வனதுர்க்கை அம்மன்
வனதுர்க்கை அம்மன் வரலாறு :
வனதுர்க்கை அம்மன் துர்க்கை அம்மனின் அவதாரம் ஆவார். இக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் கதிராமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
வனதுர்கை அம்மன் சிறப்பு:
வனதுர்க்கை அம்மன் தினமும் இரவு நேரத்தில் காசிக்கு சென்று விட்டு அதிகாலையில் தன் இருப்பிடமான கதிராமங்கலத்தில் திரும்புவாள் என்பது ஐதீகம். மற்ற கோவில்களில் சிம்ம வாகனத்தில் இருக்கும் துர்க்கையம்மன் இக்கோவிலில் பத்ம பீடத்தில் இருந்து பக்தர்களை ஆசீர்வதித்தருளுகிறாள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு பூஜை செய்வதால் ராகு கால துர்க்கை என்றும் அழைக்கப்படுகிறாள்.இராமாயணத்தை எழுதுவதற்கு முன்பு கம்பன் இந்த அம்மனை வணங்கி ஆசி பெற்றார். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வலிமை வணங்கி ஆசீர்வதிப்பவள்.
முற்காலத்தில் தன் சிலையை ஒருவன் அழிக்க நினைத்த பொழுது தனது சக்தியை தனக்கு அருகே இருக்கும் சிறைக்கு மாற்றி புதிய சிலையை உருவாக்கியவள். அசுரர்களை போரில் வெல்ல செய்தவள். அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தவள். தன் பக்தர்களையும் கடினமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றுபவள் என்பது ஐதீகம்.
பரிகாரம்
ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது ஏற்றது. ராகு காலம் என்பது துர்கா தேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம் எனவே ராகு கால வேளையில் நாம் அனைவரும் வழிபடுவது நன்று.( குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில்) துர்க்கையை பெண்கள் ராகுகால வேளையில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கும்.
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோவிலில் பரிகாரம் செய்வது நல்லது.
வனதுர்கை அம்மன் வழித்தடம்
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் கதிராமங்கலம் உள்ளது மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் உள்ளன