Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-2025ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025- மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025- மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 – மிதுனம்

ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025

புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!!! இதுவரை உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தில் இருந்து வந்த “ராகு பகவான்“, தற்போதைய பெயர்ச்சியின் மூலம் பத்தாம் இடத்திற்கு வருகிறார். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த “கேது பகவான்” நான்காம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்தில் நாவடக்கமும் நற்செயலும் இருந்தால் நல்லவை அதிகரிக்க கூடிய காலகட்டமாக இருக்கும்.

அலுவலகம்

அலுவலகத்தில் உடன் பணி புரிபவரின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். மேலதிகாரிக்கும் உங்களுக்கும் இருந்த மோதல்கள் சரியாகும். இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். அவசியம் இல்லாமல் யாருடைய தனிப்பட்ட விஷயங்களிலும் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. பணத்தை கையாளும் சமயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்பம்

குடும்ப உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். வாரிசுகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த இடைவெளி மறையும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வரும். சிலருக்கு பிரிந்து இருந்த நிலை மாறி சேரும் சந்தர்ப்பம் அமையும். கடன்கள் சுலபமாக அடையும். வாரிசுகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் வரும். சகோதர வழி உறவுகளுடன் சச்சரவு வேண்டாம். பூர்வீக சொத்து விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025

தொழில்

செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகள் வரத் தொடங்கும். பங்கு வர்த்தகத்தில் அனுபவம் இல்லாமல் இறங்க வேண்டாம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து ஆரம்பிப்பது நல்லது. விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.

அரசு -அரசியல்

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் பொறுப்பு, எதிர்பாராத பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் நீங்கள் சுயநலமில்லாமல் செயல்படுவது அவசியம். மேல் இடத்தில் ஆதரவு கிடைக்கும் போது உங்களுக்கு கீழான யாரையும் பழிவாங்க நினைக்க வேண்டாம்.

கலை படைப்பு துறையினருக்கு சங்கட நிலை மாறி புதிய தெம்பும், உற்சாகமும் உற்றெடுக்கும். தீய சகவாசம் தீயாய் சுடும். உடனே விலகிக் கொள்வது நல்லது.

உடல் நிலை -பயணம்

பயணத்தில் கவனச் சிதறல் கூடவே கூடாது. வாகனத்தில் சிறு பழுது இருந்தாலும் உடனே சரி செய்து விடுங்கள்.

உடல் நலத்தில் அலட்சியம் கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை உபாதைகள் உள்ளவர்கள் உரிய சிகிச்சைகளை தவறவிட வேண்டாம். அடி வயிறு, காது, மூக்கு, தொண்டை உபாதைகளை உடனே கவனியுங்கள்.

பரிகாரம்

ஒருமுறை காளஹஸ்தி சென்று சுவாமி அம்பாளை தரிசித்திவிட்டு வாருங்கள்.வாழ்க்கை வசந்தமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!