குடமுருட்டி சீத்தலா தேவி அம்மன்
வரலாறு:
கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் குடமுருட்டி சீத்தலா தேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
சிறப்பு:
சீதலை என்றால் குளிர்விப்பவள் என்று பொருள். அம்மை நோயை குணப்படுத்துவதில் இந்த அம்மன் பெயர் பெற்றவள்.
ஜீவ சுரா- ஜீவ நோயுடன் தொடர்புடைய அரக்கன்
ஓல தேவி-கெட்ட நீர், கேட்ட உணவால் உண்டாகும் நோயுடன் தொடர்புடையவள்.
கெந்துபேடா-தோல் நோயுடன் தொடர்புடையவள்
ரத்தபதி-ரத்த வியாதியுடன் தொடர்புடையவள்.
மற்றும் 64 தொற்று நோயை அழிக்கும் சக்தி அனைத்தும் சீத்தலா தேவியுடனிருக்கும் சக்திகள், தேவியின் கரங்களில் கிருமிகளை விரட்ட துடைப்பம், நோய் பரப்பும் கிருமிகளை அடக்க ஒரு பானை அல்லது குளிர்ந்த நீர் இருப்பதை காணலாம். வேப்பிலையை பயன்படுத்தி நோயால் பாதிக்கப்பட்ட தனது பக்தர்களை குளிரவைப்பவள்,சீத்தலா தேவி.
பரிகாரம்:
மேற்கூறிய நோயால் துன்புறும் பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று முறைப்படி இவ்வம்மனை வழிபட்டால் நோய்கள் அனைத்தும் தீரும்.
வழித்தடம்:
கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. கேரளாவின் அனைத்து புறநகர் பகுதிகளில் இருந்தும், பத்தினம்திட்டாவுக்கு பேருந்துகள் வந்து செல்கின்றன.