி
அருகே இவரின் இரு சீடர்களின்
சமாதிகளும் உள்ளன.

மிளகாய்ச் சித்தர்

காட்பாடி ~குடியாத்தம் சாலையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மயிலாடும்பாறை மலை அடிவாரத்தில் இவரது சமாதி இருக்கிறது.

தேவானந்தா் சுவாமி

வேலூரில் இருந்து காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் தொலைவில் மகாதேவ மலைக்கு செல்லும் பாதை உண்டு.

அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஆட்டோவில் சென்றால் மகாதேவ மலை அடிவாரத்தை அடையலாம் .அங்கே இவரது சமாதி உள்ளது.

மலையம்மா

மகாதேவ மலை அடிவாரத்தில் இவரது சமாதி இருக்கிறது.

நரசிங்க சுவாமி

வேலூரில் உள்ள சலவன் பேட்டை பகுதியில் நரசிங்க மடத்துக்கு தெருவில் இவரது பெயரிலான மடமும் ,இவரது சமாதியும் இருக்கின்றன.

மயிலை சுந்தர் ராம் குருஜி

மந்திரம் யந்திரம் வைத்தியம் இவற்றில் வல்லவர் .திருப்பதி ஏழுமலையான் உபாசகர் .இவர் 11.5 .1999 சித்திரை மாதம் பூரட்டாதியில் சமாதி அடைந்தார்.

வேலூருக்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளிமலை வந்தால், அங்கு இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள “தங்கால் ” கிராமத்தில் இருக்கும் மௌனகுரு சாமி சமாதிக்கு இடதுபுறம் இவரது சமாதி உள்ளது.

திருப்புகழ் சச்சிதானந்த சுவாமி

கோவை மாவட்டம் பவானி அடுத்த பூ நாச்சி புதூர் கிராமத்தில் 25 .11. 1870 இல் பிறந்தார் .சித்திகள் கைவரப்பெற்றவர்.

இவர் பரிபூரண நிலையை அடைந்தார் 23.
11 .1950 கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம்
திரயோதசி திதி அசுவினி நட்சத்திரத்தில் தினத்தன்று .

வேலூர் அருகில் வள்ளி மலை மேல் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று அங்கிருந்து சென்றால் ஆசிரமம் வரும்.
அந்த ஆசிரமத்திற்கு பின்புறம் உள்ள
குகையில் இவரது சமாதி இருக்கிறது.

ஓம் நமச்சிவாய சுவாமி

வேலூரில் இருந்து 25 கிலோமீட்டர் குடியாத்தத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசுமரத்து ஊரின் வடக்கே ஊர் எல்லையில் நமசிவாயன்
கோயில் உள்ள கருவறையில் இவரது
சமாதி இருக்கிறது .இவரது சமாதி மீது
லிங்க மூர்த்தி பிரதிஷ்டை
செய்யப்பட்டிருக்கிறது.

தோபா சுவாமி

இவர் ஒரு அவதூதர் .சித்துக்கள் பல புரிந்தவர் .1850 பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் இவர் சமாதி அடைந்திருக்கிறார். இவரது பெயர் கொண்ட மடமும் ,சமாதியும் வேலூரில்
உள்ள சைதாப்பேட்டையில் மெயின்
பஜாரில் இருபத்தி ஐந்தாம் எண்ணில் உள்ள இல்லத்தில் இருக்கிறது.

சிவானந்த மவுனகுரு சுவாமி

விபூதி ,வில்வ இலை மூலம் மக்களின் துயர் தீர்த்தவா் வேலூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவல்லம் விஸ்வநாதர் கோயிலுக்கு மிகவும் சமீபத்தில் இவரது மடமும்,
சமாதியும் உள்ளன.

சனகர்

இவர் தட்சணாமூர்த்தியின் சீடர்.
வேலூரில் இருந்து 16 கிலோமீட்டர்
தூரத்தில் இருக்கும் திருவல்லம்
விஸ்வநாத ஈஸ்வரனுக்கு நேர் எதிரில்
இவரது சமாதி அமைந்துள்ளது.

புற்றுச் சாமி (யோகீஸ்வரர் )

வேலூர் கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன் அடுத்து காணப்படும் அங்காளபரமேஸ்வரி புற்றுக் கோயிலில் இவரது சமாதி இருக்கிறது.

சன்னியாசி பாறை சுவாமிகள்

போளூருக்கு வடக்கில் வேலூர் செல்லும்
சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள கேளூர் என்னும் ஊருக்கு மேற்கே
உள்ள துாிஞ்சிக் குப்பம் என்னும்
கிராமத்திற்கு மேற்கே உள்ள ஏரிக்குள்
இவரது சமாதி உள்ளது.

குமாரதேவர் சுவாமி

இராணிப்பேட்டை இல் இருந்து 6
கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடி
மல்லூர் பிறந்தார் .

1870இல் மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் உள்ள பாலத்தின் கடைசியில் இவரது சமாதி உள்ளது.

மௌன குரு சுவாமி

ஆற்காட்டில் உள்ள தோப்புக்காணா பகுதியில் 5 .11. ஆயிரத்து 886 இவர் பிறந்தார் . 26.9 1950 இல் ஆவணி மாதம்
அமாவாசை அன்று சமாதி ஆனார்.
இவரது சமாதி ஆற்காட்டில் உள்ள தர்மராஜா கோயில் தெருவில் உள்ளது.

Leave a Comment

error: Content is protected !!